கேள்வி
இயேசு தேவனென்றால், அவர் தேவனிடம் எப்படி ஜெபிக்க முடியும்? இயேசு தன்னிடமே ஜெபித்துக்கொள்ளுகிறாரா?
பதில்
பூமியில் வந்த தேவனாகிய இயேசு பரலோகத்திலுள்ள தமது பிதாவிடம் ஜெபித்ததை புரிந்துகொள்வதற்கு, நித்திய பிதாவும் நித்திய குமாரனுமாக ஒரு மனிதனின் வடிவத்தில் இயேசு இப்பூமிக்கு வருவதற்கு முன்பே நித்திய இருவரும் நித்திய உறவு கொண்டிருந்ததை நாம் உணர வேண்டியது அவசியமாக இருக்கிறது. யோவான் 5:19-27 வரையிலுள்ள வசனங்களை வாசியுங்கள், குறிப்பாக 23-ம் வசனத்தை வாசிக்கவும். அதில் பிதாவானவர் குமாரனை அனுப்பியதாக இயேசு கற்பிக்கிறார் (காண்க: யோவான் 15:10). இயேசு பெத்லகேமில் பிறந்தபோது அவர் தேவனுடைய குமாரனாகவில்லை. மாறாக அவர் எப்பொழுதும் நித்தியகாலமாக தேவனுடைய குமாரனாக இருந்தார், இப்பொழுதும் தேவனுடைய குமாரனாக இருக்கிறார், மற்றும் இனியும் அவர் தேவனுடைய குமாரனாக இருப்பார்.
ஏசாயா 9:6, “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்” என்பதை நமக்கு சொல்லுகிறது. இயேசு எப்பொழுதும் பரிசுத்த ஆவியோடும் சேர்ந்து திரித்துவத்தில் ஒரு பாகமாக இருக்கிறார். திரித்துவம் எப்பொழுதுமே இருக்கிறது, பிதாவாகிய தேவன், குமாரனாகிய தேவன், மற்றும் ஆவியாகிய தேவன் ஆகிய மூன்று தேவர்கள் அல்ல, ஆனால் ஒரே ஒரு தேவன் மூன்று ஆள்தன்மையுள்ள நபர்களாக இருகிறார். இயேசு அவரும் அவருடைய பிதாவும் ஒன்றாக இருப்பதாக போதித்தார் (யோவான் 10:30). அதாவது, அவர் மற்றும் அவரது பிதா ஆகிய இருவரும் ஒரே சாராம்சத்தில் ஒரே பொருளாக இருக்கின்றனர் என்று அர்த்தப்படுகிறது. பிதா, குமாரன் மற்றும் ஆவியானவர் தேவனாக உள்ள மூன்று சமமானவர்கள் ஆகும். இந்த மூவரும் தொடர்ந்து, ஒரு நித்திய உறவில் இருந்தார்கள் மற்றும் இருக்கிறார்கள்.
