settings icon
share icon
கேள்வி

மத்தேயுவிலும் லூக்காவிலும் இயேசுவின் வம்சவரலாறுகள் ஏன் மிகவும் வித்தியாசமானதாக இருக்கிறது?

பதில்


இயேசுவின் வம்சாவளி அல்லது வம்சவரலாறு வேதாகமத்தில் இரண்டு இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளது: மத்தேயு 1 மற்றும் லூக்கா 3:23-38. மத்தேயு வம்சாவளியை ஆபிரகாமிலிருந்து இயேசு வரையிலும் குறிப்பிடுகிறார். லூக்கா வம்சாவளியை இயேசுவிலிருந்து ஆதாம் வரையிலும் குறிப்பிடுகிறார். இருப்பினும், மத்தேயு மற்றும் லூக்கா ஆகியோர் வேறுபட்ட இரு வம்சாவளிகளைக் கொண்டு வருவதற்கு மெய்யாகவே நல்ல காரணம் இருக்கிறது. உதாரணமாக, மத்தேயு யாக்கோபுவை யோசேப்பின் தகப்பனாக குறிப்பிடுகிறார் (மத்தேயு 1:16), அதே சமயத்தில் லூக்கா ஏலியை யோசேப்பின் தகப்பனாக குறிப்பிடுகிறார் (லூக்கா 3:23). மத்தேயு தாவீதின் குமாரனாகிய சாலமோனின் வழியாக வம்சாவளியைக் கொண்டுவருகிறார் (மத்தேயு 1:6), லூக்கா தாவீதின் குமாரனாகிய நாத்தான் வழியாக வம்சாவளியைக் கொண்டுவருகிறார் (லூக்கா 3:31). உண்மையில், தாவீது மற்றும் இயேசுவிற்கு இடையே, வம்சாவளியில் பொதுவாக காணப்படுகின்ற பெயர்கள் சொரொபாபேல் மற்றும் சலாத்தியேல் ஆகியோர்கள் மட்டுமே (மத்தேயு 1:12; லூக்கா 3:27).

வேதாகமத்தில் பிழைகள் இருப்பதாக கூறுபவர்களில் சிலர் ஆதாரங்களாக இந்த வித்தியாசங்களைச் சுட்டிக்காட்டுகின்றனர். எனினும், யூதர்கள் மிகவும் கவனமாக பதிவு செய்து வைப்பவர்களாக இருந்தனர், குறிப்பாக வம்சாவளியைப் பொறுத்தவரை அவர்கள் எவ்வித கவனக்குறைவும் பிழையுமின்றி கவனமாக குறிப்பிட்டு காத்து வந்தனர். மத்தேயுவும் லூக்காவும் ஒரே வம்சத்தின் இரண்டு முரண்பாடான வம்சாவளியினரைக் கொண்டு வருகின்றனர் என்பது ஜீரணிக்கமுடியாத ஒரு காரியமாக இருக்கிறது. மீண்டும், தாவீதிலிருந்து இயேசு வரையிலுள்ள வம்சவரலாறுகள் முற்றிலும் வேறுபட்டவை ஆகும். வம்சாவளியில் பொதுவாக காணப்படுகின்ற பெயர்கள் சொரொபாபேல் மற்றும் சலாத்தியேல் ஆகியோர்கள் கூட அதே பெயர்களில் வேறுபட்ட நபர்களைக் குறிக்கலாம். எகோனியாவை சலாத்தியேல் தகப்பனாக மத்தேயு குறிப்பிடுகிறார், ஆனால் லூக்கா நேரியை சலாத்தியேல் தகப்பனாக குறிப்பிடுகிறார். சலாத்தியேல் மற்றும் சொரொபாபேல் போன்ற பெயருடைய பிரபலமான நபர்களின் பெயரில் அவரது மகன் செருபாபேலைப் பெயரிடுவதென்பது (எஸ்ரா, நெகேமியா புத்தகங்களைப் பார்க்கவும்) ஒரு மனிதனுக்கு சாதாரணமாக இருக்கும்.

