கேள்வி
பரிசுத்த ஆவியானவர் 'அவரா,' 'அவளா' அல்லது 'அதுவா,' ஆண்பாலா, பெண்பாலா அல்லது பலவின்பாலா?
பதில்
பரிசுத்த ஆவியானவரைக் குறித்து ஒரு பொதுவான தவறு ஆவியானவரைக் குறிப்பிடுவது "அது" என்பதாகும், வேதாகமம் ஒருபோதும் செய்யாத ஒன்று இது. பரிசுத்த ஆவியானவர் ஒரு நபர். அவர் ஆளுமை பண்புகளைக் கொண்டிருக்கிறார், நபர்களின் செயல்களைச் செய்கிறார், தனிப்பட்ட உறவுகளைக் கொண்டிருக்கிறார். அவருக்கு நுண்ணறிவு உள்ளது (1 கொரிந்தியர் 2:10-11). அவருக்கு புத்திசாலித்தனம் தேவைப்படும் விஷயங்கள் தெரியும் (ரோமர் 8:27). அவருக்கு விருப்பம் உள்ளது (1 கொரிந்தியர் 12:11). அவர் பாவத்தினைக் கண்டித்து உரைக்கிறார் (யோவான் 16:8). அவர் அற்புதங்களைச் செய்கிறார் (அப். 8:39). அவர் வழிநடத்துகிறார் (யோவான் 16:13). அவர் நபர்களிடையே பரிந்து பேசுகிறார் (ரோமர் 8:26). அவருக்கு கீழ்ப்படியப்படுகிறது (அப்போஸ்தலர் 10:19-20). அவருக்கு எதிராக பொய் சொல்லலாம் (அப்போஸ்தலர் 5:3), அவரை எதிர்க்கலாம் (அப்போஸ்தலர் 7:51), அவர் துக்கப்படுகிறார் (எபேசியர் 4:30), எதிராக தேவதூஷணம் சொல்லப்படுகிறது (மத்தேயு 12:31), அவர் நிந்திக்கப்படலாம் (எபிரேயர் 10:29). அவர் அப்போஸ்தலர்களுடன் (அப். 15:28) மற்றும் திரித்துவத்தின் ஒவ்வொரு உறுப்பினருடனும் தொடர்புடையவர் ஆவார்(யோவான் 16:14; மத்தேயு 28:19; 2 கொரிந்தியர் 13:14). பரிசுத்த ஆவியானவரின் ஆள்த்தன்மை வேதாகமத்தில் எவ்வித கேள்வியும் இல்லாமல் வழங்கப்படுகிறது, ஆனால் பாலினம் பற்றி என்ன?
மொழியியல் ரீதியாக, தெய்வீக இறையியல் சொற்கள் வேதத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது தெளிவாகிறது. இரண்டு ஏற்பாடுகளிலும், தேவனைப் பற்றிய குறிப்புகள் ஆண் பிரதிபெயர்களையேப் பயன்படுத்துகின்றன. தேவனுடைய குறிப்பிட்ட பெயர்கள் (எ.கா., யேகோவா, ஏலோஹிம், அடோனாய், குரியோஸ், தெயோஸ், முதலியன) அனைத்தும் ஆண் பாலினத்தில் உள்ளன. தேவனுக்கு ஒருபோதும் பெண்பால் பெயர் கொடுக்கப்படவில்லை, அல்லது பெண் பிரதிபெயர்களைப் பயன்படுத்துவதாக வேதாகமத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. பரிசுத்த ஆவியானவர் புதிய ஏற்பாடு முழுவதும் ஆண்பாலிலேயே குறிப்பிடப்படுகிறார், இருப்பினும் "ஆவி" என்ற வார்த்தையின் (நியூமா) பாலினம் பொதுவாக பலவின்பாலாக வருகிறது. ஆதியாகமம் 1:2 இல் "ஆவி" (ரூவா) என்பதற்கான எபிரேய வார்த்தை பெண்பால் ஆகும். ஆனால் கிரேக்க அல்லது எபிரேய மொழியில் ஒரு வார்த்தையின் பாலினமானது அந்த சொல்லின் பாலின அடையாளத்துடன் எந்த தொடர்பும் இல்லை.
இறையியல் ரீதியாகப் பார்த்தால், பரிசுத்த ஆவியானவர் தேவன் என்பதால், தேவனைப் பற்றிய பொதுவான கூற்றுகளிலிருந்து நாம் அவரைப் பற்றி சில கூற்றுகளைக் கூறலாம். தேவன் உடல் அல்லது பொருளுக்கு மாறாக ஆவியாக இருக்கிறார். தேவன் கண்ணுக்கு புலப்படாதவர் மற்றும் ஆவியானவர் (அதாவது சரீரம் அல்லாதவர்) - (யோவான் 4:24; லூக் 24:39; ரோமர் 1:20; கொலோசெயர் 1:15; 1 தீமோத்தேயு 1:17). இதனால்தான் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த எந்தப் பொருளும் பயன்படுத்தப்பட முடியாது (யாத்திராகமம் 20:4). பாலினம் சரீரத்தின் பண்பு என்றால், ஆவிக்கு பாலினம் இல்லை. தேவன், அவரது சாராம்சத்தில், பாலினம் இல்லாதவர்.