தேவனுடைய நித்திய குமாரனாகிய இயேசு பாவமற்ற மனித அவதாரத்தை ஏற்றுக்கொண்டபோது, அவர் தம்முடைய பரலோக மகிமையை விட்டுவிட்டு ஒரு அடிமையின் ரூபத்தை எடுத்துக்கொண்டார் (பிலிப்பியர் 2:5-11). தேவ-மனிதன் என்கிற நிலையில், அவர் பிதாவிற்கு கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது (எபிரெயர் 5:8). அவர் சாத்தானால் சோதிக்கப்பட்டார், மனிதரால் தவறாக குற்றம் சாட்டப்பட்டார், ஜனங்களால் நிராகரிக்கப்பட்டார், இறுதியில் சிலுவையில் அறையப்பட்டார். அவர் பரலோகத்திலிருக்கிற தம்முடைய பிதாவிடம் ஜெபித்ததன் காரணம் அவரிலிருந்து வல்லமையையும் (யோவான் 11:41-42) ஞானத்தையும் (மாற்கு 1:35; 6:46) பெற்றுக்கொள்ளுவதற்கான ஜெபமாக இருந்தது. அவரது ஜெபம் தமது பிதாவின் சித்தத்திற்கு ஒப்புகொடுத்து சார்ந்திருந்ததையும், பிதாவின் மீட்பின் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பிதாவை சார்ந்திருந்ததையும் அவரது பிரதான ஆசாரிய ஜெபம் காண்பிக்கிறதாக இருக்கிறது (யோவான் 17). அவருடைய ஜெபமானது அவர் இறுதியில் பிதாவின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து, நாம் தேவனுடைய பிரமாணங்களை மீறியதற்கான தண்டனையை (மரணத்தை) செலுத்தியதைக் காண்பிக்கிறது (மத்தேயு 26:31-46). மெய்யாகவே அவர் கல்லறையிலிருந்து சரீரத்தில் உயிர்த்தெழுந்து, பாவத்திலிருந்து மனந்திரும்பி அவரை இரட்சகராக நம்புகிறவர்களுக்கு மன்னிப்பையும் நித்திய ஜீவனையும் அளிக்கிறவரானார்.
பிதாவாகிய தேவனிடத்தில் தேவனாகிய குமாரன் ஜெபிக்கிறதினாலோ அல்லது பேசுகிறதினாலோ எந்தப் பிரச்சனையும் இல்லை. முன்னமே குறிப்பிட்டுள்ளபடி, கிறிஸ்து ஒரு மனிதனாக இப்பூமிக்கு வருவதற்கு முன்பே அவர்களுக்குள் நித்திய உறவு இருந்தது. இந்த உறவு சுவிசேஷங்களில் சித்தரிக்கப்பட்டுள்ள தேவனுடைய குமாரனின் உறவு, எவ்வாறு தேவனுடைய குமாரன் அவருடைய பிதாவின் சித்தத்தை நிறைவேற்றினார் என்பதைக் காண்பிக்கிறதாகவும், அவ்வாறு செய்வதன் மூலம் அவருடைய பிள்ளைகளுக்கு மீட்பைப் பெற்றுத்தந்ததையும் காண்பிக்கிறது (யோவான் 6:38). அவருடைய பரலோகப் பிதாவிற்கு கிறிஸ்துவின் தொடர்ச்சியான கீழ்ப்படிதல் அவருடைய ஜெப வாழ்க்கையின் மூலம் அதிகாரம் பெற்றதாக விளங்கியது. ஜெபிக்கிறதில் நாம் கிறிஸ்துவின் முன்மாதிரியை பின்பற்ற வேண்டும்.
பரலோகத்திலுள்ள தம் பிதாவோடு இயேசு கிறிஸ்து ஜெபித்ததினால் அவர் இந்த பூமியில் சிறிய தேவன் என்று அர்த்தமில்லை. பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதற்கு ஜெபம் எவ்வளவு முக்கியமென்று பாவமில்லாதவராக இயேசு இருந்தபோதிலும், இயேசு சித்தரிக்கிறார். இயேசு பிதாவிடம் ஜெபம் செய்தார் என்பது திரித்துவத்தில் அவருக்குண்டான அவரது உறவு பற்றியும், நம்முடைய தேவையான பெலனும் ஞானமும் பெறுவதற்கு தேவனியே சார்ந்து கொள்ளவேண்டும் என்பதற்கான முன்மாதிரியுமாக இருக்கிறார். தேவ-மனிதனாகிய கிறிஸ்துவைப் போல, தேவனோடுள்ள பிரமிக்கத்தக்க ஜெப வாழ்க்கை தேவைப்படுவதால், இன்று கிறிஸ்துவின் சீஷராக நாமும் நம்முடைய ஜெபவாழ்க்கையைக் கொண்டிருப்பது அவசியமாக இருக்கிறது.
English
இயேசு தேவனென்றால், அவர் தேவனிடம் எப்படி ஜெபிக்க முடியும்? இயேசு தன்னிடமே ஜெபித்துக்கொள்ளுகிறாரா?