settings icon
share icon
கேள்வி

பரலோகத்திற்கு போகிறதற்கு ஒரே வழி இயேசு மட்டும்தானா?

பதில்


ஆம், பரலோகத்திற்கு போக ஒரே வழி இயேசு மட்டுமே. இத்தகைய பிரத்யேக அறிக்கை ஒருவேளை குழப்பத்தை ஏற்படுத்தலாம், ஆச்சரியத்தை தரலாம் அல்லது புண்படுத்தவும் செய்யலாம், ஆனால் இது உண்மையாக கூற்று. இரட்சிப்பு அடைவதற்கு இயேசு கிறிஸ்துவை அல்லாமல் வேறு வழியில்லை என்று வேதாகமம் மிகத்தெளிவாக போதிக்கிறது. யோவான் 14:6ல் இயேசுவே இதை கூறுகிறார்: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்”. அவர் பல வழிகளில் ஒரு வழி இல்லை மாறாக அவர் தான் ஒரே ஒரு வழி. நற்பெயர், சாதனை, சிறந்த அறிவு மற்றும் தனிப்பட்ட பரிசுத்ததன்மை ஆகியவற்றால் எந்த ஒரு நபரும் தேவனிடத்திற்கு வர முடியாது, இயேசு ஒருவர் மட்டும்தான் வழி. ஆம் இயேசுவைத் தவிர வேறு எந்த வழியாகவும் எவரும் பிதாவினிடம் வர இயலாது.

பரலோகம் செல்ல இயேசு மட்டுமே ஒரே வழி என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இரட்சகராக இருக்கும்படிக்கு இயேசு "தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்" ஆகும் (1 பேதுரு 2:4). பரலோகத்திலிருந்து இறங்கி வந்தவரும் மீண்டும் ஏறிப்போனவரும் இயேசு ஒரே ஒருவர் மட்டுதான் (யோவான் 3:13). பரிபூரணமான மனித வாழ்வு வாழ்ந்த ஒரே ஒரு மனிதர் இயேசு ஒருவர் மட்டும்தான் (எபிரெயர் 4:15). பாவத்தினுடைய பரிகாரத்திற்கான ஒரே பலியாக பலியானவர் இயேசு ஒருவர் மட்டும்தான் (1 யோவான் 2:2; எபிரெயர் 10:26). நியாயப்பிரமாணத்தையும் தீர்க்கதரிசனங்களையும் நிறைவேற்றினவர் இயேசு ஒருவர் மட்டும்தான் (மத்தேயு 5:17). மரணத்தை என்றென்றுமாய் ஜெயித்த ஒரே மனிதன் இயேசு ஒருவர் மட்டும்தான் (எபிரெயர் 2:14-15). தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் உள்ள ஒரே ஒரு மத்தியஸ்தர் இயேசு ஒருவர் மட்டும்தான் (1 தீமோத்தேயு 2:5). எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் தந்து தேவன் உயர்த்தின ஒரே மனிதன் இயேசு ஒருவர் மட்டும்தான் (பிலிப்பியர் 2: 9).

யோவான் 14: 6-ஐ தவிர மற்ற பல இடங்களிலும், இயேசு தாம் ஒருவரே பரலோகம் செல்லும் வழி என்று மொழிந்துள்ளார். மத்தேயு 7:21-27-ல் விசுவாசத்தின் பொருளாக அவர் தன்னையே முன்வைத்தார். அவர் மொழிந்த அவரது வார்த்தைகள் யாவும் ஜீவனுள்ளவை எனக்கூறினார் (யோவான் 6:63). அவரை விசுவாசிக்கிறவர்கள் யாவரும் நித்திய ஜீவனை அடைவார்கள் என்று அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார் (யோவான் 3:14-15). அவர் ஆடுகளுக்கு வாசல் (யோவான் 10:7); ஜீவ அப்பம் (யோவான் 6:35); உயிர்த்தெழுதல் (யோவான் 11:25). இயேசு ஒருவரை தவிர இப்படிப்பட்ட தலைப்புகளை வேறு ஒருவரும் உரிமை பாராட்டியது கிடையாது.

அப்போஸ்தலருடைய பிரசங்கங்கள் யாவும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் குறித்து மட்டுமே கவனம் செலுத்துகிறதாக இருந்தது. சனகெரிப் சங்கத்தோடு பேதுரு பேசியபோது, பரலோகத்திற்கு செல்லுவதற்கான ஒரே வழி இயேசு மட்டும்தான் என்று தெளிவாக கூறியுள்ளார்: "அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்" (அப்போஸ்தலர் 4:12) . அந்தியோகியாவிலுள்ள ஒரு ஜெப ஆலயத்தில் பவுல் பேசியபோது, இயேசுவே இரட்சகர் என முழக்கமிட்டார்: "இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும், மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது" (அப்போஸ்தலர் 13:38-39). அப்போஸ்தலனாகிய யோவான் திருச்சபைக்கு எழுதுகிறபோது, நம்முடைய பாவமன்னிப்பு கிறிஸ்துவின் நாமத்தில் மட்டுமே தெளிவாக குறிப்பிடுகிறார்: "பிள்ளைகளே, அவருடைய நாமத்தினிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன்" (1 யோவான் 2:12). இயேசுவையல்லாமல் வேறொருவராலும் பாவத்தை மன்னிக்கமுடியாது.

பரலோகத்தில் நித்திய காலமாக வாழ்கிற நித்திய ஜீவன் அருளப்படுவது கிறிஸ்து மூலமாக மட்டுமே ஆகும். இயேசு இப்படியாக ஜெபம் செய்தார்: "ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்" (யோவான் 17:3). இந்த இலவச பரிசாகிய இரட்சிப்பினை பெறுவதற்கு, நாம் இயேசுவை மட்டுமே நோக்கி பார்க்கவேண்டும். நமது பாவ கடனை செலுத்துவதற்காக இயேசு சிலுவையில் மரித்தார் என்றும் மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார் என்றும் நாம் நம்ப வேண்டும். “அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை" (ரோமர் 3:22).

இயேசுவினுடைய ஊழியத்தின் ஒரு கட்டத்தில், அவரைப் பின்பற்றின கூட்டத்தாரில் பலர் அவரைவிட்டு திரும்பி வேறொரு இரட்சகரை தேடி போய்விட்டார்கள். அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: “நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ” என்றார்" (யோவான் 6:67). அப்பொழுது பேதுரு அளித்த பதில் சரியான பதிலாக இருந்தது: “ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான்” (யோவான் 6:68-69). பேதுரு பகிர்ந்துகொண்ட விசுவாசதைப்போலவே இயேசு கிறிஸ்துவில் மட்டுமே நித்திய ஜீவன் இருக்கிறது என நாம் அனைவரும் பகிர்ந்து கொள்வோமாக!

நீங்கள் இப்பக்கத்தை படித்து இருக்கிறீர்கள், இதனால் இயேசுவிற்காக ஒரு முடிவு எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “கிறிஸ்துவை நான் இன்று ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்
English



முகப்பு பக்கம்

பரலோகத்திற்கு போகிறதற்கு ஒரே வழி இயேசு மட்டும்தானா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries