கேள்வி
இயேசு சைவ உணவு உண்பவராக இருந்தாரா? ஒரு கிறிஸ்தவர் சைவ உணவு உண்பவராக இருக்க வேண்டுமா?
பதில்
இயேசு சைவ உணவு உண்பவராக இருக்கவில்லை. இயேசு மீன் (லூக்கா 24:42-43) மற்றும் ஆட்டுக்குட்டியின் இறைச்சி (லூக்கா 22:8-15) சாப்பிடுவதை வேதாகமம் பதிவு செய்கிறது. இயேசு அற்புதம் செய்து பெரும் ஜனக்கூட்டங்களுக்கு மீன் மற்றும் அப்பத்தை அளித்தார், அவர் ஒரு சைவ உணவு உண்பவர் என்றால் அவர் இப்படி ஒரு விசித்திரமான விஷயத்தை எங்ஙனம் செய்யக்கூடும் (மத்தேயு 14:17-21). அப்போஸ்தலனாகிய பேதுருவுக்கு ஒரு தரிசனத்தில், விலங்குகள் உட்பட எல்லா உணவுகளையும் சுத்தமாக இருப்பதாக இயேசு அறிவித்தார் (அப்போஸ்தலர் 10:10-15). நோவாவின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு, இறைச்சி சாப்பிட தேவன் மனிதகுலத்திற்கு அனுமதி அளித்தார் (ஆதியாகமம் 9:2-3). தேவன் இந்த அனுமதியை ஒருபோதும் ரத்து செய்யவில்லை.
ஒரு கிறிஸ்தவர் சைவ உணவு உண்பதில் தவறில்லை. இறைச்சி சாப்பிட வேதாகமம் கட்டளையிடவில்லை. இறைச்சி சாப்பிடுவதைத் தவிர்ப்பதில் தவறில்லை. வேதாகமம் என்ன சொல்கிறது என்றால், இந்த விவகாரம் குறித்த நம்முடைய நம்பிக்கையை மற்றவர்கள் மீது கட்டாயப்படுத்தக்கூடாது அல்லது அவர்கள் சாப்பிடுவது அல்லது சாப்பிடாதவற்றால் நாம் தீர்ப்பளிக்கக்கூடாது. ரோமர் 14:2-3 நமக்கு சொல்கிறது, “ஒருவன் எந்தப் பதார்த்தத்தையும் புசிக்கலாமென்று நம்புகிறான்; பலவீனனோ மரக்கறிகளை மாத்திரம் புசிக்கிறான். புசிக்கிறவன் புசியாதிருக்கிறவனை அற்பமாயெண்ணாதிருப்பானாக; புசியாதிருக்கிறவனும் புசிக்கிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காதிருப்பானாக; தேவன் அவனை ஏற்றுக்கொண்டாரே.”
மீண்டும், ஜலப்பிரளயத்திற்குப் பிறகு இறைச்சி சாப்பிட தேவன் மனிதகுலத்திற்கு அனுமதி அளித்தார் (ஆதியாகமம் 9:3). பழைய ஏற்பாட்டுச் சட்டத்தில், சில உணவுகளை சாப்பிட வேண்டாம் என்று இஸ்ரவேல் தேசத்துக்குக் கட்டளையிடப்பட்டது (லேவியராகமம் 11:1-47), ஆனால் ஒருபோதும் இறைச்சி சாப்பிடுவதற்கு எதிராக எந்த ஒரு கட்டளையும் இல்லை. எல்லா வகையான இறைச்சிகள் உட்பட எல்லா உணவுகளையும் சுத்தமாக இருப்பதாக இயேசு அறிவித்தார் (மாற்கு 7:19). எதையும் போலவே, ஒவ்வொரு கிறிஸ்தவரும் அவன் / அவள் என்ன சாப்பிட வேண்டும் என்று வழிகாட்டுதலுக்காக ஜெபிக்க வேண்டும். நாம் எதைச் சாப்பிட முடிவு செய்தாலும் அதை வழங்கியதற்காக தேவனுக்கு நன்றி செலுத்தும்வரை அது ஏற்றுக்கொள்ளத்தக்கது (1 தெசலோனிக்கேயர் 5:18) ஆகும். “ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” (1 கொரிந்தியர் 10:31).
English
இயேசு சைவ உணவு உண்பவராக இருந்தாரா? ஒரு கிறிஸ்தவர் சைவ உணவு உண்பவராக இருக்க வேண்டுமா?