settings icon
share icon
கேள்வி

நாம் ஏன் பழைய ஏற்பாட்டை படிக்க வேண்டும்?

பதில்


பழைய ஏற்பாட்டைப் படிக்க பல காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, பழைய ஏற்பாட்டில் புதிய ஏற்பாட்டில் காணப்படும் போதனைகள் மற்றும் நிகழ்வுகளுக்கு அஸ்திவாரம் போடப்பட்டுள்ளது. பைபிள் ஒரு முற்போக்கான வெளிப்பாடு ஆகும். நீங்கள் எந்த நல்ல புத்தகத்தில் முதல் பாதியை தவிர்த்து அதை படித்து முடிக்க முயற்சித்தால், நீங்கள் அதிலுள்ள கதாபாத்திரங்கள், சதி மற்றும் முடிவை புரிந்து கொள்ள கடினமானதாக இருக்கும். அதேப்போல, பழைய ஏற்பாட்டின் நிகழ்வுகள், பாத்திரங்கள், சட்டங்கள், பலி செலுத்தும் முறை, உடன்படிக்கை, மற்றும் வாக்குறுதிகளால் புதிய ஏற்பாடு முற்றிலும் புரிந்துகொள்ளப்படுகிறது.

நமக்கு புதிய ஏற்பாடு மட்டுமே இருந்து நாம் சுவிசேஷங்களுக்கு வருவோம் என்றால், யூதர்கள் ஏன் மேசியாவை (ஒரு இரட்சகராகிய ராஜாவை) தேடுகிறார்கள் மற்றும் எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியாது. இந்த மேசியா ஏன் வருகிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியாது (ஏசாயா 53 ஐ பார்க்கவும்), நசரேயனாகிய இயேசுவை மேசியாவாக அடையாளம் காண முடிந்த பல விரிவான தீர்க்கதரிசனங்களின் மூலம் நாம் அவரை அடையாளம் காண முடியவில்லை (உதாரணமாக, அவருடைய பிறந்த இடம் (மீகா 5:2), அவருடைய மரணம் (சங்கீதம் 22, குறிப்பாக வசனங்கள் 1, 7, 8, 14-18; 6921), அவரது உயிர்த்தெழுதல் (சங்கீதம் 16:10), மற்றும் இன்னும் அவரது ஊழியத்தைக் குறித்த அநேக விவரங்கள் (ஏசாயா 9:2; 52:13).

புதிய ஏற்பாட்டின் பிரகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள யூத பழக்கவழக்கங்களைப் புரிந்துகொள்வதற்கு பழைய ஏற்பாட்டின் ஒரு ஆய்வு மிக முக்கியமாகும். பரிசேயர்கள் தேவனுடைய பிரமாணத்தோடு தங்கள் சொந்த மரபுகளைச் சேர்ப்பதன் மூலம், அல்லது இயேசு ஏன் தேவாலய முற்றத்தில் தூய்மைபடுத்தினார், அல்லது இயேசு எதிரிகளுக்கு அவர் பல பதில்களை பயன்படுத்திய வார்த்தைகளை எங்கே கொண்டு வந்தார் போன்றவைகளை நாம் புரிந்துகொள்ள முடியாமல் போகும்.

பழைய ஏற்பாடு ஏராளமான விரிவான தீர்க்கதரிசனங்களைப் பதிவு செய்கிறது. இவைகள் வேதாகமம் மனிதனுடையதாக இல்லாமல் தேவனுடைய வார்த்தையாக இருந்தால் மட்டுமே நிவர்த்தியாகும் (உதாரணமாக, தானியேல் 7 மற்றும் பின்வரும் அதிகாரங்கள்). தானியேலின் தீர்க்கதரிசனங்கள் தேசங்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி பற்றிய குறிப்பிட்ட விவரங்களை அளிக்கின்றன. இந்தத் தீர்க்கதரிசனங்கள் மிகவும் துல்லியமாக இருக்கின்றன, உண்மையில், சந்தேகவாதிகள் இந்த சம்பவங்கள் யாவும் நடந்தேறினப்பின்பு உண்மையிலேயே எழுதப்பட்டிருப்பதாக நம்புவதற்குத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

