கேள்வி
பரிசுத்த ஆவியானவர் எப்படி அக்கினியைப் போன்றவர் ஆவார்?
பதில்
வேதாகமம் தேவனை "பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே" என்று விவரிக்கிறது (எபிரெயர் 12:29), எனவே அக்கினி பெரும்பாலும் தேவனுடைய இருப்பின் அடையாளமாக தோன்றுவதில் ஆச்சரியமில்லை. எரியும் முட்புதர் (யாத்திராகமம் 3:2), ஷெக்கினா மகிமை (யாத்திராகமம் 14:19; எண்ணாகமம் 9:14-15), மற்றும் எசேக்கியேலின் தரிசனம் (எசேக்கியேல் 1:4) ஆகியவை உதாரணங்களாகும். அக்கினி பல முறை தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கருவியாக இருந்தது (எண்கள் 11:1, 3; 2 இராஜாக்கள் 1:10, 12) மற்றும் அவரது வல்லமையின் அடையாளம் (நியாயாதிபதிகள் 13:20; 1 ராஜாக்கள் 18:38) ஆகும்.
வெளிப்படையான காரணங்களுக்காக, பழைய ஏற்பாட்டு பலிகளுக்கு அக்கினி முக்கியமானது ஆகும். சர்வாங்க தகன பலிபீடத்தின் மீதுள்ள அக்கினி தெய்வீக ஈவாக இருந்தது, முதலில் தேவனாலேயே ஏற்றி வைக்கப்பட்டது (லேவியராகமம் 9:24). தேவன் பலிபீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; அது ஒருபொழுதும் அவிந்துபோகலாகாது என்று ஆசாரியர்களுக்கு கட்டளையிட்டார் (லேவியராகமம் 6:13) மற்றும் வேறு எந்த மூலத்திலிருந்தும் அந்நிய அக்கினியை ஏற்றுக்கொள்ள கூடாது என்பதை தெளிவுபடுத்தினார் (லேவியராகமம் 10:1-2).
புதிய ஏற்பாட்டில், பலிபீடம் கர்த்தருக்கான நமது அர்ப்பணிப்பின் ஒரு சித்திரமாக அமையும். இயேசு கிறிஸ்துவின் விசுவாசிகளாகிய நாம், நம் சரீரங்களை தெய்வீக வரத்தால் மூழ்கடிக்கப்பட்ட "ஜீவ பலிகளாக" (ரோமர் 12:1) ஒப்புக்கொடுக்கவேண்டும் என்று அழைக்கப்படுகிறோம்: பரிசுத்த ஆவியின் அவியாத அக்கினி. புதிய ஏற்பாட்டின் ஆரம்பத்திலேயே, பரிசுத்த ஆவியானவர் அக்கினியுடன் தொடர்புடையவராக குறிப்பிடப்படுகிறார். யோவான் ஸ்நானன், "அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்" (மத்தேயு 3:11) என்று இயேசுவைக் குறித்துக் கூறுகிறார். ஆரம்பகால சபையில் பரிசுத்த ஆவியானவர் தனது ஊழியத்தைத் தொடங்கியபோது, அவர் ஒவ்வொரு விசுவாசிகளின் மீதும் "அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகளாகக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமரும்படி" தேர்ந்தெடுத்தார். அந்த நேரத்தில், "அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்" (அப் 2:3-4).
அக்கினி பரிசுத்த ஆவியின் கிரியையின் அற்புதமான சித்திரம். ஆவியானவர் குறைந்தது மூன்று வழிகளில் அக்கினியைப் போன்றவர்: அவர் தேவனுடைய சமுகம், தேவனுடைய பேரார்வம் மற்றும் தேவனுடைய பரிசுத்தம் ஆகியவற்றைக் கொண்டுவருகிறார். பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய சமுகம், ஏனெனில் அவர் விசுவாசியின் இருதயத்தில் வசிக்கிறார் (ரோமர் 8:9). பழைய ஏற்பாட்டில், தேவன் ஆசரிப்புக்கூடாரத்தை அக்கினியால் பரப்பி இஸ்ரவேலர்களுக்கு தனது இருப்பைக் காட்டினார் (எண்ணாகமம் 9:14-15). இந்த உக்கிரமான இருப்பு வெளிச்சம் மற்றும் வழிகாட்டுதலை வழங்கியது (எண்ணாகமம் 9:17-23). புதிய ஏற்பாட்டில், தேவன் தனது பிள்ளைகளை பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தி ஆறுதல்படுத்துகிறார் – நமது சரீரங்களே அவர் வசிக்கும் "கூடாரம்" மற்றும் "ஜீவனுள்ள தேவனுடைய ஆலயம்" (2 கொரிந்தியர் 5:1; 6:16).
பரிசுத்த ஆவியானவர் நம் இருதயங்களில் தேவனுடைய பேரார்வத்தை உருவாக்குகிறார். உயிர்த்தெழுந்த இயேசுவோடு பயணிக்கும் இரண்டு சீடர்கள் பேசிய பிறகு, அவர்கள் “நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா" என்று விவரிக்கிறார்கள் (லூக் 24:32). அப்போஸ்தலர்கள் பெந்தெகொஸ்தே நாளில் ஆவியானவரைப் பெற்ற பிறகு, அவர்கள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் மற்றும் தேவனுடைய வார்த்தையை தைரியமாகப் பேசத் தூண்டுகிற ஒரு பேரார்வத்தைக் கொண்டவர்கள் ஆனார்கள் (அப். 4:31).
பரிசுத்த ஆவியானவர் நம் வாழ்வில் தேவனுடைய பரிசுத்தத்தை உருவாக்குகிறார். தேவனுடைய நோக்கம் நம்மை சுத்திகரிப்பதாகும் (தீத்து 2:14), மற்றும் ஆவியானவர் நம் பரிசுத்தமாக்கலின் காரணியாக இருக்கிறார் (1 கொரிந்தியர் 6:11; 2 தெசலோனிக்கேயர் 2:13; 1 பேதுரு 1:2). விலைமதிப்பற்ற உலோகத்திலிருந்து அழுக்கை அகற்ற வெள்ளித் தொழிலாளி அக்கினியைப் பயன்படுத்துவது போல, தேவன் நம் பாவத்தை நம்மிடமிருந்து அகற்ற ஆவியானவரைப் பயன்படுத்துகிறார் (சங்கீதம் 66:10; நீதிமொழிகள் 17:3). அவருடைய அக்கினி புடமிடுகிறது மற்றும் சுத்திகரிக்கிறது.
English
பரிசுத்த ஆவியானவர் எப்படி அக்கினியைப் போன்றவர் ஆவார்?