திருச்சபையின் வரலாற்றாசிரியரான யூசீபியஸால் கொடுக்கப்பட்டுள்ள ஒரு விளக்கம் என்னவெனில், மத்தேயு முதன்மையான அல்லது உயிரியல் வினைமுறை சார்ந்த பரம்பரையைக் கொண்டுவருகிறபோது, லூக்கா “சகோதரனின் விதவையை மணம் புரியும் வழக்கம்” நிகழ்வைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். ஒரு மனிதன் தனக்கு ஒரு குமாரனும் இல்லாமல் இறந்துவிட்டால், அந்த மனிதனின் சகோதரன் விதவையையாகிய தனது சகோதரனின் மனைவியை மணந்துகொண்டு இறந்துபோன சகோதரனுக்கு ஒரு மகனைப் பெற்று அவனது சந்ததியை நிலைநாட்டுவார். யூசீபியஸினுடைய கோட்பாட்டின் படி, மெல்கி (லூக்கா 3:24) மற்றும் மாத்தான் (மத்தேயு 1:15) ஆகிய இருவரும் வெவ்வேறு சமயங்களில் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொண்டனர் (பாரம்பரியமாக அவளுடைய பெயர் எஸ்தா என்று நம்பப்படுகிறது). இது ஏலி (லூக்கா 3:23) மற்றும் யாக்கோபு (மத்தேயு 1:15) ஆகிய இருவரும் ஒன்றுவிட்ட உடன்பிறந்த சகோதரர்களாக இருப்பதைக் காண்பிக்கிறது. ஏலி தனக்கு ஒரு குமாரன் இல்லாமல் இறந்துவிட்டார், எனவே அவருடைய (ஒன்றுவிட்ட உடன்பிறந்த) சகோதரர் யாக்கோபு ஏலியின் விதவையை மணந்து யோசேப்பை பெற்றெடுத்தார். ஆக, யோசேப்பு யாக்கோபினுடைய குமாரன் என்கிறபோதிலும், இது யோசேப்பு "ஏலியின் குமாரன்" என்று சட்டபூர்வமாகவும், "யாக்கோபின் குமாரன்" என்று உயிரியல் வினைமுறை சார்ந்த ரீதியாகவும் இருக்கும்படி செய்தது. எனவே, மத்தேயு மற்றும் லூக்கா இருவருமே ஒரே வம்சாவளியை (யோசேப்பின்) பதிவு செய்கிறார்கள், ஆனால் மத்தேயு உயிரியல் வினைமுறை சார்ந்த நிலையை பின்பற்றுகிறார், லூக்கா சட்டப்பூர்வமான வழிமுறையை பின்பற்றுகிறார்.

மிகவும் பழமைவாத வேதாகம அறிஞர்கள் இன்று ஒரு வித்தியாசமான பார்வையைக் கொண்டிருக்கிறார்கள், அதாவது லூக்கா மரியாளின் வம்சாவளியைப் பதிவுசெய்கிறார், மத்தேயு யோசேப்பின் வம்சாவளியைப் பதிவு செய்கிறார் என்பதாகும். தாவீதின் குமாரனாகிய நாத்தானின் வழியாக லூக்கா மரியாளின் (இயேசுவின் இரத்த உறவினர்) வழியை பின்பற்றுகிறார், ஆனால் மத்தேயு தாவீதின் குமாரனாகிய சாலொமோனின் வழியாக யோசேப்பின் (இயேசு சட்டப்பூர்வ தந்தை) வழியைப் பின்பற்றுகிறார். "மருமகன்" என்கிற கிரேக்க வார்த்தை இல்லை என்பதால், ஏலியின் மகளாகிய மரியாளை மணந்ததால், யோசேப்பு "ஏலியின் குமாரன்" என அழைக்கப்படுகிறார். மரியாள் அல்லது யோசேப்பின் வழியாக, இயேசு தாவீதின் சந்ததியாக இருக்கிறார், எனவே மேசியாவாக இருப்பதற்கு இயேசு பரிபூரணமாய் தகுதியுடையவர் ஆகிறார். தாயின் வழியில் ஒரு வம்சாவளியை கண்டுபிடித்தல் அசாதாரணமானது, இருப்பினும் மரியாளின் கன்னி பிறப்பு அப்படியாகும்படி செய்தது. லூக்காவின் விளக்கம் என்னவென்றால், “இயேசு யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார்” (லூக்கா 3:23).

English



முகப்பு பக்கம்

மத்தேயுவிலும் லூக்காவிலும் இயேசுவின் வம்சவரலாறுகள் ஏன் மிகவும் வித்தியாசமானதாக இருக்கிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries