settings icon
share icon
கேள்வி

இஸ்லாமிய அந்திக்கிறிஸ்துவா? அந்திக்கிறிஸ்து ஒரு முஸ்லிமாக இருப்பாரா?

பதில்


சமீபத்திய ஆண்டுகளில் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் குறிப்பாக பன்னிரண்டாம் இமாம் குறித்து ஷியா முஸ்லிம் தீவிரவாதிகள் வெளியிட்ட அறிக்கைகள், வேதாகம தீர்க்கதரிசனங்களுடன் இது எவ்வாறு தொடர்புடையது என்று பலர் கேட்கத் தொடங்கியுள்ளனர். பதிலுக்கு, நாம் முதலில் பன்னிரண்டாவது இமாம் யார், அவர் இஸ்லாமிற்காக என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவதாக, அந்த நம்பிக்கைகள் தொடர்பாக ஷியா முஸ்லீம்களின் அறிக்கைகளை நாம் ஆராய வேண்டும், மூன்றாவதாக, முழு பிரச்சினையையும் வேதாகம வெளிச்சத்தில் பார்க்க வேண்டும்.

இஸ்லாமின் ஷியா பிரிவுக்குள், அல்லாஹுவால் நியமிக்கப்பட்ட பன்னிரண்டு இமாம்கள் அல்லது ஆவிக்குரியத் தலைவர்கள் இருந்தனர். இவை முஹம்மதுவின் உறவினரான இமாம் அலியுடன் தொடங்கியது, அவர் முஹம்மதுவின் மரணத்திற்குப் பிறகு தீர்க்கதரிசனம் உரைக்கும் வாரிசாக இருப்பதாகக் கோரினார். கி.பி. 868 இல், பன்னிரண்டாவது இமாம், அபு அல்-காசிம் முஹம்மது (அல்லது முஹம்மது அல் மஹ்தி), பதினோராவது இமாமுக்கு பிறந்தார். அவரது தந்தை கடுமையான உபத்திரவத்திற்கு உள்ளானதால், மஹ்தி அவரது பாதுகாப்புக்காக தலைமறைவாக இருகும்படி அனுப்பப்பட்டார். சுமார் 6 வயதில், அவரது தந்தை கொல்லப்பட்டபோது அவர் தன் மறைவிலிருந்து சிறிதாக வெளியே வந்தார், ஆனால் பின்னர் மீண்டும் தலைமறைவானார். அப்போதிருந்து அவர் குகைகளுக்குள் ஒளிந்து கொண்டிருந்தார் மற்றும் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன்னதாக இயற்கைக்கு மாறான முறையில் அதிசயமாக அனைத்து கொடுங்கோன்மை மற்றும் ஒடுக்குமுறைகளை ஒழித்து, பூமிக்கு நல்லிணக்கத்தையும் அமைதியையும் கொண்டு வருவார் என்று கூறப்படுகிறது. அவர் ஷியாத் இறையியலில் உலகின் இரட்சகர் ஆவார். ஒரு எழுத்தாளரின் கூற்றுப்படி, மஹ்தி மோசேயின் கௌரவம், இயேசுவின் கிருபை, மற்றும் யோபுவின் பொறுமை ஆகியவற்றை ஒன்றுசேர்ந்த ஒரு சரியான நபராக இருக்கிறார்.

பன்னிரண்டாவது இமாமைப் பற்றிய முன்னறிவிப்புகள் கடைசிக்கால வேதாகமத் தீர்க்கதரிசனங்களுடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டுள்ளன. இஸ்லாமிய தீர்க்கதரிசனத்தின்படி, மஹ்தியின் வருகைக்கு முன்பதாக மூன்று வருட பயங்கரமான உலக குழப்பத்தின் போது பல நிகழ்வுகள் சம்பவிக்கும், மேலும் அவர் அரேபியர்களையும் உலகத்தையும் ஏழு ஆண்டுகள் ஆட்சி செய்வார். அவரது தோற்றம் இரண்டு உயிர்த்தெழுதல்களுடன் வரும், அதில் ஒன்று துன்மார்க்கன் மற்றும் நீதிமான். ஷியா கோட்பாடுகளின்படி, மஹ்தியின் தலைமை இயேசுவால் ஏற்றுக்கொள்ளப்படும், மேலும் ஆபிரகாமின் குடும்பத்தின் இரண்டு பெரிய கிளைகள் என்றென்றும் ஒன்றாக ஒன்றிணைக்கப்படும்.

