கேள்வி
மோர்மோனிஸம் ஒரு சமய மரபா? மோர்மோன்கள் எதை விசுவாசிக்கிறார்கள்?
பதில்
மோர்மோன் என்னும் சமய மரபைப் (போலி மதத்தை) பின்பற்றுபவர்கள் மோர்மோன்ஸ் மற்றும் பிந்தைய நாளின் பரிசுத்தவான்கள் (Latter Day Saints) என்று அழைக்கப்படுகின்றனர். இது 200 ஆண்டுகளுக்கு முன்பு ஜோசப் ஸ்மித் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது ஆகும். பிதாவாகிய தேவனும் கிறிஸ்துவும் தனிப்பட்ட முறையில் இவருக்கு தரிசனத்தில் வெளிப்பட்டதாகவும் மற்றும் அனைத்து திருசபைகள் மற்றும் அதனுடைய மதக் கோட்பாடுகள் அனைத்தும் அருவருப்பானது என்று சொன்னதாகவும் கூறினார். அதனால் ஜோசப் ஸ்மித் “பூமியின் மேலுள்ள ஒரே உண்மையான திருச்சபை” என்ற புதியதான ஒரு மார்க்கத்தை ஆரம்பித்தார். மோர்மோனிஸத்தின் பிரச்சனை என்னவென்றால், முரண்பாடுகள், திருத்தம் செய்தல் மற்றும் வேதாகமத்தை இன்னும் விரிவானதாக கொண்டு வருதல் போன்றவைகளாகும். வேதாகமம் உண்மையில்லை மற்றும் போதுமானது இல்லை என்று விசுவாசிக்க கிறிஸ்தவர்களுக்கு எந்த காரணமும் இல்லை. உண்மையில் தேவனை விசுவாசித்தல் மற்றும் நம்புதல் என்பது அது வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது அதாவது தேவனிடத்திலிருந்து வந்தது என்று அவருடைய வார்த்தையை விசுவாசிப்பது ஆகும் (2 தீமோத்தேயு 3:16).
தேவனால் ஏவப்பட்ட வார்த்தைகளுக்கு ஒன்றல்ல நான்கு ஆதாரங்கள் உள்ளன என்று மோர்மோன்கள் விசுவாசிக்கின்றனர்: 1) வேதாகமம், அதாவது சரியாக மொழிபெயர்க்கப்பட்டது. எந்த வசனங்கள் எல்லாம் சரியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளனவோ அவைகள் யாவும் தெளிவாக சொல்லப்படவில்லை. 2) மோர்மோனின் புத்தகம், இது ஜோசப் ஸ்மித்தினால் மொழிபெயர்க்கப்பட்டு 1830-ல் வெளியிடப்பட்டது. இதனில் உள்ள ஆலோசனையின் படி நடப்பதன் மூலம் எந்த ஒரு நபரும் தேவனிடத்தில் சேர உதவும் இப் புத்தகத்தை தவிர இந்த பூமியில் மிக சரியான புத்தகம் வேறு ஒன்றும் இல்லை என்று சிமித் கூறுகிறார். 3) உபதேசம் மற்றும் உடன்படிக்கைகள், இது “மீட்கப்பட்ட இயேசுகிறிஸ்துவின் திருச்சபையை” பற்றிய புதிய வெளிப்பாடுகளை உள்ளடக்கியது. 4) விலைமதிக்க முடியாத முத்து, இது வேதாகமத்தில் விடுபட்ட உபதேசங்கள் மற்றும் போதனைகளை குறித்த விளக்கத்தை கொடுக்கிறது என்று மோர்மோன்கள் கருதுகின்றனர், மற்றும் இதில் பூமி சிருஷ்டிக்கப்பட்டதை குறித்த சில குறிப்புகளை காணலாம்.
