கேள்வி
இயேசு வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையப்பட்டாரா? அப்படியானால், அவர் ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுந்திருக்க, எப்படி மூன்று நாட்கள் கல்லறையிலிருந்தார்?
பதில்
இயேசு வாரத்தின் எந்த நாளில் சிலுவையில் அறையப்பட்டார் என்று குறிப்பிட்டு வேதாகமத்தில் தெளிவாக கூறவில்லை. அநேகரால் பெரும்பாலும் நம்பப்படுகிற இரண்டு கருத்துப்பாங்குகள் இருக்கிறது, அதாவது புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகும். சிலர் இந்த கருத்துக்களையும் ஒருமித்து ஆராய்ந்து வியாழக்கிழமை என்றும் விவாதிக்கிறார்கள்.
இயேசு மத்தேயு 12:40-ல் ‘‘யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்” என்று கூறுகிறார். வெள்ளிக்கிழமைத்தான் சிலுவையில் அறையப்பட்டார் என்று வாதிடுவோர் அவர்களுடைய கருத்துக்கு ஏற்கக்கூடிய வகையில் இயேசு மூன்று நாட்கள் கல்லறையில் இருந்தார் அதற்கான காரணங்கள் உள்ளன என்று கூறுகிறார்கள். முதல் நூற்றாண்டு யூதர்களுடைய மனதில், ஒரு நாளின் ஒரு பகுதி ஒரு முழு நாளாக கருதப்பட்டது. இயேசு வெள்ளிக்கிழமை ஒரு பகுதி கல்லறையில் இருந்தார். பின்பு சனிக்கிழமை முழுவதும் மற்றும் ஞாயிற்றுக்கிழமையின் ஒரு பகுதி – இவ்வாறு அவர் மூன்று நாள் கல்லறையில் இருந்திருப்பார் என்று கருதப்படுகின்றது. வெள்ளிக்கிழமைத்தான் சிலுவையில் அறையப்பட்டார் என்பதற்கு பிரதானமான விவாதங்களில் ஒன்று மாற்கு 15:42ல் காண்கிறோம், அதாவது ‘‘ஓய்வுநாளுக்கு முந்தினநாள்’’ என்று குறிப்பிட்டிருப்பது ஒரு முதன்மையான வாதமாக இருக்கிறது. அதாவது சனிக்கிழமை, வாரத்தின் ஓய்வுநாளானால், சிலுவையில் அறையப்பட்டது வெள்ளிக்கிழமையாகத் தானே இருக்க வேண்டும். வெள்ளிக்கிழமைத்தான் என்ற மற்றொரு வாதத்தில் மத்தேயு16:21 மற்றும் லூக்கா 9:22 இயேசு மூன்றாவது நாள் உயிர்தெழுவார் என்று போதிக்கிறது. அவர் கல்லறையில் மூன்று இரவும் பகலும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சில மொழிப்பெயர்ப்புகள் ‘மூன்றாம் நாளில்‘ என்று உபயோகிக்கப்பட்டுள்ளது. எல்லோரும் “மூன்றாம் நாளில்” என்று மொழிப்பெயர்க்கப்பட்டதை சிறந்தது என்று ஏற்றுக் கொள்வதில்லை. மேலும் மாற்கு 8:31 ‘‘மூன்று நாளைக்குப்பின்பு” இயேசு உயிர்தெழுவார் என்று கூறுகிறது.
