கேள்வி
இயேசு மனுஷகுமாரன் என்பதன் அர்த்தம் என்ன?
பதில்
புதிய ஏற்பாட்டில் 88 முறை "மனுஷகுமாரன்" என இயேசு குறிப்பிடப்படுகிறார். தானியேல் 7:13-14-ல் உள்ள தீர்க்கதரிசனத்தில் தான் "மனுஷகுமாரன்" என்ற சொற்றொடரின் முதல் அர்த்தம் வருகிறது, “இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார். சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரீகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும் அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.” “மனுஷகுமாரன்” என்பதன் விவரணம் மேசியாவின் தலைப்பாக விவரிக்கப்பட்டது. இயேசுவே ஆட்சியின் அதிகாரத்தையும் மகிமையையும் ஒரு ராஜ்யத்தையும் கிடைக்கப்பெற்றவராக இருக்கிறார். இயேசு இந்த சொற்றொடரைப் பயன்படுத்தும்போது, அவர் மனுஷகுமாரன் பற்றிய தீர்க்கதரிசனத்தை அவருக்குக் கொடுகிறார். இது யாரைக் குறிப்பிடுகிறது என்று அந்த யுகத்தின் யூதர்கள் அந்த சொற்றொடரை நன்கு அறிந்திருந்தார்கள். இயேசு தன்னை மேசியா என்று பிரகடனம் செய்தார்.
"மனுஷகுமாரன்" என்ற சொற்றொடரின் இரண்டாவது அர்த்தம் இயேசு உண்மையிலேயே மனிதனாக இருக்கிறார் என்பதாகும். தேவன் தீர்க்கதரிசியாகிய எசேக்கியேலை "மனுஷகுமாரன்" என்று 93 முறை அழைத்தார். தேவன் வெறுமனே எசேக்கியேலை ஒரு மனிதன் என்று அழைத்தார். ஒரு மனிதனின் குமாரன் ஒரு மனிதனேயாகும். இயேசு முழுமையாக தேவன் (யோவான் 1: 1), ஆனால் அவர் ஒரு மனிதனும் ஆகும் (யோவான் 1:14). 1 யோவான் 4:2 நமக்கு சொல்லுகிறது, "தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது." ஆம், இயேசு தேவனுடைய குமாரன் – தேவனின் சாராம்சம் உள்ளவர். ஆம், இயேசு மனுஷகுமாரன் – அவர் மனிதனின் சாராம்சத்தில் மனிதனாக இருந்தார். சுருக்கமாக, "மனுஷகுமாரன்" என்கிற வார்த்தை இயேசு மேசியா என்பதையும் அவர் உண்மையில் மனிதனாக இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
English
இயேசு மனுஷகுமாரன் என்பதன் அர்த்தம் என்ன?