கேள்வி
இயேசு இரட்சிக்கிறார் என்பதன் அர்த்தம் என்ன?
பதில்
"இயேசு இரட்சிக்கிறார்" என்பது பம்பர் ஸ்டிக்கர்களின் ஒரு பிரபலமான கோஷம், தடகள நிகழ்வுகளின் குறியீடுகள், மற்றும் சிறிய விமானங்களால் வானத்தில் இழுத்துச் செல்லப்படுகிற பதாகைகளாக வருகிறது. வருத்தகரமாக, "இயேசு இரட்சிக்கிறார்" என்ற சொற்றொடரைக் காணும் சிலர் மட்டுமே அதை உண்மையாகப் புரிந்துகொள்கிறார்கள். அந்த இரண்டு வார்த்தைகளிலும் மிகப்பெரிய சக்தியும் சத்தியமும் நிறைந்திருக்கிறது.
இயேசு இரட்சிக்கிறார், ஆனால் இயேசு யார்?
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரவேலில் வாழ்ந்த ஒரு மனிதராக இயேசுவை பெரும்பாலான மக்கள் புரிந்துகொள்கிறார்கள். உலகிலுள்ள எல்லா மதங்களும் இயேசுவை ஒரு சிறந்த ஆசிரியராகவும் / அல்லது ஒரு தீர்க்கதரிசியாகவும் கருதுகின்றன. இந்த விஷயங்கள் இயேசுவைக்குறித்த உண்மையான கூற்றுகளாக இருக்கிறது என்கிறபோதிலும், இயேசு உண்மையிலேயே யார் என்பதையும் அவர் எதற்காக இரட்சிக்கிறார் என்பதையும் அவர்கள் சரியாகக் கைப்பற்றவில்லை, மற்றும் அவர்கள் விளக்கமளிக்கவுமில்லை. இயேசு மனித உருவில் இருக்கும் தேவனாக இருக்கிறார் (யோவான் 1:1, 14). இயேசு தேவன், பூமிக்கு வந்த, உண்மையான மனிதன் (1 யோவான் 4:2). நம்மை இரட்சிப்பதற்காக தேவன் இயேசுவில் ஒரு மனிதனாக வந்தார். அது அடுத்த கேள்வியைக் கொண்டுவருகிறது: நாம் ஏன் இரட்சிக்கப்பட வேண்டும்?
இயேசு இரட்சிக்கிறார், ஆனால் நாம் ஏன் இரட்சிக்கப்பட வேண்டும்?
உயிரோடிருந்த அல்லது ஜீவிக்கிற ஒவ்வொரு மனிதனும் பாவம் செய்ததாக வேதாகமம் கூறுகிறது (பிரசங்கி 7:20, ரோமர் 3:23). பாவம் செய்தல் என்பது, சிந்தனை, வார்த்தை, அல்லது செயலில் தேவனுடைய பரிபூரண மற்றும் பரிசுத்தமான தன்மையை முரணாக இருக்கின்ற காரியங்கள் ஆகும். நம்முடைய பாவத்தின் காரணமாக, நாம் எல்லாரும் தேவனால் நியாயந்தீர்க்கப்பட பாத்திரர்களாக இருக்கிறோம் (யோவான் 3:18, 36). தேவன் பரிபூரணமாக நீதியுள்ளவராக இருக்கிறார், ஆகவே பாவம் மற்றும் தீமைகளை அவர் தண்டிக்க முடியாதபடி அனுமதிக்க இயலாது. தேவன் எல்லையற்றவர் மற்றும் நித்தியமானவர் என்பதால், எல்லா பாவங்களும் தேவனுக்கு விரோதமாக இருக்கிறது (சங்கீதம் 51:4), ஒரு முடிவற்ற மற்றும் நித்தியமான தண்டனை மட்டுமே அதற்குப் போதுமானதாக இருக்கிறது. நித்திய மரணம் மட்டுமே பாவத்திற்கு ஏற்ற நீதியுள்ள தண்டனையாக இருக்கிறது. அதனால்தான் நாம் இரட்சிக்கப்பட வேண்டும்.
இயேசு இரட்சிக்கிறார், ஆனால் அவர் எப்படி இரட்சிக்கிறார்?