வியாழக்கிழமை என்ற வாதம் வெள்ளிக்கிழமையின் கருத்தை விரிவாக்கி கிறிஸ்துவின் அடக்கத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலைவரை அநேகக் காரியங்கள் நடக்கின்றன. (அதாவது இருபதிற்கும் மேற்பட்ட) வெள்ளிக்கிழமை சாயங்காலத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலைவரை ஆகும். வியாழக்கிழமை என்று கூறுபவர்கள் வெள்ளிக்கிழமைக்கும் ஞாயிற்றுக்கிழமைக்கும் இடையே ஒரே ஒரு முழு நாள் தான், அதுவும் சனிக்கிழமை யூதருடைய ஓய்வுநாள். இன்னொரு நாள் அல்லது இரண்டு நாட்கள் என்கிற விளக்கம் மற்ற விவாதத்தை நீக்கிப்போடுகிறது. வியாழக்கிழமை என்று வாதிடுவோர் இதை விளக்கமாக கூறுகின்றனர். ஒரு வேளை உங்கள் நண்பரை நீங்கள் திங்கட்கிழமை மாலையிலிருந்து பாரக்கவில்லை என்றால், அடுத்து அவரை வியாழன் காலையில்தான் பார்க்கிறீர்கள் என்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள்” நான் உங்களை மூன்று தினங்களாக பார்க்கவில்லையே” என்று, அது சரியாக 60 மணி நேரமாக (2.5 நாட்கள்) இருந்தாலும் ஒரு வேளை வியாழக்கிழமை இயேசு சிலுவையில் அறையப்பட்டிருந்தால் இந்த விளக்கம் மூன்று நாட்கள் என்று கூறுகிறது.
புதன்கிழமை என்ற கருத்தையுடையவர்கள் அந்த வாரத்தில் இரண்டு ஓய்வுநாட்கள் இருந்ததாக கூறுகிறார்கள். முதல் ஓய்வு நாள் (இது சிலுவையில் அறையப்பட்ட அன்று சாயங்காலத்தில் (மாற்கு 15:42, லூக்கா 23:52-54 ) ஒரு ஸ்திரி நளதங்களை வாங்கினாள். இது ஓய்வு நாளுக்குப் பிறகு நடந்தது. (மாற்கு 16:1) புதன்கிழமை என்ற ‘ஓய்வுநாள்’ என்பது பஸ்கா (லேவியராகமம் 16:29-31, 23:24-32,39) பரிசுத்த நாட்கள் என்பது வாரத்தின் ஏழாவது நாளாக சொல்லப்படவில்லை, அது ஓய்வுநாளாக சொல்லப் படுகிறது. இரண்டாவது ஓய்வுநாள் என்பது அந்த வாரத்தின் ஓய்வுநாள் ஆகும். லூக்கா 23:56–ல் கந்தவர்கங்களையும், பரிமளத்தைலங்களையும் வாங்கின ஸ்திரி அதை தயார்படுத்தி பின்பு “ஓய்வு நாளை” உபசரித்தாள். ஆக, இந்த வாதம் என்ன கூறுகிறது என்றால், கந்தவர்க்கங்களையும் பரிமளத்தைலங்களையும் ஓய்வு நாளுக்குப்பின்பு வாங்க முடியாது, மற்றும் அதை ஓய்வு நாளுக்கு முன்பு தயார் செய்யவும் வேண்டும். இரண்டு ஓய்வு நாட்கள் இருந்தாலொழிய இப்படி நடக்க முடியாது. இந்த இரண்டு ஓய்வுநாள் கருத்தின்படி, கிறிஸ்து வியாழக்கிழமை சிலுவையில் அறையப்பட்டாரானால் பரிசுத்த ஓய்வு நாளானது (பஸ்கா) வியாழக்கிழமை சூரிய அஸ்தமனத்திலிருந்து துவங்கி வெள்ளிக்கிழமை சூரிய அஸ்தமனத்தில் முடிந்திருக்கும். இது வாரத்தின் ஓய்வுநாள் அல்லது சனிக்கிழமை. கந்தர்வர்க்கங்களையும் பரிமளத்தைலங்களையும் முதல் ஓய்வு நாளுக்கு (பஸ்கா) பிறகு வாங்கியிருந்தால் அது சனிக்கிழமை ஓய்வுநாளை பரிசுத்த குலைச்சலாக்கினதாக இருக்கும்.
