கேள்வி
யோவான் ஸ்நானகன் உண்மையில் மறுபிறவி எடுத்த எலியாவா?
பதில்
மத்தேயு 11:7-14 அறிவிக்கிறது, “இயேசு யோவானைக்குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப் பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ? அல்லவென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? மெல்லிய வஸ்திரந்தரித்திருக்கிறவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள். அல்லவென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கத்தரிசியைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அதெப்படியெனில், இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய் வழியை ஆயத்தம் பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான். ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன். யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள். நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு. நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்.'' இங்கே இயேசு மல்கியா 3:1-லிருந்து மேற்கோள் காட்டுகிறார், அங்கு தூதன் தோன்றப் போகிற ஒரு தீர்க்கதரிசன உருவமாகத் தெரிகிறது. மல்கியா 4:5 இன் படி, இந்த தூதன் "எலியா தீர்க்கதரிசி" ஆவார், அவரை இயேசு யோவான் ஸ்நானகன் என்று அடையாளம் காட்டுகிறார். யோவான் ஸ்நானகன் என்பவர் எலியாதான் மறுபிறவி எடுத்தார் என்று இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லவே இல்லை.
முதலாவதாக, இயேசுவை முதலில் கேட்போர் (மற்றும் மத்தேயுவின் முதல் வாசகர்கள்) மறுபிறப்பைக் குறிக்க இயேசுவின் வார்த்தைகளை ஒருபோதும் கருத மாட்டார்கள். அதுமட்டுமின்றி, எலியா மரிக்கவில்லை; அக்கினிரதமும் அக்கினிக் குதிரைகளும் வந்தபோது எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான் (2 இராஜாக்கள் 2:11). எலியாவின் மறுபிறவிக்காக (அல்லது உயிர்த்தெழுதல்) வாதிடுவது அந்த குறிப்பை இழக்கிறது. ஏதேனும் இருந்தால், எலியாவின் "வரவிருக்கும்" தீர்க்கதரிசனம், பரலோகத்திலிருந்து பூமிக்கு எலியாவின் சரீரத்தில் திரும்பியதாக கருதப்பட்டிருக்கும்.
இரண்டாவதாக, யோவான் ஸ்நானகன் "எலியா" என்று அழைக்கப்படுகிறார், ஏனென்றால் அவர் ஒரு நேரடி அர்த்தத்தில் எலியாவாக இருந்ததால் அல்ல மாறாக அவர் "எலியாவின் ஆவியிலும் வல்லமையிலும்" (லூக்கா 1:17) வந்ததால், என்று வேதாகமம் தெளிவாக உள்ளது. யோவான் ஸ்நானகன் புதிய ஏற்பாட்டில் முன்னோடியாக இருக்கிறார், அவர் பழைய ஏற்பாட்டில் எலியா அந்த பாத்திரத்தை நிரப்பியது போலவே, கர்த்தரின் வருகைக்கான வழியை சுட்டிக்காட்டுகிறார் (மற்றும் எதிர்காலத்தில் - வெளிப்படுத்துதல் 11 ஐப் பார்க்கவும்).
மூன்றாவதாக, யோவான் ஸ்நானகனின் மரணத்திற்குப் பிறகு இயேசு மறுரூப மலையில் மறுரூபமடைந்தபோது எலியா மற்றும் மோசேயுடன் தோன்றினார். எலியா தனது அடையாளத்தை யோவானின் அடையாளமாக மாற்றியிருந்தால் இது நடந்திருக்காது (மத்தேயு 17:11-12).
நான்காவது, மாற்கு 6:14-16 மற்றும் 8:28, ஜனங்கள் மற்றும் ஏரோது இருவரும் யோவான் ஸ்நானகன் மற்றும் எலியா ஆகியோருக்கு இடையே வேறுபாட்டைக் காட்டுகின்றனர்.
இறுதியாக, எலியா தான் இந்த யோவான் ஸ்நானகனாக மீண்டும் மறுபிறவி எடுக்கவில்லை என்பதற்கான ஆதாரம் யோவானிடமிருந்து வருகிறது. அப்போஸ்தலனாகிய யோவானின் நற்செய்தியின் முதல் அதிகாரத்தில், யோவான் ஸ்நானகன் தன்னை ஏசாயா 40:3 இன் தூதனா அடையாளப்படுத்துகிறார், மல்கியா 3:1 இன் எலியாவாக அல்ல. யோவான் ஸ்நானகன் அவர் எலியா என்பதை குறிப்பாக மறுக்கும் அளவிற்கு செல்கிறார் (யோவான் 1:19-23).
கர்த்தருடைய வருகைக்காக எலியா செய்ய வேண்டியதை யோவான் இயேசுவுக்காகச் செய்தார், ஆனால் அவர் எலியா மீண்டுமாய் மறுபிறவி எடுத்து வந்தவரல்ல. யோவான் ஸ்நானகனை எலியா என்று இயேசு அடையாளம் காட்டினார், யோவான் ஸ்நானகன் அந்த அடையாளத்தை நிராகரித்தார். இந்த இரண்டு போதனைகளையும் நாம் எவ்வாறு ஒத்திசைப்பது? யோவான் ஸ்நானகனை இயேசு அடையாளப்படுத்தியதில் ஒரு முக்கிய சொற்றொடர் உள்ளது, அதை கவனிக்காமல் விடக்கூடாது. "நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால, அவன் எலியா" என்று அவர் கூறுகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யோவான் ஸ்நானகன் எலியாவாக அடையாளம் காணப்படுவது அவர் உண்மையான எலியாவாக இருக்கவில்லை, ஆனால் அவரது பாத்திரத்திற்கு ஜனங்கள் அளித்த பதிலின் பேரில் கணிக்கப்பட்டது. இயேசுவை நம்பத் தயாராக இருந்தவர்களுக்கு, யோவான் ஸ்நானகன் எலியாவாக செயல்பட்டார், ஏனென்றால் அவர்கள் இயேசுவைக் கர்த்தராக நம்பினார்கள். இயேசுவை நிராகரித்த மதத் தலைவர்களுக்கு, யோவான் ஸ்நானகன் இந்தச் செயலைச் செய்யவில்லை.
English
யோவான் ஸ்நானகன் உண்மையில் மறுபிறவி எடுத்த எலியாவா?