settings icon
share icon
கேள்வி

யூதமதம் என்றால் என்ன, மற்றும் யூதர்கள் எதை நம்புகிறார்கள்?

பதில்


யூதமதம் என்றால் என்ன, ஒரு யூதன் என்றால் யார் அல்லது என்ன? யூதமதம் வெறுமனே ஒரு மதமா? இது ஒரு கலாச்சார அடையாளமா அல்லது ஒரு இனக்குழுவா? யூதர்கள் மக்களின் ஒரு குலமா அல்லது அவர்கள் ஒரு தேசமா? யூதர்கள் எதை நம்புகிறார்கள், அவர்கள் அனைவரும் ஒரே விஷயங்களை நம்புகிறார்களா?

ஒரு "யூதன்" என்பதற்கான அகராதி வரையறைகளில் "யூதா கோத்திரத்தின் உறுப்பினர்", "ஒரு இஸ்ரவேலன்", "கி.மு. 6-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 1-ஆம் நூற்றாண்டு வரையிலுள்ள காலக்கட்டத்தில் பாலஸ்தீனத்தில் இருந்த ஒரு தேசத்தின் உறுப்பினர்,” “ பண்டைய யூத மக்களின் வம்சாவளி அல்லது மாற்றத்தின் மூலம் தொடர்ச்சியைச் சேர்ந்த ஒருவர் ”மற்றும்“ யூதமதத்தை தனது மதமாகக் கொண்டவர்.”

ரபிகளுடைய யூத மதத்தின்படி, ஒரு யூதன் ஒரு யூதத் தாயைக் கொண்டவர் அல்லது முறையாக யூத மதத்திற்கு மாறியவர். இந்த நம்பிக்கைக்கு நம்பகத்தன்மையை வழங்க லேவியராகமம் 24:10 பெரும்பாலும் மேற்கோள் காட்டப்படுகிறது, இருப்பினும் தோரா இந்த மரபுக்கு ஆதரவாக எந்தஒரு குறிப்பிட்ட கூற்றையும் கூறவில்லை. சில ரபீக்கள் ஒரு தனிமனிதன் உண்மையில் என்னத்தை நம்புகிறார் என்பதோடு எந்த தொடர்பும் இல்லை என்று கூறுகிறார்கள். யூதர்கள் யூதர்களாக கருதப்படுவதற்கு யூத சட்டங்களையும் பழக்கவழக்கங்களையும் பின்பற்றுபவராக இருக்க தேவையில்லை என்று இந்த ரபீக்கள் சொல்கிறார்கள். உண்மையில், ஒரு யூதருக்கு தேவன் மீது எந்த நம்பிக்கையும் இருக்க வேண்டியதில்லை என்கிறார்கள், இருப்பினும் மேற்கண்ட ரபிக்களின் விளக்கத்தின் அடிப்படையில் யூதராக இருக்க முடியும்.

ஒரு நபர் தோராவின் கட்டளைகளைப் பின்பற்றி மைமோனிடைஸின் (இடைக்காலத்தின் மிகப் பெரிய யூத அறிஞர்களில் ஒருவரான ரபி மோஷே பென் மைமோன்) “விசுவாசத்தின் பதின்மூன்று கோட்பாடுகளை” ஏற்றுக் கொள்ளாவிட்டால் அவர் ஒரு யூதராக இருக்க முடியாது என்பதை மற்ற ரபீக்கள் தெளிவுபடுத்துகிறார்கள். இந்த நபர் ஒரு "உயிரியல் வினைமுறையில்" அதாவது யூதர்களுடைய குடும்பத்தில் பிறக்கின்ற பிறப்பின் மூலமாக யூதராக இருக்கலாம் என்றாலும், அவருக்கு யூத மதத்துடன் உண்மையான தொடர்பு இல்லை.