ஆகவே, புதன்கிழமை என்ற கருத்தின்படி, வேதத்தை மீறாமல் கொடுக்கப்ட்ட விளக்கம் ஸ்தீரியும் பரிமளத்தைலங்களையும் குறித்த விளக்கம் மத்தேயு 12:40-ஐ விளக்கி, கிறிஸ்து புதன்கிழமையில்தான் சிலுவையில் அறையப்பட்டார் என்று கூறுகிறது. ‘ஓய்வுநாள்’ எனக்கூடிய பரிசுத்த ஓய்வுநாள் (பஸ்கா) வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. அந்த ஸ்திரி பொருட்களை (பிறகு) வெள்ளிக்கிழமை வாங்கி அதே நாளில் அதைத் தயார் செய்து, சனிக்கிழமை ஓய்வுநாளை அனுசரித்தாள். பின்பு ஞாயிற்றுக்கிழமை அந்தப் பொருட்களை கல்லறைக்குக் கொண்டுவந்தாள். இயேசு புதன்கிழமை சூரிய அஸ்தமத்தில் கல்லறையில் வைக்கப்பட்டார். யூதருடைய நாள் காட்டியில் அது வியாழக்கிழமையின் தொடக்கம். யூதருடைய நாட்காட்டியைக் கொண்டு பார்க்கும்போது, வியாழக்கிழமை இரவு (முதல்நாள் இரவு) வியாழக்கிழமை பகல் (முதல்நாள்) வெள்ளிக்கிழமை பகல் (இரண்டாவது நாள்) சனிக்கிழமை இரவு (மூன்றாவது இரவு). அவர் எப்பொழுது உயிர்தெழுந்தார் என்ற நேரம் நமக்கு தெளிவாகத் தெரியாது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை சூரிய உதயத்திற்கு முன்பு என்று தெரியும். ஒருவேளை அவர் சனிக்கிழமை சூரிய அஸ்தமத்திற்கு சற்று தள்ளி உயிரோடு எழுந்திருக்கலாம், அது யூதருடைய வாரத்தின் முதல்நாள். கல்லறை வெறுமையாயிருந்ததை கூடிய உதயத்தின்போது தான் கண்டுக்கொண்டிருக்க வேண்டும். (மாற்கு 16:2) அப்பொழுது முழுவதுமாக விடியாமல் இருந்தது.(யோவன் 20:1)
புதன்கிழமை என்ற கருத்திற்கு இருக்கிற ஒரு எதிர்க்கருத்து என்னவெனில், எம்மாவு சீஷர்களோடு இயேசு உயிர்தெழுந்த ‘அதே நாளில்’ நடந்து சென்றார். (லூக்கா 24:13) இயேசு என்று அறியாத அந்த சீஷர்கள், அவரிடம் இயேசுவின் சிலுவையைக் குறித்து (24:21) கூறுகிறார்கள். அதோடு ‘‘இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாகிறது” என்றும் கூறுகிறார்கள். புதன்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாட்கள் ஆகிறது. அவர்கள் புதன்கிழமை சாயங்காலம் கிறிஸ்துவின் அடக்கம் முதல் அதாவது யூதருடைய வியாழக்கிழமையின் தொடக்கம் முதல் ஞாயிற்றுக்கிழமைவரை மூன்று நாட்களாக கணக்கில் கொண்டிருக்க வேண்டும்.
இதன் கடைத்தொகை என்னவென்றால், அவர் எந்த நாளில் சிலுவையிலறையப்பட்டார் என்பது முக்கியமே கிடையாது. அது மிக முக்கியமானதாக இருந்திருக்குமானால், தேவனுடைய வார்த்தை அதைத் தெளிவாக நமக்கு சொல்லியிருக்கும். எது முக்கியம் என்றால் அவர் மரித்து, சரீரத்தில் மரித்தோரிலிருந்து உயிரோடு எழும்பினார். மேலும் எது முக்கியமென்றால், அவர் மரித்து, பாவிகளாகிய நம் மேல் வந்திருக்க வேண்டிய தண்டனையை அவர் எடுத்துக் கொண்டார். யோவான் 3:16 மற்றும் 3:36 ஆகிய வசனங்கள் அவர்மீது நம்பிக்கை வைக்கும்போது நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்வோம் என்று கூறுகிறது. இது அவர் புதன்கிழமை, வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையில் சிலுவையில் அறையப்பட்டிருந்தாலும் நடந்தேறும்.
English
இயேசு வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையப்பட்டாரா? அப்படியானால், அவர் ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுந்திருக்க, எப்படி மூன்று நாட்கள் கல்லறையிலிருந்தார்?