பழைய ஏற்பாட்டை நாம் படிப்போமென்றால் அது நமக்குள்ள எண்ணற்ற பாடங்களைக் கொண்டுள்ளது. பழைய ஏற்பாட்டின் கதாபாத்திரங்களின் வாழ்க்கையை கவனிப்பதன் மூலம், நம் சொந்த வாழ்விற்கான வழிகாட்டுதலைக் காணலாம். தேவனை நம்புவதற்கு நாம் அறிவுறுத்தப்படுகிறோம் (தானியேல் 3). நம்முடைய நம்பிக்கைகளில் உறுதியாய் நிற்கவும் கற்றுக்கொள்வோம் (தானியேல் 1) மற்றும் விசுவாசத்தின் பலனுக்காக காத்திருத்தல் (தானியேல் 6). குற்றத்தை மாற்றுவதற்குப் பதிலாக பாவத்தை பாவம் என்று ஒப்புக்கொள்வது சிறந்தது (1 சாமுவேல் 15). நாம் பாவம் செய்யக் கற்றுக் கொள்ள மாட்டோம், ஏனெனில் அது நம்மைக் கண்டுபிடிக்கும் (நியாயாதிபதிகள் 13-16). நம்முடைய பாவத்தின் விளைவுகள் நமக்கு மட்டுமல்ல, நம்முடைய அன்புக்குரியவர்களுக்காகவும்தான் (ஆதியாகமம் 3) மற்றும் நம்முடைய நல்ல நடத்தை நமக்கு மற்றும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு பெரும் பலனை அளிக்கிறதென்று நாம் கற்றுக்கொள்கிறோம் (யாத்திராகமம் 20:5-6).

பழைய ஏற்பாட்டின் பகுத்தாய்வு மேலும் தீர்க்கதரிசனத்தை புரிந்துகொள்ள உதவுகிறது. பழைய ஏற்பாட்டில் யூதத் தேசத்துக்காக இன்னும் நிறைவேறப்போகும் பல வாக்குறுதிகள் உள்ளன. கிறிஸ்துவின் வருங்கால 1,000 ஆண்டு ஆட்சி எவ்வாறு யூதர்களுக்கு அவருடைய வாக்குறுதிகளை பூர்த்திசெய்கிறது, வேதாகமத்தின் முடிவை, நேரத்தின் தொடக்கத்தில் முறித்துக் கொண்டிருக்கும் தளர்வான முடிவுகளை எப்படிப் பெறுகிறது என்பதை பழைய ஏற்பாடு வெளிப்படுத்துகிறது.

சுருக்கமாக, பழைய ஏற்பாடு தேவனை எப்படி நேசிக்கவேண்டும், அவரை எப்படி சேவிக்க வேண்டுமென்றும் நமக்கு கற்றுக்கொடுக்கிறது, அது தேவனுடைய தன்மையைப் பற்றி மேலும் நமக்கு வெளிப்படுத்துகிறது. புனித நூல்களில் வேதாகமமானது ஏன் தனித்துவமானது என்று மீண்டும் மீண்டும் நிறைவேறிய எண்ணற்ற தீர்க்கதரிசனங்களின் மூலம் இது காட்டுகிறது – தேவனால் ஏவப்பட்ட வார்த்தை: அது என்னவென்று அது கூறுகிறது என்பதை மட்டுமே நிரூபிக்க முடியும். சுருக்கமாக, பழைய ஏற்பாட்டின் பக்கங்களில் நீங்கள் இன்னமும் ஈடுபடவில்லை என்றால், தேவன் உங்களுக்காக வைத்திருப்பதை நீங்கள் இழந்து தவிக்கிறீர்கள்.

English



முகப்பு பக்கம்

நாம் ஏன் பழைய ஏற்பாட்டை படிக்க வேண்டும்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries