கேள்வி
இயேசு கிறிஸ்து எவ்வகையில் தனித்துவமானவர்?
பதில்
1. அவர் தேவனுடைய தனித்துவமான ஒரே பேறான குமாரன் (சங்கீதம் 2:7, 11-12; யோவான் 1:14; லூக்கா 1:35).
2. அவர் நித்தியமானவர். அவர் கடந்த நித்திய காலத்திலிருந்து இருந்தார், அவர் நிகழ்காலத்தில் இருக்கிறார், மேலும் அவர் இனிவரும் எதிர்காலத்தில் எல்லா நித்தியத்திற்கும் இருப்பார் (யோவான் 1:1-3, 14; 8:58).
3. இயேசு ஒருவர் மட்டுமே நம்முடைய பாவங்களைச் சுமந்தார், அதனால் நாம் பாவமன்னிப்பு பெற்று அவற்றிலிருந்து இரட்சிக்கப்பட முடியும் (ஏசாயா 53; மத்தேயு 1:21; யோவான் 1:29; 1 பேதுரு 2:24; 1 கொரிந்தியர் 15:1-3).
4. பிதாவினிடம் செல்லுவதற்கு இயேசு மட்டுமே வழி (ஜான் 14:6; அப்போஸ்தலர் 4:12; 1 தீமோத்தேயு 2:5); இரட்சிப்புக்கு வேறு வழி இல்லை. நம்முடைய பாவத்திற்காக பரிபூரண நீதியை பரிமாறிக்கொண்ட ஒரே நீதிமான் அவர் மட்டுமே (2 கொரிந்தியர் 5:21).
5. இயேசுவிற்கு மட்டுமே அவரது சொந்த மரணத்தின் மீது அதிகாரம் இருந்தது மற்றும் அவரது ஜீவனை மீண்டும் எடுத்துக்கொள்ளும் திறன் இருந்தது (யோவான் 2:19, 10:17-18). அவரது உயிர்த்தெழுதல் "ஆவிக்குரியது" அல்ல, மாறாக சரீரப்பிரகாரமானது (லூக்கா 24:39). மரித்தோரிலிருந்து அவரது உயிர்த்தெழுதல், மீண்டும் ஒருபோதும் மரிக்காமல் இருப்பது, அவரை தேவனுடைய தனித்துவமான குமாரனாக வேறுபடுத்தியது (ரோமர் 1:4).
6. இயேசு மட்டுமே ஆராதனையை பிதாவுக்கு சமமாக ஏற்றுக்கொண்டார் (யோவான் 20:28-29; பிலிப்பியர் 2:6), மற்றும் மெய்யாகவே பிதாவாகிய தேவன், தேவனைக் கனப்படுத்துவது போலவே குமாரனும் கனப்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறார் (யோவான் 5:23). மற்ற அனைவரும், இயேசுவின் சீஷர்களோ அல்லது தேவதூதர்களோ, அந்த ஆராதனையை ஏற்றுக்கொள்ளாமல் முறையாக அவற்றை நிராகரிக்கிறார்கள் (அப்போஸ்தலர் 10:25-26; அப்போஸ்தலர் 14:14-15; மத்தேயு 4:10; வெளிப்படுத்துதல் 19:10, 22:9).
7. இயேசுவிற்கு தான் விரும்பியவர்களுக்கு ஜீவனை கொடுக்கும் வல்லமை இருக்கிறது (யோவான் 5:21).
8. பிதாவாகிய தேவன் நியாயந்தீர்க்கும்படி சகல நியாயத்தீர்ப்பையும் இயேசுவுக்கு வழங்கியுள்ளார் (யோவான் 5:22).
9. இயேசு பிதாவுடன் இருந்தார் மற்றும் சிருஷ்டிப்பில் நேரடியாக ஈடுபட்டார், மேலும் அவருடைய கைகளால்தான் அனைத்தும் ஒன்றாக சிருஷ்டிக்கப்பட்டு தாங்கப்படுகிறது (யோவான் 1:1-3; எபேசியர் 3:9; எபிரெயர் 1:8-10; கொலோசெயர் 1:17).
10. தற்போதைய இந்த யுகத்தின் முடிவில் உலகை ஆளுகைச் செய்வது இயேசுவே (எபிரெயர் 1:8; ஏசாயா 9:6-7; தானியேல் 2:35, 44; வெளிப்படுத்துதல் 19:11-16).
11. இயேசு மட்டுமே ஒரு கன்னிகையால் பிறந்தார், பரிசுத்த ஆவியால் கருத்தரிக்கப்பட்டார் (ஏசாயா 7:14; மத்தேயு 1:20-23; லூக்கா 1:30-35).
12. தான் தேவனுடைய பண்புகளைக் கொண்டிருப்பதாக இயேசு நிரூபித்தார் [எ.கா., பாவங்களை மன்னிக்கும் மற்றும் நோயாளிகளை குணப்படுத்தும் வல்லமை (மத்தேயு 9:1-7)]; காற்று மற்றும் கடல் அலைகளை அமைதிப்படுத்த (மாற்கு 4:37-41; சங்கீதம் 89:8-9); நம்முடன் பரிபூரணமாக பழகுவது, நம்மை முற்றிலும் அறிய, (சங்கீதம் 139; யோவான் 1:46-50, 2:23-25), மரித்தவர்களை உயிரோடு எழுப்புவது (யோவான் 11; லூக்கா 7:12-15, 8:41-55) போன்றவை அடங்கும்.
13. மேசியாவின் பிறப்பு, வாழ்க்கை, உயிர்த்தெழுதல், ஆள்தன்மை மற்றும் நோக்கம் குறித்து ஏராளமான தீர்க்கதரிசனங்கள் உள்ளன. அனைத்தும் அவரால் நிறைவேறியது வேறு யாரும் இல்லை (ஏசாயா 7:14; மீகா 5:2; சங்கீதம் 22; சகரியா 11:12-13, 13:7; ஏசாயா 9:6-7; ஏசாயா 53; சங்கீதம் 16:10).
English
இயேசு கிறிஸ்து எவ்வகையில் தனித்துவமானவர்?