நாம் எல்லையற்ற தேவனுக்கு எதிராக பாவம் செய்தபடியால், ஒரு வரையறுக்கப்பட்ட மனிதனாக நாம் நம்முடைய பாவங்களுக்காக அளவற்ற நேரங்களாக நமது விலைக்கிரயத்தை செலுத்த வேண்டும், அல்லது எல்லையற்ற நபராகிய (இயேசு) ஒரு முறை நம்முடைய பாவங்களுக்காக விலைக்கிரயத்தை செலுத்த வேண்டும். வேறு எந்தஒரு தேர்வும் இல்லை. நம்முடைய இடத்தில் மரித்ததன் மூலம் இயேசு நம்மை இரட்சிக்கிறார். இயேசு கிறிஸ்து என்னும் நபரில் தேவன் தம்மையே நம் சார்பாக பலியாக கொடுத்தார், அதனிமித்தம் எல்லையற்ற மற்றும் நித்திய தண்டனைக்குரிய விலையை அவரால் மட்டுமே செலுத்த முடியும் (2 கொரிந்தியர் 5:21; 1 யோவான் 2:2). ஒரு பயங்கரமான நித்திய விதியிலிருந்து நம்மை இரட்சிப்பதற்காக, பாவத்தின் விளைவாக நாம் அடையவேண்டிய தகுதியுள்ள தண்டனையை இயேசு தம்மீது எடுத்துக்கொண்டார். நம்மீது அவர் வைத்திருந்த அன்பின் காரணமாக, இயேசு தம் உயிரைக் கொடுத்தார் (யோவான் 15:13), நாம் சம்பாதித்த பாவ தண்டனையை செலுத்தினார், ஆனால் அதை நம்மால் செலுத்த முடியவில்லை. இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டார், அவருடைய மரணம் நம்முடைய பாவங்களுக்காக செலுத்தப்பட வேண்டிய தண்டனைக்கு போதுமானதாக இருந்தது என நிரூபிக்கப்பட்டது (1 கொரிந்தியர் 15).
இயேசு இரட்சிக்கிறார், ஆனால் யாரை அவர் இரட்சிக்கிறார்?
இரட்சிப்பின் ஈவைப்பெற்றுக்கொள்கிற அனைவருக்கும் இயேசு இரட்சிக்கிறார். பாவத்திற்குக் விலைக்கிரயமாக செலுத்த இயேசுவின் பலியில் மட்டுமே விசுவாசம் வைக்கும் அனைவரையும் இயேசு இரட்சிக்கிறார் (யோவான் 3:16; அப்போஸ்தலர் 16:31). இயேசுவின் பலி எல்லா மனிதகுலத்தின் பாவங்களுக்காக செலுத்த வேண்டிய விலைக்கிரயத்திற்கு போதுமானதாக இருக்கிறபோதினும், தம்முடைய இந்த மிக அருமையான ஈவுகளை இயேசுவை தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்கிறவர்களை மட்டுமே இரட்சிக்கிறார் (யோவான் 1:12).
நீங்கள் இப்பொழுது இயேசு இரட்சிக்கிறார் என்பதை புரிந்துகொண்டு, உங்கள் சொந்த இரட்சகராக அவரை நம்பி ஏற்றுக்கொள்ள விரும்பினால், அதை நீங்கள் மெய்யாகவே புரிந்துகொண்டு, பின்வருமாறு நம்புகிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், அதேபோல் விசுவாசத்தின் செயலாக, தேவனுக்கு கீழ்படிந்து பின்வருபவற்றை தேவனிடத்தில் சொல்லுங்கள். "ஆண்டவரே, நான் ஒரு பாவி என்பதை அறிந்திருக்கிறேன், நான் உமக்கு விரோதமாக பாவம் செய்திருக்கிறேன் என்றும் அதினிமித்தம் பாவத்திற்கான தண்டனையை அடைவதற்கு பாத்திரமாய் இருக்கிறேன் என்றும் அதினிமித்தமாக நித்தியமாக உம்மிலிருந்து பிரிக்கப்பட்டு இருப்பேன் என்றும் அறிந்திருக்கிறேன். நான் பெற்றுக்கொள்ள தகுதியில்லாத போதிலும், என்னை நேசித்து கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாக என்னுடைய பாவத்திற்கான தியாக பலியை ஏற்ப்படுத்தினதற்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் மன்னிப்பை பெறத்தக்கதாக நான் அடையவேண்டிய தண்டனையை இயேசு ஏற்றுக்கொண்டார் என விசுவாசிக்கிறேன். இந்த தருணத்திலிருந்து எனது வாழ்க்கையை பாவத்திற்காக அல்லாமல் உமக்காக வாழ உதவி செய்யும். நீர் எனக்கு தந்த இந்த ஆச்சரியமான இரட்சிப்புக்கு நன்றியுள்ளவனாக எனது மீதமுள்ள வாழ்நாளெல்லாம் வாழ உதவி செய்யும். இயேசுவே, என்னை இரட்சித்ததற்காக உமக்கு நன்றி!"
நீங்கள் இங்கே வாசித்த காரியங்கள் நிமித்தம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறீர்களா? அப்படியானால், கீழேயுள்ள “கிறிஸ்துவை நான் இன்று ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்கிற பொத்தானை அழுத்தவும்.
English
இயேசு இரட்சிக்கிறார் என்பதன் அர்த்தம் என்ன?