வேதாகமத்தில் தேவனுடைய பாலின அடையாளங்கள் ஒருமனதாக இல்லை. வேதாகமம் தேவனை பிரத்தியேகமாக ஆண்பால் சொற்களில் வழங்குகிறது என்று பலர் நினைக்கிறார்கள், ஆனால் இது அப்படி இல்லை. தேவன் யோபுவின் புத்தகத்தில் பெற்றெடுப்பதாகக் கூறப்படுகிறது மற்றும் ஏசாயாவில் தன்னை ஒரு தாயாக சித்தரிக்கிறார். லூக்கா 15 இல் இயேசு காணாமல் போன நாணயத்தைத் தேடும் ஒரு பெண்ணைப் போல் பிதாவை விவரித்தார் (மேலும் அவர் மத்தேயு 23:37 இல் "தாய் கோழி" என சித்தரிக்கிறார்). ஆதியாகமம் 1:26-27 இல் தேவன் கூறினார், "நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக," பின்னர் "தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்" இவ்வாறு, தேவனுடைய உருவம் ஆண் மற்றும் பெண் அல்லது வெறுமனே ஒன்று அல்லது மற்றொன்று அல்ல என்பதல்ல. இது ஆதியாகமம் 5:2 இல் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, "அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் என்று பேரிட்டார்." எபிரேய வார்த்தையான "ஆதாம்" என்பதற்கு "மனுஷன்" என்று பொருள் - "ஆண்" (பெண்ணுக்கு மாறாக) அல்லது "மனிதகுலம்" (கூட்டு அர்த்தத்தில்) என்பதன் அர்த்தத்தைக் காட்டும் சந்தர்ப்பம் அல்லது பின்னணி முக்கியம். எனவே, தேவனுடைய உருவத்தில் எந்த அளவிற்கு மனிதத்தன்மை உருவாக்கப்படுகிறதோ, பாலினம் ஒரு பிரச்சினை அல்ல.
இருப்பினும், வெளிப்பாட்டில் உள்ள ஆண்பால் உருவகங்கள் முக்கியத்துவம் இல்லாமல் இல்லை. யோவான் 14-இல் சீடர்களுக்கு பிதாவைக் காண்பிக்கும்ம்படி இயேசுவிடம் கேட்டபோது, ஒரு சரீர உருவத்தின் மூலம் பிதாவாகிய தேவன் குறிப்பாக வெளிப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. அதற்கு இயேசு 9வது வசனத்தில், “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?” என்று பதிலளித்தார். கொலோசெயர் 1:15 இல் இயேசுவே "அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும்" என்று அழைக்கும் தேவனுடைய சரியான உருவம் என்பதை பவுல் தெளிவுபடுத்துகிறார். இந்த வசனம் சகல சிருஷ்டிப்புகளிலும் கிறிஸ்துவின் மேன்மையை நிரூபிக்கும் பிரிவில் அமைந்துள்ளது. பெரும்பாலான பண்டைய மதங்கள் ஆண் மற்றும் பெண்பாலில் உள்ள தேவர்களை நம்பின – அவைகள் ஆராதனைக்குத் தகுதியானவை என நம்பின. ஆனால் யூத-கிறிஸ்தவத்தின் தனித்துவமான ஒன்று என்னவென்றால், தேவன் ஒரு உன்னதமான சிருஷ்டிகர் மீதான நம்பிக்கை ஆகும். ஒரு ஆண் ஒரு பெண்ணை கர்ப்பமாக ஆக்குவதற்கு இல்லாமல் அவளுக்குள் வருவது போல, தேவன் பிரபஞ்சத்தை உள்ளிருந்து பிறப்பிப்பதை விட வெளியில் இருந்து படைக்கிறார் ... ஒரு பெண் தன்னைத்தானே கர்ப்பமாக்கிக் கொள்ள முடியாது, எனவே பிரபஞ்சமும் தன்னைத்தானே உருவாக்கிக் கொள்ள முடியாது. பவுல் இந்த கருத்தை 1 தீமோத்தேயு 2:12-14 இல் பிரதிபலிக்கிறார். சபை ஒழுங்கிற்கான ஒரு மாதிரியாக சிருஷ்டிப்பின் கிரமத்தைக் குறிப்பிடுகிறார்.
இறுதியில், நமது இறையியல் விளக்கம் எதுவாக இருந்தாலும், தேவன் தன்னைப் பற்றி குறிப்பிடுவதற்கு பிரத்தியேகமாக ஆண்பால் சொற்களையும், உருவகத்திலும் கூட ஆண்பால் சொற்களையேப் பயன்படுத்தினார் என்பது தெளிவான உண்மை. வேதாகமத்தின் மூலம் அவரைப் பற்றி எப்படி பேசுவது என்று அவர் நமக்குக் கற்றுக் கொடுத்தார், அது ஆண்பால் சார்ந்த சொற்களில் இருந்தது. எனவே, பரிசுத்த ஆவியானவர் அவருடைய சாராம்சத்தில் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இல்லை என்றாலும், சிருஷ்டிப்பு மற்றும் வேதாகம வெளிப்பாட்டிற்கான அவரது உறவின் காரணமாக அவர் ஆண்பாலில் சரியாக குறிப்பிடப்படுகிறார். பரிசுத்த ஆவியானவரை திரித்துவத்தின் "பெண்" உறுப்பினராக பார்ப்பதற்கு வேதாகம அடிப்படைகள் எதுவும் இல்லை.
English
பரிசுத்த ஆவியானவர் 'அவரா,' 'அவளா' அல்லது 'அதுவா,' ஆண்பாலா, பெண்பாலா அல்லது பலவின்பாலா?