கேள்வி
வேதாகமம் ஏன் பரிசுத்த வேதாகமம் என்று அழைக்கப்படுகிறது?
பதில்
பிப்லியா சேக்ரா ("பரிசுத்த புத்தகங்கள்") என்ற சொற்றொடர் முதலில் இடைக்காலத்தில் தோன்றியது. ஆங்கிலத்தில், “தி ஹோலி பைபிள்” இன் ஆரம்பகால பயன்பாடுகளில் ஒன்று, அமெரிக்காவில் கிங் ஜேம்ஸ் பதிப்பு என அழைக்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட பதிப்பின் அட்டைப்படத்தில் 1611 இல் தோன்றியது. பரிசுத்த என்னும் வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உள்ளன, மேலும், நாம் பார்ப்பது போல், அவை அனைத்தும் தேவனுடைய வார்த்தையை விவரிக்கின்றன.
பரிசுத்தத்தின் ஒரு அர்த்தம் "தூய்மையானது, பரிசுத்தமாக்கப்பட்டது, புனிதமானது". எரியும் முட்புதரில் இருந்து தேவன் மோசேயிடம் பேசியபோது, அவர் தேவனுடைய பிரசன்னத்தால் பரிசுத்தமான "பரிசுத்த நிலத்தில்" நின்றதால், அவருடைய காலணியை அகற்றும்படி கட்டளையிடப்பட்டார். தேவன் புனிதமானவர் என்பதால், அவர் பேசும் வார்த்தைகளும் பரிசுத்தமானவை. அதேபோல், சீனாய் மலையில் மோசேக்கு தேவன் கொடுத்த வார்த்தைகளும் பரிசுத்தமானது, வேதாகமத்தில் தேவன் மனிதகுலத்திற்கு அளித்த அனைத்து வார்த்தைகளும் பரிசுத்தமானவை. தேவன் பரிபூரணமானவர் என்பதால், அவருடைய வார்த்தைகள் பரிபூரணமானவை (சங்கீதம் 19:7). தேவன் நீதியுள்ளவராகவும் தூய்மையானவராகவும் இருப்பதால், அவருடைய வார்த்தையும் அப்படியே இருக்கிறது (சங்கீதம் 19:8).
வேதாகமம் பரிசுத்தமானது, ஏனென்றால் அது பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதல் மற்றும் செல்வாக்கின் கீழ் மனிதர்களால் எழுதப்பட்டது. "வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது" (2 தீமோத்தேயு 3:16). "தேவனுடைய-சுவாசம்" என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வார்த்தை தியோப்நியூஸ்டோஸ் ஆகும், இந்த தியோஸ் என்பதிலிருந்து "தேவன்" என்ற பொருளையும் மற்றும் நியூயோ என்னும் சொல்லில் இருந்து "சுவாசிக்க அல்லது சுவாசத்தின் மேல்" என்னும் பொருளைப் பெறுகிறோம். இந்த கிரேக்க மூலத்திலிருந்து நியூமோனியா என்ற ஆங்கில வார்த்தையைப் பெறுகிறோம். எனவே, நமது பரிசுத்த தேவன், பரிசுத்த ஆவியானவரின் நபராக, வேதத்தின் பரிசுத்த வார்த்தைகளை வேதாகமத்தின் ஒவ்வொரு புத்தகத்தின் எழுத்தாளர்களிலும் சுவாசத்தை விட்டார். தெய்வீக எழுத்தாளர் பரிசுத்தமானவர்; எனவே, அவர் எழுதுவது பரிசுத்தமானது.
புனிதத்தின் மற்றொரு அர்த்தம் "வேறுபடுத்தி வைப்பது". தேவன் சமகாலத்தவர்களிடமிருந்து தமது ஜனமாகிய இஸ்ரவேல் தேசத்தை "ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள்" என்று அமைத்தார் (யாத்திராகமம் 19:6). அதேபோல், கிறிஸ்தவர்கள் பேதுருவால் விவரிக்கப்பட்டுள்ளபடி, இருளில் நடக்கும் அவிசுவாசிகளிடமிருந்து வேறு பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்கள்: "நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.” பரிசுத்தத்தின் இந்த "வேறுபடுத்தப்பட்ட" அம்சம் வேதாகமத்தின் உண்மை, ஏனென்றால் இது மற்ற அனைத்திலிருந்தும் வேறுபடுத்தப்பட்ட புத்தகம் ஆகும். இது தேவனால் எழுதப்பட்ட ஒரே புத்தகம், மற்றும் மனிதர்களை விடுவிக்கும் வல்லமை கொண்ட ஒரே புத்தகம் (யோவான் 8:32), அவர்களின் வாழ்க்கையை மாற்றி அவர்களை ஞானிகளாக்குவது (சங்கீதம் 19:7), அவர்களை பரிசுத்தப்படுத்தி அவர்களை பரிசுத்தமாக்குவதற்கு ஆகும் (யோவான் 17:17). இது ஜீவன், ஆறுதல் மற்றும் நம்பிக்கையைத் தரும் ஒரே புத்தகம் (சங்கீதம் 119:50), மற்றும் இது என்றென்றுமாய் நிலைத்திருக்கும் ஒரே புத்தகம் ஆகும் (மத்தேயு 5:18).
English
வேதாகமம் ஏன் பரிசுத்த வேதாகமம் என்று அழைக்கப்படுகிறது?