தோராவில் - வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்கள் - ஆதியாகமம் 14:13வது வசனம், ஆபிராம் முதல் யூதராக பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட “எபிரேயர்” என்று விவரிக்கப்படுவதைக் கற்பிக்கிறது. “யூதன்” என்ற பெயர் யாக்கோபின் பன்னிரண்டு மகன்களில் ஒருவரான இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களில் ஒருவரான யூதாவின் பெயரிலிருந்து வந்தது. வெளிப்படையாக “யூதர்” என்ற பெயர் முதலில் யூதா கோத்திரத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்களை மட்டுமே குறித்தது, ஆனால் சாலோமோனின் ஆட்சியின் பின்னர் ராஜ்யம் பிரிக்கப்பட்டபோது (1 ராஜா. 12), இந்த சொல் யூதா ராஜ்யத்தில் உள்ள எவரையும் குறிக்கிறது, அதில் யூதா, பெஞ்சமின் மற்றும் லேவி கோத்திரங்கள் அடங்கும். இன்று, ஒரு யூதர் அவர் எந்த அசல் பன்னிரண்டு கோத்திரங்களில் இருந்து வந்தவர் என்பதைப் பொருட்படுத்தாமல் ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபின் சரீரப்பிரகாரமான வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று பலர் நம்புகிறார்கள்.

எனவே, யூதர்கள் எதை நம்புகிறார்கள், யூத மதத்தின் அடிப்படை கற்பனைகள் யாவை? இன்று யூத மதத்தின் ஐந்து முக்கிய வடிவங்கள் அல்லது பிரிவுகள் உள்ளன. அவர்கள் வைதீகமான, பழைமைவாத, சீர்திருத்தப்பட்ட, புனரமைப்பு மற்றும் மனிதநேயவாதிகள் ஆகியோர் அடங்கும். ஒவ்வொரு குழுவிலும் உள்ள நம்பிக்கைகள் மற்றும் தேவைகள் வியத்தகு முறையில் வேறுபடுகின்றன; இருப்பினும், யூத மதத்தின் பாரம்பரிய நம்பிக்கைகளின் குறுகிய பட்டியலில் பின்வருவன அடங்கும்:

தேவன் எல்லாவற்றையும் படைத்தவர்; அவர் ஒரே ஒருவர், ஆவியானவர் (ஒரு சரீரம் இல்லாதவர்), அவர் மட்டுமே பிரபஞ்சத்தின் முழுமையான ஆட்சியாளராக வணங்கப்பட வேண்டும்.

எபிரேய வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்கள் மோசேயிக்கு தேவனால் வெளிப்படுத்தப்பட்டன. எதிர்காலத்தில் அவை மாற்றப்படவோ அதிகரிக்கப்படவோ மாட்டாது.

தேவன் யூத மக்களோடு தீர்க்கதரிசிகள் மூலம் தொடர்பு கொண்டார்.

மனிதர்களின் செயல்பாடுகளை தேவன் கண்காணிக்கிறார்; அவர் தனிநபர்களுக்கு அவர்களின் நற்செயல்களுக்கு தக்கதாக வெகுமதி அளிக்கிறார், அதேவேளையில் தீமையை தண்டிப்பார்.

கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கையின் பெரும்பகுதியை யூதர்களைப் போலவே அதே எபிரெய வேதாகமத்திலும் அடிப்படையாகக் கொண்டாலும், நம்பிக்கையில் பெரிய வேறுபாடுகள் உள்ளன: யூதர்கள் பொதுவாக செயல்களையும் நடத்தைகளையும் முதன்மை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகின்றனர்; நம்பிக்கைகள் செயல்களிலிருந்து வெளிவருகின்றன. பழமைவாத கிறிஸ்தவர்களுடன் இது முரண்படுகிறது, அவர்களுக்கு நம்பிக்கை முதன்மை முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் செயல்கள் அந்த நம்பிக்கையின் விளைவாகும்.

