கேள்வி
இயேசுவுக்கு சகோதர சகோதரிகள் (உடன்பிறந்தவர்கள்) இருந்தார்களா?
பதில்
இயேசுவின் சகோதரர்கள் பல வேதாகம வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர். மத்தேயு 12:46, லூக்கா 8:19, மற்றும் மாற்கு 3:31, ஆகிய வசனங்கள் இயேசுவின் தாயும் அவரது சகோதரர்களும் அவரைப் பார்க்க வந்தனர் என்று கூறுகின்றன. இயேசுவுக்கு நான்கு சகோதரர்கள் இருப்பதாக வேதாகமம் சொல்கிறது: யாக்கோபு, யோசே, சீமோன், மற்றும் யூதா (மத்தேயு 13:55). இயேசுவிற்கு சகோதரிகள் இருந்ததாகவும் வேதாகமம் சொல்லுகிறது, ஆனால் அவர்களின் பெயரோ அல்லது எண்ணிக்கையோ குறிப்பிடப்படவில்லை (மத்தேயு 13:56). யோவான் 7:1-10 ல், இயேசுவின் சகோதரர்கள் பண்டிகைக்குச் செல்கின்றனர், இயேசுவோ பின்னாக இருந்தார். அப்போஸ்தலர் 1:14-ல் அவருடைய சகோதரர்களும் தாயாரும் சீஷர்களுடன் சேர்ந்து ஜெபம் செய்வதை விவரிக்கிறது. கலாத்தியர் 1:19ல் கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபை என்று குறிப்பிடுகிறார். இயேசு மெய்யாகவே ஒன்றுவிட்ட உடன்பிறந்தோரை கொண்டிருந்தார் என்பது இந்த வசனங்களின் மிக உயர்ந்த முடிவு.
இந்த "சகோதரர்கள்" உண்மையில் இயேசுவின் உறவினர்கள் என்று சில ரோமன் கத்தோலிக்கர்கள் கூறுகின்றனர். எனினும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், "சகோதரன்" என்பதற்கான குறிப்பிட்ட கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்த்தை மற்ற உறவினர்களைக் குறிக்கும் என்கிறபோதிலும், அதன் இயல்பான மற்றும் சொல்லர்த்தமான பொருள் ஒரு உடல்நிலை சகோதரர் என்பதாகும். "உறவினர்" என்கிற கிரேக்க வார்த்தை இருக்கிறது, ஆனால் அது பயன்படுத்தப்படவில்லை. மேலும், அவர்கள் இயேசுவின் உறவினர்களாக மட்டும் இருந்திருந்தால், இயேசுவின் தாயாரான மரியாளுடன் அவர்கள் இருப்பதை அடிக்கடி ஏன் விவரிக்க வேண்டும்? அவரது தாயார் மற்றும் அவருடைய சகோதரர்கள் அவரைப் பார்க்க வருவதற்கு, அவர் எழுத்தியல் பிரகாரமாக அவர்களுடைய இரத்தம் சம்பந்தப்பட்ட, தாயார் மற்றும் ஒன்றுவிட்ட உடன்பிறந்த சகோதரர்கள் என்பதைத்தவிர வேறொன்றுமில்லை.
இரண்டாவது ரோமன் கத்தோலிக்க வாதம் என்னவென்றால், இயேசுவின் சகோதரர்களும் சகோதரிகளும் யோசேப்பினுடைய முந்தைய திருமணத்திலிருந்து பிறந்த பிள்ளைகளாக இருந்தார்கள் என்பதாகும். மரியாளைக் காட்டிலும் யோசேப்பு அதிக வயதானவர், முன்பே திருமணமானவர், அநேக பிள்ளைகளையுடையவர், மனைவியை இழந்தவர் போன்ற கருத்தும் எண்ணமும் ஜோடிக்கப்பட்ட உண்மையற்ற கதையாகும், இதற்கு வேதாகாமத்தில் எந்த சான்றுகளும் அடிப்படையும் இல்லை. இதில் இருக்கிற பிரச்சனை என்னவென்றால், மரியாளை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர் யோசேப்பு திருமணம் செய்துகொண்டார் அல்லது பிள்ளைகளை கொண்டிருந்தார் என்பதற்கான ஒரு நிழல்கூட வேதாகமம் குறிப்பிடுவதில்லை. மரியாளை மணப்பதற்கு முன்பாக யோசேப்புக்கு குறைந்தது ஆறு குழந்தைகள் இருந்திருந்தால், யோசேப்பும் மரியாளும் பெத்லகேமுக்கு செல்லும்போது ஏன் குறிப்பிடப்படவில்லை (லூக்கா 2:4-7) அல்லது அவர்களது எகிப்தின் பயணம் (மத்தேயு 2:13-15) மற்றும் அவர்கள் நாசரேத்திற்கு பயணம் செய்தபோது (மத்தேயு 2:20-23) யோசேப்பின் பிள்ளைகளைப்பற்றி ஏன் குறிப்பிடவில்லை?
இந்த உடன்பிறப்புகள் யோசேப்பு மற்றும் மரியாளின் உண்மையான பிள்ளைகள் என்பதைத்தவிர வேறொன்றும் நம்புவதற்கு வேதாகமத்தில் காரணமில்லை. இயேசுவின் ஒன்றுவிட்ட உடன்பிறந்த சகோதரர்களையும் ஒன்றுவிட்ட உடன்பிறந்த சகோதரிகளையும் மறுத்து எதிர்ப்பவர்கள், வேதாகமத்தை சரியாக வாசித்து அதிலிருந்து கூறுகிறதில்லை, மாறாக மரியாளின் நிரந்தர கன்னித்தன்மையைக் குறித்து முன்னமே இருக்கிற கருத்திலிருந்தே இவ்வாறு கூறுகிறார்கள். ஆனால் இது வேதாகமம் உரைக்கிற காரியத்திற்கு முரணானதாகும்: “அவள் (மரியாள்) தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான் (யோசேப்பு).” இயேசுவிற்கு ஒன்றுவிட்ட உடன்பிறந்த சகோதரர்கள், ஒன்றுவிட்ட உடன்பிறந்த சகோதரிகள் மற்றும் ஒன்றுவிட்ட உடன்பிறப்புகள் இருந்தார்கள், அவர்கள் யோசேப்பு மற்றும் மரியாளின் பிள்ளைகள் ஆவர். இது தேவனுடைய வார்த்தையின் மிகத்தெளிவான மற்றும் நேரடிப் பொருள் கொண்டுள்ள போதனையாகும்.
English
இயேசுவுக்கு சகோதர சகோதரிகள் (உடன்பிறந்தவர்கள்) இருந்தார்களா?