settings icon
share icon
கேள்வி

யெகோவாவின் சாட்சிகள் என்பவர்கள் யார் மற்றும் அவர்ககள் எதை விசுவாசிக்கிறார்கள்?

பதில்


இன்று யெகோவாவின் சாட்சிகள் என்று அழைக்கப்படும் இந்த மதப்பிரிவு 1870ல் சார்லஸ் டேஸ் ரஸல் என்பவரால் பென்சில்வேனியாவில் நடத்தப்பட்ட வேதாகம வகுப்பில் இருந்து உருவானதாகும். ரஸல் தன்னுடைய குழுவுக்கு “ஆயிரவருட விடியல் வேதாகம வகுப்பு” என்று பெயரிட்டார். அவரைப் பின்பற்றினவர்கள் “வேதாகம மாணவர்கள்” என்று அழைக்கப்பட்டார்கள். சார்லஸ் டேஸ் ரஸல் புத்தகங்களை தெடர்ச்சியாக எழுத ஆரம்பித்தார் அதற்கு “ஆயிர வருட விடியல்” என்று பெயரிட்டார். அவருடைய மரணத்திற்கு முன்பு ஆறு தொகுப்புகளை கொண்ட புத்தகங்களை எழுதினார் மற்றும் யெகோவாவின் சாட்சிகள் தற்போது கைக்கொள்ளும் இறையியல், இந்த புத்தகங்களில் அடிப்படையிலானது ஆகும். 1886-ல் காவற்கோபுர வேதாகமம் மற்றும் கைப்பிரதிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு உடனடியாக “ஆயிரவருட விடியலும்” துவங்கப்பட்டு இந்த இயக்கத்தினுடைய கருத்துக்களை பிரஸ்தாபப்படுத்த துவங்கியது. இந்த கொள்கைகளைப் பின்பற்றினவர்கள் “ரஸலைச்சேர்ந்தவர்கள்” என்று அழைக்கப்பட்டார்கள். 1916-ல் ரஸலின் மரணத்திற்கு பின்பு அவருடைய நண்பர் நீதிபதி ஜே. எஃப். ரூதர்ஃபோர்டு மற்றும் அவரை பின்பற்றியவர்கள் “ஆயிர வருட விடியல்” தொடர்ச்சியில் இறுதி தொகுப்பான ஏழாவது தொகுப்பை 1917-ல் “முடிவுற்ற இரகசியம்” என்னும் பெயரில் புத்தகத்தை எழுதினார்கள். இதே ஆண்டில் ஸ்தாபனம் பிளவுபடவும் தொடங்கியது. ரூதர்ஃபோர்டினை பின்பற்றினவர்கள் தங்களை “யெகோவாவின் சாட்சிகள்” என்று அழைத்துக்கொண்டார்கள்.

யெகோவாவின் சாட்சிகள் எதை விசுவாசிக்கின்றனர்? நெருங்கிய நுண்ணாய்வு நிலையில் ஆராய்ந்தோமானால், இவர்கள் உபதேசங்களில் கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மை, இரட்சிப்பு, திரித்துவம், பரிசுத்த ஆவியானவர், மற்றும் கிறிஸ்துவின் பாவநிவாரணபலி ஆகியவைகளில் அவர்கள் கிறிஸ்தவத்தின் பழமைவாத கோட்பாட்டின் நிலையை உடையவர்களா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. படைப்புகளில் முதன்மையான பிரதான தூதனாகிய மிகாவேல் தான் இயேசு கிறிஸ்து என்பது யெகோவாவின் சாட்சிகளின் விசுவாசம். இது இயேசு தேவன் என்று கூறுகிற அநேக வேதாகமப் பகுதிகளுக்கு முரண்பாடானதாகும் (யோவான் 1:1,14, 8:58, 10:30). விசுவாசம், நற்செயல் மற்றும் கீழ்படிதலினால் இரட்சிப்பை அடையமுடியும் என்பது யெகோவாவின் சாட்சிகளின் விசுவாசம் ஆகும். இது இரட்சிப்பு கிருபையினால் விசுவாசத்தின் மூலம் பெறப்படும் என்கிற எண்ணற்ற வேத பகுதிகளுக்கு முரண்பாடானதாகும் (யோவான் 3:16; எபேசியர் 2:8-9; தீத்து 3:5). யெகோவாவின் சாட்சிகள் திரித்துவத்தை தவிர்க்கின்றனர் மற்றும் இயேசுவை சிருஷ்டிக்கப்பட்டவராகவும் பரிசுத்த ஆவியை உருவமில்லாத தேவனுடைய ஒரு வல்லமையாக மட்டுமே விசுவாசிக்கின்றனர். இவர்கள் இயேசு நம்முடைய பிரதிநிதியாக பலியானார் என்பதை மறுக்கின்றனர். ஆனால் ஆதாமுடைய பாவத்தின் பரிகாரமாக நமக்கு பதிலாக அவர் மரித்தார் என்கிற பிணையமீட்பு கோட்பாட்டை விசுவாசிகின்றனர்.