அசல் பாவம் (அதாவது ஏதேன் தோட்டத்தில் தேவனின் அறிவுறுத்தல்களுக்கு கீழ்ப்படியாதபோது எல்லா மக்களும் ஆதாம் மற்றும் ஏவாளின் பாவத்தை மரபுரிமையாகப் பெற்றார்கள் என்ற நம்பிக்கை) என்ற கிறிஸ்தவ கருத்தை யூத நம்பிக்கையானது ஏற்கவில்லை.

யூத மதம் உலகத்தின் மற்றும் அதன் மக்களின் உள்ளார்ந்த நன்மையை தேவனுடைய படைப்புகளாக உறுதிப்படுத்துகிறது.

யூத விசுவாசிகள் மிட்ஸ்வொத்தை (அதாவது தெய்வீக கட்டளைகளை) நிறைவேற்றுவதன் மூலம் தங்கள் வாழ்க்கையை புனிதப்படுத்தவும் தேவனிடம் நெருங்கி வரவும் முடியும்.

எந்த மீட்பரும் தேவையில்லை அல்லது ஒரு மத்தியஸ்தராக ஒருவரும் கிடைக்கவில்லை.

லேவியராகமம் மற்றும் பிற புத்தகங்களில் காணப்படும் 613 கட்டளைகள் யூத வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் கட்டுப்படுத்துகின்றன. யாத்திராகமம் 20:1-17 மற்றும் உபாகமம் 5:6-21 ஆகியவற்றில் வரையறுக்கப்பட்டுள்ள பத்து கட்டளைகள், நியாயப்பிரமாணத்தின் சுருக்கமான சுருக்கத்தை உருவாக்குகின்றன.

மேசியா (தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்) எதிர்காலத்தில் வந்து யூதர்களை இஸ்ரவேல் தேசத்தில் மீண்டும் கூட்டிச்சேர்ப்பார். அந்த நேரத்தில் இறந்தவர்களின் பொதுவான உயிர்த்தெழுதல் இருக்கும். கி.பி. 70 இல் ரோமர்களால் அழிக்கப்பட்ட எருசலேம் தேவாலயம் மீண்டும் கட்டப்படும்.

இயேசுவைப் பற்றிய நம்பிக்கைகள் கணிசமாக வேறுபடுகின்றன. சிலர் அவரை ஒரு சிறந்த தார்மீக போதகராக கருதுகிறார்கள். மற்றவர்கள் அவரை ஒரு கள்ளத்தீர்க்கதரிசி அல்லது கிறிஸ்தவத்தின் விக்கிரகம் என்று காண்கிறார்கள். விக்கிரகத்தின் பெயரைச் சொல்வதைத் தடைசெய்ததன் காரணமாக யூத மதத்தின் சில பிரிவுகள் அவருடைய பெயரைக் கூட சொல்ல மாட்டார்கள்.

யூதர்கள் பெரும்பாலும் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனம் என்று குறிப்பிடப்படுகிறார்கள். இதன் பொருள் அவர்கள் எந்த வகையிலும் மற்ற குழுக்களை விட உயர்ந்தவர்கள் என்று கருதப்படுவதில்லை. தோராவைப் பெறுவதற்கும் படிப்பதற்கும், தேவனை மட்டுமே வணங்குவதற்கும், ஓய்வுநாளில் ஓய்வெடுப்பதற்கும், பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கும் தேவன் இஸ்ரவேலைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்று யாத்திராகமம் 19:5 போன்ற வேதாகம வசனங்கள் கூறுகின்றன. யூதர்கள் மற்றவர்களை விட சிறந்தவர்களாக தேர்ந்தெடுக்கப்படவில்லை; அவர்கள் வெறுமனே புறஜாதியினருக்கு ஒரு வெளிச்சமாகவும், எல்லா தேசங்களுக்கும் ஒரு ஆசீர்வாதமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

English



முகப்பு பக்கம்

யூதமதம் என்றால் என்ன, மற்றும் யூதர்கள் எதை நம்புகிறார்கள்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries