கேள்வி
இயேசு பிரதான தூதனாகிய மிகாவேலா?
பதில்
இயேசு பிரதான தூதனாகிய மிகாவேல் அல்ல. இயேசுவை மிகாவேல் (அல்லது அந்த வகையில் வேறு எந்த தேவதூதனும்) என்று வேதாகமம் எங்கும் அடையாளப்படுத்தவில்லை. எபிரெயர் 1:5-8, இயேசுவுக்கும் தேவதூதர்களுக்கும் இடையேயுள்ள தெளிவான வேறுபாட்டைக் காட்டுகிறது: “எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா? மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார். தேவதூதரைக்குறித்தோ தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜுவாலைகளாகவும் செய்கிறார் என்று சொல்லியிருக்கிறது. குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.” பரலோகத்தில் உள்ளவைகளின் படிநிலை இந்த பத்தியில் தெளிவாக்கப்படுகிறது—தேவதூதர்கள் தனித்து தன்னிகரற்று இருக்கும் இயேசுவை தேவனாக வணங்குகிறார்கள், அவர் ஒருவரே ஆராதனைக்குப் பாத்திரர். வேதத்தில் எந்த தேவதூதனும் ஆராதிக்கப்பட்டதாக குறிப்பிடவில்லை; எனவே, இயேசு (ஆராதனைக்குத் தகுதியானவர்) மிகாவேலோ அல்லது வேறு எந்த தேவதூதனாகவோ இருக்க முடியாது (காரணம் அவர்கள் ஆராதனைக்குத் தகுதியற்றவர்கள்). தேவதூதர்கள் தேவகுமாரர் என்று அழைக்கப்படுகிறார்கள் (ஆதியாகமம் 6:2-4; யோபு 1:6; 2:1; 38:7), ஆனால் இயேசு தேவனுடைய குமாரன் (எபிரெயர் 1:8; மத்தேயு 4:3-6).
மிகாவேல் தேவதூதன் அனைத்து தேவதூதர்களிலும் மிக உயர்ந்தவனாக இருக்கலாம். வேதாகமத்தில் "பிரதான தூதன்" (யூதா வசனம் 9) என்று நியமிக்கப்பட்ட ஒரே தேவதூதன் மிகாவேல் மட்டுமே. பிரதான தூதனாகிய மிகாவேல், ஒரு தேவதூதன் மட்டுமே. அவன் தேவன் இல்லை. மிகாவேல் மற்றும் இயேசுவின் வல்லமையிலும் அதிகாரத்திலும் உள்ள தெளிவான வேறுபாட்டை, மத்தேயு 4:10-ல் ஒப்பிட்டுப் பார்க்க முடியும், அங்கு இயேசு சாத்தானைக் கடிந்துகொள்கிறார், யூதா வசனம் 9ல், மிகாவேல் தூதன் சாத்தானுக்கு எதிராக "தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்". கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக என்று சொன்னான். இயேசு தேவனுடைய மனித அவதாரம் (யோவான் 1:1,14). மிகாவேல், வல்லமை வாய்ந்த ஒரு பிரதான தூதனாக இருந்தாலும், அவன் ஒரு தேவதூதன் மட்டுமே.
English
இயேசு பிரதான தூதனாகிய மிகாவேலா?