தேவனை பற்றி மோர்மோன்கள் கீழ்கண்டவாரு விசுவாசிக்கின்றனர்: தேவன் எப்பொழுதும் இப்பிரபஞ்சத்தின் மேலான ஜீவியாக இருப்பது இல்லை ஆனால் நீதியுள்ள வாழ்க்கை மற்றும் தொடர்ச்சியான முயற்ச்சியினால் தேவன் அந்த நிலையை அடைகிறார். பிதாவாகிய தேவன் மனிதனைப்போல சரீரம் மற்றும் எலும்புகள் உள்ள தொட்டறியக் கூடிய ரூபம் உடையவர் ஆகும். நவீன மோர்மோன் தலைவர்கள் மறுதலித்தாலும், ஆதாமே தேவன் மற்றம் இயேசு கிறிஸ்துவின் தகப்பன் என்றும் ப்ரிகாம் யங் (Brigham Young) போதிக்கிறார். இதற்கு முரண்பாடாக கிறிஸ்தவர்களின் தேவனை குறித்த விசுவாசம்: ஒரே ஒரு உண்மையான தேவனே உண்டு (உபாகமம் 6:4; ஏசாயா 43:10; 44:6-8) அவர் எப்பொழுதும் இருக்கிறார் மற்றும் எப்பொழுதும் இருப்பார் (உபாகமம் 33:27; சங்கீதம் 90:2; 1தீமோத்தேயு 1:17 ) அவர் சிருஷ்டிக்கப்பட்டவர் அல்ல அவரே சிருஷ்டிகர் (ஆதியாகமம் 1; சங்கீதம் 24:1; ஏசாயா 37:16 ). அவர் பூரணமானவர் அவருக்கு ஈடு இணை யாருமில்லை (சங்கீதம் 86:8; ஏசாயா 40:25). பிதாவாகிய தேவன் மனிதன் அல்ல அவர் ஒருபோதும் மனிதனாக மாட்டார் (எண்ணாகமம் 23:19; 1சாமுவேல் 15:29; ஓசியா 11:9). அவர் ஆவியானவர் (யோவான் 4:24), மாம்சமும் எலும்புகளாலும் உருவாக்கப்படாத ஆவி ஆவார் (லூக்கா 24:39).
மரணத்திற்கு பின்புள்ள மறுவாழ்வில் வெவ்வேறு அளவிளான தேவனுடைய ராஜ்யங்கள் உண்டு என்று மோர்மோன்கள் விசுவாசிக்கின்றனர். அவைகள் வானுல ராஜ்யம், புவி சார்ந்த ராஜ்யம், டெலிஸ்டியல் ராஜ்யம் மற்றும் வெளிப்புரமான இருள் என்பவைகளே ஆகும். இந்த வாழ்க்கையில் மனிதனுடைய விசுவாசம் மற்றும் செயல் எத்தன அடிப்படையில் இருக்கிறதோ அதைப்பொருத்து அவர்களுடைய முடிவும் இருக்கும். இதற்கு முரண்பாடாக வேதாகமம் சொல்கிறது, நம்முடைய மரணத்திற்கு பின்பு நாம் பரலோகத்திற்கு போகிறோமா அல்லது நரகத்திற்கு போகிறோமா என்பது இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறோமா இல்லையா என்பதன் அடிப்படையில் தான் இருக்கிறது. விசுவாசிகளுக்கு அவர்கள் சரீரத்தை விட்டு பிரிகிறது என்றால் அது தேவனோடு இருப்பது என்று அர்த்தம் (1 கொரிந்தியர் 5:6-8). அவிசுவாசிகள் மரணத்திற்கு பின்பு நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள் அல்லது மரண பள்ளத்தாக்கிற்கு அனுப்பப்;படுவார்கள் (லூக்கா 16:22-23). இயேசுவின் இரண்டாம் வருகையில் நாம் புதிய சரீரத்தை பெறுவோம் (1 கொரிந்தியர் 15:50-54). விசுவாசிகளுக்கு புதிய வானமும் புதிய பூமியும் இருக்கும் (வெளிப்படுத்தல் 21:1) அவிசுவாசிகள் நித்திய அக்கினி கடலிலே தள்ளப்படுவார்கள் (வெளிப்படுத்தல் 20:11-15). மரணத்திற்கு பின்பு மீட்படைய இரண்டாம் வாய்ப்பு கிடையாது (எபிரேயர் 9:27).
