கேள்வி
யாக்கோபின் இக்கட்டுக்காலத்திற்கான காலம் என்ன?
பதில்
"யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்" என்ற சொற்றொடர் எரேமியா 30:7 இன் மேற்கோள் ஆகும், "ஐயோ! அந்த நாள் பெரியது; அதைப்போலொத்த நாளில்லை; அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்; ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான்" (KJV).
எரேமியா 30 இன் முந்தைய வசனங்களில், யூதா மற்றும் இஸ்ரேலைப் பற்றி கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியுடன் பேசுவதை நாம் காண்கிறோம் (30:3-4). வசனம் 3-ல், எதிர்காலத்தில் ஒரு நாள், யூதா மற்றும் இஸ்ரேல் ஆகிய இருவரையும் அவர் முன்னோர்களுக்கு வாக்குறுதியளித்த தேசத்திற்கு மீண்டும் கொண்டுவருவார் என்று கர்த்தர் வாக்களிக்கிறார். வசனம் 5 மிகுந்த பயம் மற்றும் நடுக்கத்தின் காலத்தை விவரிக்கிறது. 6 வது வசனம் இந்த காலத்தை விவரிக்கிறது அதாவது மனிதர்கள் பிரசவ வலிக்கு ஒத்த வேதனையில் கடந்துப்போவதைக் குறிப்பிடுகிறது. ஆனால் யூதாவுக்கும் இஸ்ரவேலுக்கும் நம்பிக்கை உள்ளது, ஏனெனில் இது "யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்" (NASB) என்று அழைக்கப்பட்டாலும், கர்த்தர் யாக்கோபை (யூதா மற்றும் இஸ்ரவேலைக் குறிப்பிடுகிறார்) பெரும் உபத்திரவத்தில் இருந்து காப்பாற்றுவார் என்று உறுதியளிக்கிறார் (வசனம் 7).
எரேமியா 30:10-11 இல் கர்த்தர் கூறுகிறார், “நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியைத் தங்கள் சிறையிருப்பின் தேசத்திலும் இராதபடிக்கு இரட்சிப்பேன்; யாக்கோபு திரும்பி வந்து அமர்ந்து சுகித்திருப்பான்; அவனைத் தத்தளிக்கப்பண்ணுகிறவனில்லை. உன்னை இரட்சிப்பதற்காக நான் உன்னோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”
மேலும், யூதா மற்றும் இஸ்ரேலை சிறைப்பிடித்து வைத்திருந்த நாடுகளை அழிப்பேன் என்று கர்த்தர் கூறுகிறார், மேலும் யாக்கோபை முழுமையாக அழிக்க அவர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். இருப்பினும், கர்த்தர் தமது ஜனங்களுக்கான ஒழுக்க நடவடிக்கை நேரமாக இதை விவரிக்கிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவர் யாக்கோபைப் பற்றி கூறுகிறார், "உன்னைச் சிதறடித்த எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமலும், முற்றிலும் தண்டியாமல் விடாமலும், மட்டாய்த் தண்டிப்பேன்.”
எரேமியா 30:7 கூறுகிறது, "அந்த நாள் பெரியது; அதைப்போலொத்த நாளில்லை." இந்த விளக்கத்திற்கு பொருந்தக்கூடிய ஒரே காலம் உபத்திரவ காலம் மட்டுமே. இந்த காலம் எவற்றோடும் தொடர்புபடுத்த முடியாததாகும்.
எரேமியாவின் அதே சில உருவகங்களைப் பயன்படுத்தி இயேசு உபத்திரவத்தை விவரித்தார். மத்தேயு 24:6-8 இல், அவர் கள்ளக்கிறிஸ்துக்களின் தோற்றம், யுத்தங்கள் மற்றும் யுத்தங்களின் செய்தி, பஞ்சங்கள் மற்றும் பூகம்பங்களின் செய்திகள் "இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்" என்று கூறினார். பவுல், உபத்திரவத்தை பிரசவ வேதனை என்று விவரித்தார். 1 தெசலோனிக்கேயர் 5:3 கூறுகிறது, "சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை." இந்த நிகழ்வு 4:13-18 இல் சபை எடுத்துக்கொள்ளப்படுதல் மற்றும் அகற்றப்படுதலைப் பின்தொடர்கிறது. 5:9 இல், பவுல் இந்த காலகட்டத்திலிருந்து சபை இல்லாததை மீண்டும் வலியுறுத்துகிறார், "தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்". இங்கே பேசப்படும் கோபம் அவிசுவாச உலகம் மற்றும் தேவன் உபத்திரவத்தின் போது இஸ்ரவேலின் ஒழுக்கம் பற்றிய தேவனின் நியாயத்தீர்ப்பு.
இந்த "பிரசவ வேதனைகள்" வெளிப்படுத்துதல் 6-12 இல் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது உபத்திரவத்தின் நோக்கத்தின் ஒரு பகுதி இஸ்ரேலை மீண்டும் கர்த்தரிடமாய் கொண்டுவருவதாகும்.
பாவத்திலிருந்து கிறிஸ்துவை இரட்சகராகப் பெற்றவர்களுக்கு, யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம் நாம் கர்த்தரைத் துதிக்க வேண்டும், ஏனென்றால் தேவன் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார் என்பதை இது நிரூபிக்கிறது. அவர் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்துவின் மூலம் நமக்கு நித்திய ஜீவனை வாக்களித்தார், மேலும் அவர் ஆபிரகாமுக்கும் அவருடைய சரீரப்பிரகாரமாகிய சந்ததியினருக்கும் தேசம், வித்து மற்றும் ஆசீர்வாதம் ஆகியவற்றை வாக்களித்தார். இருப்பினும், அவர் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முன்பு, அவர் இஸ்ரேல் தேசத்தை அன்போடு ஆனால் உறுதியாகக் கண்டிப்பார், அதனால் அவர்கள் அவரிடம் திரும்புவார்கள்.
English
யாக்கோபின் இக்கட்டுக்காலத்திற்கான காலம் என்ன?