ஈரானின் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் போன்ற ஷியா முஸ்லீம்களின் அறிக்கைகள் எப்படி இதில் இணைகின்றன? அஹ்மதிநெஜாத் ஆழ்ந்த அர்ப்பணிப்புள்ள ஷியா மற்றும் வரவிருக்கும் மஹ்திக்கு உலகத்தை தனிப்பட்ட முறையில் தயார் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். உலகம் காப்பாற்றப்பட வேண்டுமானால், அது குழப்பம் மற்றும் அடிபணிந்த நிலையில் இருக்க வேண்டும், மேலும் அதற்கு வழி வகுக்க அல்லாஹுவினால் தான் வழிநடத்தப்பட்டதாக அஹ்மதிநெஜாத் உணர்கிறார். அஹ்மதிநெஜாத் இஸ்லாமின் எதிரிகளை அழிப்பது பற்றி பலமுறை அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். ஈரானின் ஜனாதிபதியும் அவரது அமைச்சரவையும் அல் மஹ்தியுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகக் கூறப்படுகிறது, அதில் அவர்கள் அவருடைய வேலைக்கு தங்களை உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். செப்டம்பர் 2009 இல் ABC நிருபர் ஆன் கரியிடம் அவரது அப்போகாலிப்டிக் அறிக்கைகள் பற்றி நேரடியாகக் கேட்டபோது, அஹ்மதிநெஜாத், “இமாம் ... தருக்கம், கலாச்சாரம், அறிவியல் ஆகியவற்றுடன் வருவார். இனி போர் நடக்காதபடி அவர் வருவார். இனி பகை, வெறுப்பு இல்லை. இனி மோதல் இல்லை. சகோதர அன்பில் பிரவேசிக்க அனைவரையும் அழைப்பார். நிச்சயமாக, அவர் இயேசு கிறிஸ்துவுடன் திரும்புவார். இருவரும் மீண்டும் ஒன்றாக வருவார்கள். மேலும் ஒன்றாக வேலை செய்வதால், அவர்கள் இந்த உலகத்தை அன்பால் நிரப்புவார்கள்.