வேதாகமத்திற்கு புறம்பான இந்த உபதேசங்களை யெகோவாவின் சாட்சிகள் எப்படி நியாயப்படுத்துகின்றனர்? முதலாவது பல நூற்றாண்டுகளாக சபையானது வேதாகமத்தை சீரழித்துவிட்டது என்று சொல்கின்றனர். அதினிமித்தமாக அவர்கள் வேதாகமத்தை மறு மொழிபெயர்ப்பு செய்து அதற்கு புதிய உலக மொழிப்பெயர்ப்பு என்று பெயரிட்டனர். வேதாகமத்திளுள்ள உண்மையான போதனைகளை பின்பற்றுவதற்கு பதிலாக இவர்களின் காவற்கோபுர வேதாகம மற்றும் கைப்பிரதி கழகம் வேத வசனங்களை அவர்களுடைய உபதேசத்திற்கு ஏற்றார் போல் திரித்து திறுத்தி அமைத்துக் கொண்டது. யெகோவாவின் சாட்சிகள் தங்களின் உபதேசத்திற்கு முரண்படுகிற வசனங்களை அவர்கள் கண்டறிந்து புதிய உலக மொழிப்பெயர்பை பல பதிப்புகளாக வெளியிட்டுள்ளனர்.

சார்லஸ் டேஸ் ரஸல், நீதிபதி ஜோசப் பிராங்க்ளின் ரூதர்ஃபோர்ட் மற்றும் அவர்களை பின்பற்றுவோரின் அடிப்படையான மற்றும் விரிவுபடுத்தப்பட்ட உபதேசத்தையே தனது அடிப்படை விசுவாசம் மற்றும் உபதேசமாக காவற்கோபுரம் கொண்டுள்ளது. இந்த அமைப்பில் உள்ள காவற்கோபுர வேதாகம மற்றும் கைப்பிரதி கழகத்தை ஆளும் செயற்குழுவிற்கே வேதாகமத்தை வியாக்கியானம் செய்யும் அதிகாரம் உள்ளது என்று இவர்கள் உரிமைக்கோருகின்றனர். ஆதாவது வேத வசனத்தை குறித்து செயற்குழு அங்கத்தினரின் கருத்தே கடைசி வார்த்தையாக கருதப்படுகிறது மற்றும் தனிமனிதனின் கருத்துக்கள் முற்றிலும் நிராகரிக்கப்படுகிறது. இது பவுல் தீமோத்தேயுவுக்கு (மற்றும் நமக்கும் கூட) கொடுத்த அறிவுரையான “நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்து” என்பதற்கு முற்றிலும் எதிரானது ஆகும். இந்த அறிவுரையை 2 தீமோத்தேயு 2:15ல் பார்க்கிறோம், இது தேவனால் தேனுடைய பிள்ளைகள் அனைவரும் காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்த பெரோயா கிறிஸ்தவர்களை போல இருப்பதற்கு கொடுக்கப்பட்ட ஆலோசனை ஆகும்.

உண்மையாக தங்கள் செய்தியை பிறருக்கு எடுத்துசொல்லும் விஷயத்தில் யெகோவாவின் சாட்சிகளைப் போல் வேறொரு மதப் பிரிவினரை நாம் பார்க்க முடியாது. துரதிருஷ்டவசமாக இவர்களின் செய்திகள் சிதைவுகள் நிரம்பியதாகவும், ஏமாற்றக்கூடியதாகவும் மற்றும் தவறான உபதேசமாகவும் இருக்கின்றன. தேவன் தாமே சுவிசேஷத்தின் சத்தியத்தை மற்றும் தேவ வசனத்தின் உண்மையான போதனையை கண்டுகொள்ளும் படி யெகோவாவின் சாட்சிகளின் கண்களை திறப்பாராக.

English



முகப்பு பக்கம்

யெகோவாவின் சாட்சிகள் என்பவர்கள் யார் மற்றும் அவர்ககள் எதை விசுவாசிக்கிறார்கள்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries