கேள்வி
சர்வஞானி என்பதன் அர்த்தம் என்ன?
பதில்
சர்வஞானி என்பது "மொத்த அறிவைக் கொண்ட நிலை, எல்லாவற்றையும் அறியும் தரம்" என வரையறுக்கப்படுகிறது. காணக்கூடிய அல்லது கண்ணுக்கு தெரியாத அனைத்து பொருட்களின் சிருஷ்டிப்பின் மீது தேவன் சர்வ ஆளுமையுள்ளவராக இருக்க, அவர் அனைத்தையும் அறிந்தவராக இருக்க வேண்டும். அவருடைய சர்வஞானம் தேவனில் உள்ள எந்த ஒரு நபருக்கும் மட்டுப்படுத்தப்படவில்லை - பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் ஆகியோர் இயற்கையில் சர்வஞானி (எல்லாம் அறிந்தவர்கள்).
தேவனுக்கு எல்லாம் தெரியும் (1 யோவான் 3:20). நம் வாழ்வின் மிகச்சிறிய விவரங்களை மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் அவர் அறிவார், ஏனென்றால் அவர் ஒரு அடைக்கலான் குருவி எப்போது விழும் அல்லது நாம் நம்முடைய தலையில் ஒரு முடியை இழக்கும்போது கூட அவருக்கு தெரியும் என்று குறிப்பிடுகிறார் (மத்தேயு 10:29-30). வரலாற்றின் இறுதி வரை நடக்கும் அனைத்தையும் தேவன் அறிவார் என்பது மட்டுமல்ல (ஏசாயா 46:9-10), நாம் பேசுவதற்கு முன்பே அவர் நம் எண்ணங்களையும் அறிவார் (சங்கீதம் 139:4). அவர் நம் இதயங்களை தூரத்திலிருந்து அறிவார்; அவர் நம்மை நம்முடைய தாயின் கருப்பையில் உருவாகும்போது கூட பார்த்தார் (சங்கீதம் 139:1-3; 15-16). சாலமோன் இந்த உண்மையை மிகச் சரியாக வெளிப்படுத்துகிறார், "தேவரீர் ஒருவரே எல்லா மனுபுத்திரரின் இருதயத்தையும் அறிந்தவராதலால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே" (1 இராஜாக்கள் 8:39).
தேவனுடைய குமாரன் தேவனாக இருந்தவர் தம்மைத்தாமே வெறுமையாக்கி, தன்னை ஒன்றும் இல்லாமல் வேருமையாக்கினாலும் (பிலிப்பியர் 2:7), அவரது சர்வஞானம் புதிய ஏற்பாட்டின் எழுத்துக்களில் தெளிவாகக் காணப்படுகிறது. அப்போஸ்தலர்களின் முதல் ஜெபத்தில் அப்போஸ்தலர் 1:24, "எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே" என்னும் கூற்று, இயேசுவின் சர்வஞானத்தை குறிக்கிறது, அவர் ஜெபங்களைப் ஏற்று தேவனுடைய வலது பாரிசத்தில் அமர்ந்து பரிந்து பேசுவதற்கு அது அவசியம் ஆகும். பூமியில், இயேசுவின் சர்வஞானம் தெளிவாக உள்ளது. நற்செய்தி நூல்களின் பல பதிவுகளில், அவர் தமது பார்வையாளர்களின் எண்ணங்களை அறிந்திருந்தார் என்பது தெளிவாகிறது(மத்தேயு 9:4, 12:25; மாற்கு 2:6-8; லூக்கா 6:8). அவர் அவர்களை சந்திப்பதற்கு முன்பே மக்களின் வாழ்க்கையைப் பற்றி அறிந்திருந்தார் என்பதைக் காண்கிறோம். சமாரியாவிலுள்ள சீகார் என்னப்பட்ட ஊரில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக வந்த பெண்ணை அவர் சந்தித்தபோது, அவர் அவளிடம் இப்படியாக கூறினார், "ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல" (ஜான் 4:18). அவர் லாசருவின் வீட்டிலிருந்து 25 மைல்களுக்கு அப்பால் இருந்தபோதிலும், அவரது சிநேகிதன் லாசரு மரித்துவிட்டான் என்று அவர் தனது சீடர்களிடம் கூறுகிறார் (யோவான் 11:11-15). கர்த்தருடைய பந்தியை ஆயத்தப்படுத்துவதற்கு, சென்று தயார் செய்யுமாறு அவர் சீடர்களுக்கு அறிவுறுத்தினார், அப்போது அவர்கள் சந்திக்க வேண்டிய மற்றும் பின்பற்ற வேண்டிய நபரை முன்பாகவே விவரித்தார் (மாற்கு 14:13-15). எல்லாவற்றிற்கும் மேலாக, நாத்தான்வேலை அவர் சந்திப்பதற்கு முன்பு அவர் அவனை அறிந்திருந்தார், ஏனென்றால் அவர் அவருடைய இதயத்தை அறிந்திருந்தார் என்று காண்கிறோம் (யோவான் 1:47-48).