இயேசு கிறிஸ்து மனிதனாக பிறந்தது பிதாவாகிய தேவனுக்கும் மரியாளுக்கும் இடையே ஏற்பட்ட உடலுறவின் விளைவே என்று மோர்மோன் தலைவர்கள் உபதேசிக்கின்றனர். இயேசு கிறிஸ்து தேவன் என்றும் ஆனால் எந்த மனிதனும் தேவனாக முடியும் என்பதே இருவர்களின் விசுவாசம் ஆகும். விசுவாசம் மற்றும் நற்கிரியையினால் இரட்சிப்பை அடையமுடியும் என்றும் மோர்மோன்கள் போதிக்கின்றனர். இதற்கு எதிராக யாரும் தேவனுடைய ஸ்தானத்தை அடைய முடியாது என்று கிறிஸ்தவர்கள் வரலாற்றுப்பூர்வமாக போதிக்கின்றனர் – அவர் மட்டுமே பரிசுத்தர் (1 சாமுவேல் 2:2). விசுவாசத்தினால் மட்டுமே நாம் தேவனுடைய பார்வையில் பரிசுத்தவான்களாக்கப்படுகிறோம் (1 கொரிந்தியர் 1:2) கிறிஸ்துவே தேவனுடைய ஒரேபேரான குமாரன் (யோவான் 3:16), அவர் ஒருவரே பாவமற்றவராக, குற்றமற்றவராக, வாழ்ந்தவர் மற்றும் இப்பொழுது பரலோகத்தில் உயர்ந்த ஸ்தானத்தில் விட்டிருப்பவர் (எபிரெயர் 7:26). கிறிஸ்துவும் தேவனும் ஒரே தன்மைகளை கொண்டவர்கள், இயேசு மட்டுமே மனிதனின் சாயலாக இப் பூமிக்கு வந்தார் (யோவான் 1:1-8; 8:56). இயேசு பலியாக தம்மைத்தாமே நமக்காக கொடுத்தார், தேவன் அவரை மரணத்திலிருந்து எழுப்பினார் மற்றும் ஒரு நாள் எல்லோரும் கிறிஸ்துவே தேவன் என்று அறிக்ககையிடுவார்கள் (பிலிப்பியர் 2:6-11). கிரியையினால் ஒருவன் பரலோகத்திற்கு போவது சாத்தியமில்லாத காரியம் ஆனால் அவரை விசுவாசித்தால் மட்டுமே இது சாத்தியம் (மத்தேயு 19:26). நாம் எல்லோரும் நம்முடைய பாவத்தின் நிமித்தம் நித்திய தண்டனையை அடைய பாத்திரவான்களாக இருந்தோம். ஆனால் தேவனுடைய எல்லையில்லா அன்பு மற்றும் கிருபையினால் நாம் அதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வழியைப் பெற்றிருக்கிறோம். “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்” (ரோமர் 6:23).
நிச்சயமாக தேவனையும் அவருடைய குமாரனையும் அறிவதே இரட்சிப்பை பெறுவதற்கான ஒரே ஒரு வழி ஆகும். இது கிரியையினால் பெறக் கூடியது அல்ல மாறாக விசுவாசத்தினால் பெறக்கூடியது ஆகும் (ரோமர் 1:17; 3:28). நாம் யாராக இருந்தாலும் எதை செய்திருந்தாலும் இந்த ஈவை பெற்றுக்கொள்ள முடியும் (ரோமர் 3:22). “அவராலேயன்றி வேறோருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும் படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறோரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை” (அப்போஸ்தலர் 4:12).
மோர்மோன்கள் வழக்கமாக நேசமான, அன்புள்ள மற்றும் தயவுள்ளவர்களானாலும், அவர்கள் தேவனுடைய தன்மை, கிறிஸ்துவின் மானுடத்தன்மை மற்றும் இரட்சிப்பை அடையும் வழிகள் ஆகியவைகளை திரித்து தவறாக மாற்றிப் போதிக்கிற போலியான மதத்தினால் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
English
மோர்மோனிஸம் ஒரு சமய மரபா? மோர்மோன்கள் எதை விசுவாசிக்கிறார்கள்?