கேள்வி
நாம் பாவம் செய்யும்போது கர்த்தராகிய தேவன் நம்மை எப்போது, ஏன், எப்படி சீர்ப்பொருந்தப்பண்ணுகிறார்?
பதில்
தேவனுடைய ஒழுங்கு நடவடிக்கை என்பது விசுவாசிகளுக்கு பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்ட உண்மையாக இருக்கிறது. அவை நம்முடைய சொந்த பாவத்தின் விளைவுகள் என்பதையும், அந்த பாவத்திற்கான கர்த்தருடைய அன்பான மற்றும் கிருபையான ஒழுக்கத்தின் ஒரு பகுதியும் என்பதை உணராமல் நம் சூழ்நிலைகளைப் பற்றியே அடிக்கடி புகார் செய்கிறோம். இந்தப்படியான சுயநல அறியாமை ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் பழக்கமான பாவத்தை உருவாக்குவதற்கு பங்களிக்கும், அது மேலும் ஒரு பெரிய ஒழுங்கு நடவடிக்கையை ஏற்படுத்தும்.
ஒழுங்கு நடவடிக்கையானது குளிர்ந்த-இருதயத்துடன் உள்ள தண்டனையுடன் சேர்த்து குழப்பமடையக்கூடாது. கர்த்தருடைய ஒழுங்கு நடவடிக்கை நம்மீது அவர் வைத்திருக்கும் அன்பின் பிரதிபலிப்பாகும், நாம் ஒவ்வொருவரும் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்ற அவருடைய விருப்பத்தின் பிரதிபலிப்பாகும். “என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே. தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்” (நீதிமொழிகள் 3:11-12; எபிரெயர் 12:5-11 ஐயும் காண்க). மனந்திரும்புதலில் நம்மைத் தன்னிடம் கொண்டுவருவதற்கு தேவன் பரீட்சை, சோதனைகள் மற்றும் பல்வேறு இக்கட்டான நிலைகளைப் பயன்படுத்துவார். அவருடைய ஒழுங்கு நடவடிக்கையின் விளைவாக ஒரு வலுவான நம்பிக்கை மற்றும் தேவனுடனான புதுப்பிக்கப்பட்ட உறவு (யாக்கோபு 1:2-4), குறிப்பிட்ட பாவம் நம்மீது வைத்திருந்த பிடியை அழிப்பதைக் குறிப்பிடவில்லை.
கர்த்தருடைய ஒழுங்கு நடவடிக்கை நம்முடைய நன்மைக்காக செயல்படுகிறது, அவர் நம் வாழ்வில் மகிமைப்படுவார். பரிசுத்த வாழ்க்கையை, தேவன் நமக்குக் கொடுத்த புதிய சுபாவத்தைப் பிரதிபலிக்கும் வாழ்க்கையை நாம் வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார்: “உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே” (1 பேதுரு 1:15-16).
English
நாம் பாவம் செய்யும்போது கர்த்தராகிய தேவன் நம்மை எப்போது, ஏன், எப்படி சீர்ப்பொருந்தப்பண்ணுகிறார்?