தெளிவாக, பூமியில் இயேசுவின் சர்வ ஞானத்தை நாம் காண்கிறோம், ஆனால் இங்கேதான் இந்த முரண்பாடும் தொடங்குகிறது. அதாவது இயேசு அநேக வேளைகளில் கேள்விகளைக் கேட்கிறார், இது அவருக்கு அந்தக் கேள்விகளைக் குறித்த அறிவு இல்லாததைக் குறிக்கிறது, இருப்பினும் தேவன் அவைகளை தமக்காக அல்ல மாறாக பிற பார்வையாளர்களின் நலனுக்காகவே அந்தக் கேள்விகளைக் கேட்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அவருடைய சர்வஞானம் தொடர்பான மற்றொரு அம்சம் மனிதத் தன்மையின் வரம்புகளிலிருந்து வருகிறது, அதாவது அவர் தம்மை தேவனுடைய குமாரானாக கருதினார். ஒரு மனிதனாக அவர் "ஞானத்திலும் வளர்த்தியிலும் வளர்ந்தார்" (லூக்கா 2:52) மற்றும் அவர் "உபத்திரவத்தின் மூலம் கீழ்ப்படிதலைக்" கற்றுக்கொண்டார் (எபிரெயர் 5:8). உலகம் எப்போது முடிவுக்கு வரும் என்று அவருக்குத் தெரியாது என்பதையும் நாம் வாசிக்கிறோம் (மத்தேயு 24:34-36). ஆகையால், நாம் கேட்க வேண்டும், மற்ற அனைத்தும் அவருக்குத் தெரிந்திருந்தால், பிறகு ஏன் குமாரனுக்கு இது தெரியாது? இதை ஒரு மனித வரம்பாகக் கருதுவதற்குப் பதிலாக, அறிவின் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட குறையாக நாம் கருத வேண்டும். இது நம் தன்மையில் (பிலிப்பியர் 2:6-11; எபிரெயர் 2:17) முழுமையாகப் பங்கிடுவதற்கும், இரண்டாவது ஆதாமாக இருப்பதற்கும் தாழ்மையுள்ள ஒரு சுய-விருப்பமான செயலாகும்.
இறுதியாக, ஒரு சர்வவல்லமையுள்ள தேவனுக்கு மிகவும் கடினமாக எதுவும் இல்லை, அத்தகைய தேவனின் மீதான நமது நம்பிக்கையின் அடிப்படையில்தான், நாம் அவரிடம் தொடர்ந்து இருக்கும் வரை அவர் நம்மை ஒருபோதும் தோல்வியடையச் செய்ய மாட்டார் என்று உறுதியளித்து, நாம் அவரிடம் பாதுகாப்பாக இருக்க முடியும். சிருஷ்டிப்பிற்கு முன்பே அவர் நம்மை நித்தியத்திலிருந்து அறிந்திருக்கிறார். தேவன் உங்களையும் என்னையும் அறிந்திருந்தார், காலப்போக்கில் நாம் எங்கு தோன்றுவோம், யாருடன் தொடர்புகொள்வோம். அவர் நம் பாவத்தை அதன் அசிங்கம் மற்றும் சீரழிவைக் கூட முன்னறிவித்தார், ஆனாலும், அன்பில், அவர் நம்மீது முத்திரையிட்டு, இயேசு கிறிஸ்துவின் அன்பிற்கு நம்மை ஈர்த்தார் (எபேசியர் 1:3-6). நாம் அவரை நேருக்கு நேர் பார்ப்போம், ஆனால் அவரைப் பற்றிய நமது அறிவு முழுமையாக இருக்காது. நம்முடைய அதிசயமும், அன்பும், புகழும் எல்லா ஆயிரக்கணக்கான வருடங்களுக்கும் தொடரும், நாம் அவருடைய பரலோக அன்பின் கதிர்களில் மூழ்கி, நமது சர்வஞானியான தேவனை மென்மேலும் அறிந்து அவரைப் போற்றுகிறோம்.
English
சர்வஞானி என்பதன் அர்த்தம் என்ன?