இதற்கும் அந்திக்கிறிஸ்துக்கும் என்ன சம்பந்தம்? 2 தெசலோனிக்கேயர் 2:3-4-ன் படி, “எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.” தானியேல் 7 இல் தானியேலின் தேவனுடைய தீர்க்கதரிசனத் திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ராஜ்யங்களைக் குறிக்கும் நான்கு மிருகங்கள் பற்றிய பார்வையைக் குறித்துப் படிக்கிறோம். நான்காவது மிருகம் விவரிக்கப்பட்டுள்ளது (வசனம் 7-8) அது கெடியும் பயங்கரமும் மகா பலத்ததுமாயிருந்தது, அதற்கு முன் வந்தவர்களிடமிருந்து வேறுபட்டதாகவும் இருந்தது. இது "சின்னக் கொம்பு" என்று விவரிக்கப்பட்டுள்ளது, இது மற்ற கொம்புகளை பிடுங்குகிறது. இந்த சின்னக் கொம்பு பெரும்பாலும் அந்திக்கிறிஸ்து என்று அடையாளம் காணப்படுகிறது. 25-வது வசனத்தில் அவன் "உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒருகாலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்” (3 ½ ஆண்டுகள்). தானியேல் 8 இல், ஆட்டுக்கடா மற்றும் ஆட்டின் பார்வை கடைசி நாட்களில் எழும் ஒரு ராஜாவை அடையாளம் காட்டுகிறது (வசனங்கள் 23-25), பலரை அழித்து, கிறிஸ்துவுக்கு எதிராக நிற்க, ஆனால் இந்த ராஜா உடைந்து போவான். தானியேல் 9:27 இல் "வரப்போகிற பிரபு" பல மக்களுடன் 7 வருட உடன்படிக்கை செய்து பின்னர் மிகவும் பாழாக்கும் அருவருப்பை செய்வான் என்று தீர்க்கதரிசனம் கூறப்பட்டுள்ளது. இந்த அந்திக்கிறிஸ்து யார்? யாருக்கும் உறுதியாகத் தெரியாது, ஆனால் அவன் ஒரு அரேபியனாக இருப்பதற்கான சாத்தியக்கூறு உட்பட பல கோட்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பல்வேறு கோட்பாடுகளைப் பொருட்படுத்தாமல், வேதாகமத்துக்கும் ஷியா இறையியலுக்கும் இடையில் நாம் கவனிக்க வேண்டிய சில இணைகள் உள்ளன. முதலாவதாக, அந்திக்கிறிஸ்துவின் ராஜ்யம் உலகை ஏழு ஆண்டுகள் ஆட்சி செய்யும் என்று வேதாகமம் கூறுகிறது, மேலும் இஸ்லாம் பன்னிரண்டாவது இமாம் ஏழு வருடங்கள் உலகை ஆளும் என்று கூறுகிறது. இரண்டாவதாக, முஸ்லீம்கள் பன்னிரண்டாவது இமாமை வெளிப்படுத்துவதற்கு மூன்று வருட உலகளாவிய குழப்பத்தை எதிர்பார்க்கிறார்கள், மற்றும் யூத தேவாலயத்தை பாழாக்கும் அருவருப்புடன் அந்திக்கிறிஸ்து தன்னை வெளிப்படுத்துவதற்கு முன்பு 3½ வருட உபத்திரவம் பற்றி வேதாகமம் பேசுகிறது. மூன்றாவதாக, அந்திக்கிறிஸ்து அமைதியை ஏற்படுத்துவதாகக் கூறும் ஒரு ஏமாற்றுக்காரன் என்று விவரிக்கப்படுகிறான், ஆனால் உண்மையில் பரவலான போரைக் கொண்டுவருகிறான்; பன்னிரண்டாவது இமாமின் எதிர்பார்ப்பு என்னவென்றால், அவர் உலகின் பிற பகுதிகளுடன் மாபெரும் போரின் மூலம் அமைதியைக் கொண்டுவருவார்.

அந்திக்கிறிஸ்து ஒரு முஸ்லிமாக இருப்பாரா? தேவனுக்கு மட்டுமே தெரியும். இஸ்லாமிய எதிர்கால சாஸ்திரம் மற்றும் கிறிஸ்தவ எதிர்கால சாஸ்திரம் இடையே தொடர்புகள் உள்ளதா? ஒரு நேரடிப் போரைப் பற்றிய விளக்கங்களைப் படிப்பது போல தோற்றமளித்தாலும், முதலில் தோல்வியுற்றவரின் கண்ணோட்டத்தில், முகத்தைக் காப்பாற்ற முயன்றது, பின்னர் வெற்றியாளரின் கண்ணோட்டத்தில். இந்த காரியங்களின் நிறைவைக் காணும் வரை, நாம் 1 யோவான் 4:1-4 இன் வார்த்தைகளுக்குச் செவிசாய்க்க வேண்டும், “பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.”

English



முகப்பு பக்கம்

இஸ்லாமிய அந்திக்கிறிஸ்துவா? அந்திக்கிறிஸ்து ஒரு முஸ்லிமாக இருப்பாரா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries