settings icon
share icon
கேள்வி

இயேசு எப்போது திரும்பி வருகிறார் என்பதை அறிய முடியுமா?

பதில்


மத்தேயு 24:36-44 அறிவிக்கிறது, "அந்த நாளையும் அந்த நாழிகைகளையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்...உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்... நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.” முதல் பார்வையில், இந்த வசனங்கள் கேள்விக்கு தெளிவான மற்றும் சரியான பதிலை அளிப்பதாகத் தெரிகிறது. இல்லை, இயேசு எப்போது திரும்பி வருவார் என்று யாருக்கும் தெரியாது. எனினும், இயேசு எப்போது திரும்பி வருவார் என்பதை யாராலும் அறிய முடியாது என்று அந்த வசனங்கள் கூறவில்லை. பெரும்பாலான வேதாகம அறிஞர்கள், இப்போது பரலோகத்தில் மகிமைப்படுத்தப்பட்ட இயேசு, அவர் திரும்பி வரும் நேரம் தெரியும், "அல்லது குமாரன்" என்ற சொற்றொடர் இயேசு எப்போது திரும்பி வருவார் என்று தெரியாது என்று குறிப்பிடுவதாக அர்த்தமில்லை என்கிறார்கள். அதுபோலவே, மத்தேயு 24:36-44 இயேசுவின் திரும்ப வரும் நேரத்தை அந்த நேரத்தில் யாராலும் அறிய முடியவில்லை என்று குறிப்பிடும் அதே வேளையில், எதிர்காலத்தில் யாரோ ஒருவருக்கு இயேசு திரும்பி வரும் நேரத்தை தேவன் வெளிப்படுத்த முடியும்.

கூடுதலாக, அப். 1:7 உள்ளது, அதில், "பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல." அந்த நேரத்தில் அவர் இஸ்ரவேலுக்கு ராஜ்யத்தை மீட்டெடுக்கப் போகிறாரா என்று சீடர்கள் கேட்ட பிறகு இயேசு அவர்களுக்குச் சொன்னார். இது மத்தேயு 24 இன் செய்தியை உறுதிப்படுத்துவதாகத் தெரிகிறது. இயேசு திரும்பி வரும் நேரத்தை நாம் அறிவது அல்ல. ஆனால் இந்தப் வேதப்பகுதிகள் எந்த வருகையைக் குறிப்பிடுகின்றன என்ற கேள்வியும் உள்ளது. அவை சபை எடுத்துக்கொள்ளப்படுதல் அல்லது மகிமையுள்ள இரண்டாவது வருகை பற்றி பேசுகிறதா? எந்த வருகை அறியமுடியாதது—சபை எடுத்துக்கொள்ளப்படுதல், மகிமையுள்ள இரண்டாவது வருகை அல்லது இரண்டும்? சபை எடுத்துக்கொள்ளப்படுதல் உடனடி மற்றும் இரகசியமானதாக வழங்கப்பட்டாலும், இரண்டாவது வருகையின் நேரம் கடைசிக்கால தீர்க்கதரிசனத்தின் அடிப்படையில் அறியப்படலாம்.

அதைக்கொண்டு, நாம் மிகவும் தெளிவாக இருப்போம்: இயேசு எப்போது திரும்பி வருவார் என்பதை தேவன் யாருக்காவது வெளிப்படுத்தினதாக நாம் நம்புவதில்லை, மேலும் இயேசு எப்போது திரும்பி வருவார் என்பதை தேவன் யாருக்காவது எப்போதாவது வெளிப்படுத்துவார் என்பதைக் குறிக்கும் எதையும் நாம் வேதத்தில் காண்பதில்லை. மத்தேயு 24:36-44, இயேசுவின் காலத்தில் மக்களிடம் நேரடியாக பேசப்பட்டது, ஒரு பொதுவான கொள்கையையும் கொண்டுள்ளது. இயேசுவின் வருகை எப்போது இருக்கும் மற்றும் யுகத்தின் முடிவு எப்போது என்று நமக்குத் தெரியாது. வேதம் எங்கும் தேதியை தீர்மானிக்க முயற்சி செய்யவேண்டும் நம்மை ஊக்குவிப்பதுமில்லை. மாறாக, "ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்" (வசனம் 42) என்று ஊக்குவிக்கப்படுகிறோம். நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும், ஏனென்றால் “நாம் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்" (வசனம் 44). எதிர்காலத்தில் ஒரு கட்டத்தில் யாராவது இயேசு இன்ன சமயத்தில் திரும்பி வருவார் என்பதை கூறினால் அது இயேசு கூறிய இந்த வார்த்தைகளின் வலிமையைக் குறைக்கிறதாய் இருக்கிறது. மேலும் அவர் வரும் தேதி கண்டுபிடிக்கப்பட்டால், நாம் இனி "விழித்திருத்தல்" அல்லது "ஆயத்தமாக இருக்க" தேவையில்லை. எனவே, மத்தேயு 24:36-44 இல் கூறப்பட்ட கோட்பாடு மனதில் இருக்கும்போது, இயேசு திரும்பி வரும் தேதியை யாராலும் அறிய முடியாது என்பது தெளிவாகிறது.

இவ்வளவு தெளிவான வேதாகமக் கோட்பாடு இருந்தபோதிலும், கிறிஸ்தவ வரலாறு முழுவதும் பலர் இயேசு இன்ன தேதியில் திரும்பி வருவார் என்று தேதியை முன்னறிவிக்க முயன்றனர். இதுபோன்ற பல தேதிகள் முன்மொழியப்பட்டுள்ளன, அவை அனைத்தும் பொய்த்துபோயின. இயேசு இன்ன நாளில் வருவார் என்று இயேசுவின் வருகைக்கான குறிப்பிட்ட தேதிகளை கணித்தவர்களில் பெரும்பாலானவர்கள், இல்லாவிட்டாலும், பிற பிரச்சனைகளில் கோட்பாட்டு நிலைப்பாடுகள் இல்லை. மத்தேயு 24:36 மற்றும் அப்போஸ்தலர் 1:7 ஆகியவற்றின் அடிப்படையில் மேலே கூறியது போல, இயேசு திரும்பி வரும் நாளை நாம் கணக்கிடுவது தேவனுடைய விருப்பம் அல்ல. அத்தகைய பணியை மேற்கொள்ளும் எவரும், வெறுமனே தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.

முக்கிய குறிப்புகள் (1) இயேசுவின் வருகையின் நேரத்தைக் கண்டறிய வேதாகமம் எங்கும் நம்மை ஊக்குவிப்பதில்லை மற்றும் (2) இயேசுவின் வருகையின் நேரத்தை தீர்மானிக்கக்கூடிய தெளிவான தரவை வேதாகமம் நமக்குக் கொடுக்கவில்லை. இயேசு எப்போது திரும்பி வருகிறார் என்பதை அறிய காட்டுவதற்கு மற்றும் ஊக கணக்கீடுகளை வளர்ப்பதற்கு பதிலாக, வேதாகமம் நம்மை "விழித்திருங்கள்" மற்றும் "ஆயத்தமாக இருங்கள்" என்று ஊக்குவிக்கிறது (மத்தேயு 24:42-44). இயேசு மீண்டும் திரும்பி வரும் நாள் நமக்குத் தெரியவில்லை என்னும் காரியம் நம்மை கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கி ஆயத்தமாக ஒவ்வொரு நாளும் அதன் வெளிச்சத்தில் வாழ நம்மைத் தூண்ட வேண்டும்.

English



முகப்பு பக்கம்

இயேசு எப்போது திரும்பி வருகிறார் என்பதை அறிய முடியுமா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries