settings icon
share icon
கேள்வி

பெலெஜியனிசம் என்றால் என்ன?

பதில்


பெலெஜியனிசம் என்பது, ஆதாமின் பாவம் எதிர்கால மனித தலைமுறையைப் பாதிக்கவில்லை என்கிறதான வேதாகமம் போதிக்காத அதற்கு எதிரான ஒரு போதனையாகும். பெலெஜியனிசத்தின் கூற்றுப்படி, ஆதாமின் பாவம் அவருடையது மட்டுமே, ஆதாமின் சந்ததியினர் அவர்களுக்கு கடத்திவிடப்பட்ட பாவ இயல்புகளை பெறவில்லை. தேவன் ஒவ்வொரு மனித ஆத்துமாவையும் நேரடியாக உருவாக்குகிறார், எனவே ஒவ்வொரு மனித ஆத்துமாவும் பாவத்திலிருந்து விடுபட்டு அப்பாவித்தனத்தில் தொடங்குகிறது. நாம் அடிப்படையில் மோசமானவர்கள் அல்ல என்று பெலெஜிய கொள்கை கூறுகிறது; மேலும் நாம் அடிப்படையில் நல்லவர்கள் என்கிறது.

கி.பி. 300-களின் பிற்பகுதியிலும் கி.பி 400-களின் முற்பகுதியிலும் வாழ்ந்த பெலஜியஸ் என்ற துறவியின் பெயரிலிருந்து பெலெஜியனிசம் என்னும் பெயரிடப்பட்டது. கிறிஸ்தவர்களிடையே பரிசுத்த வாழ்வை வளர்ப்பதற்கான முயற்சியாக பெலெஜியஸ் தனது பெயருடன் தொடர்புடைய இந்த கோட்பாட்டைக் கற்பிக்கத் தொடங்கினார். ஜனங்கள் பாவம் செய்தபோது, “என்னால் அதற்கு உதவ முடியாது, தவறு செய்வது என் இயல்பு” என்கிற காரணத்தைக் கேட்டு பெலெஜியஸ் மிகவும் சோர்வடைந்தார். ”அந்த சாக்குப்போக்கை எதிர்கொள்ள, பெலெஜியஸ் மனித விருப்பத்தின் சுதந்திரத்தை வலியுறுத்தினார், அடிப்படையில் எல்லா பாவங்களும் நன்மைக்கு மேலான தீமையை தெரிவுசெய்ததன் விளைவாகும் என்று கற்பித்தார்; எல்லா நேரத்திலும் நல்லது செய்ய சுதந்திரமாக தேர்ந்தெடுக்கும் திறன் அனைவருக்கும் உள்ளது என்று வலியுறுத்தினார். மேலும், ஆதாம் செய்த முதல் பாவம் வழியாக பரம்பரை பாவ இயல்பு போன்ற எதுவும் இல்லை என்பதால், ஆதாமை நாம் குறை சொல்ல முடியாது என்று கூறினார். தேவன் நம்மை நல்லவராகவே படைத்தார், எனவே பாவம் செய்வதற்கு யாருக்கும் கூறுவதற்கு ஒரு சாக்கு போக்கும் இல்லை. நீங்கள் பரிசுத்தமான வாழ்க்கையை வாழவில்லையென்றால், நீங்கள் போதுமான அளவு முயற்சி செய்யாததால் தான்.

பெலெஜியனிசம் பல இடங்களில் வேதாகமத்திற்கு முரணானது ஆகும். ஆதாமின் பாவம் நம்மீது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்ற கருத்தை ரோமர் 5 உறுதியாக மறுக்கிறது:

• “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று” (வசனம் 12).
• “ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்தார்கள்” (வசனம் 15).
• “ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது” (வசனம் 16).
• “ஒருவனுடைய மீறுதலினாலே அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டது” (வசனம் 17).
• “ஒருவனுடைய மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானது” (வசனம் 18).
• “ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டார்கள்” (வசனம் 19).

மேலும், நாம் கருத்தரித்த தருணத்திலிருந்து பாவமுள்ளவர்களாக இருக்கிறோம் என்று வேதாகமம் சொல்லுகிறது (சங்கீதம் 51:5). எல்லா மனிதர்களும் பாவத்தின் விளைவாகவே இறக்கின்றனர் (எசேக்கியேல் 18:20; ரோமர் 6:23).

மனிதர்கள் பாவத்தின் மீது இயல்பான விருப்பத்துடன் பிறக்கவில்லை என்று பெலெஜியனிசம் கூறும்போது, வேதாகமம் இதற்கு நேர்மாறாகக் கூறுகிறது (ரோமர் 3:10-18). குழந்தைகளை வளர்த்த எவரும் குழந்தைகளுக்கு எப்படி பாவம் செய்ய வேண்டும் என்று கற்பிக்க வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்த முடியும்; மாறாக, பாவத்தைத் தவிர்ப்பது மற்றும் புத்திசாலித்தனமாகவும், விவேகமாகவும், நீதியுடனும் எவ்வாறு நடந்துகொள்வது என்பதை அவர்கள் கவனமாகவும் தொடர்ச்சியாகவும் குழைந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும்.

தேவனுடைய கிருபைக்கு பதிலாக மனித சுதந்திரம் மற்றும் மன உறுதியை சார்ந்திருப்பதுதான் பெலெஜியனிசத்தின் அடிப்படை தவறு. இப்படி அவர்கள் கூறுவதினால், நமக்கு பரிசுத்தத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு உள்ளார்ந்த சக்தியை நாம் அனைவரும் கொண்டிருக்கிறோம் என்று சொல்வதினால், பெலெஜியஸ் தேவனுடைய கிருபையை எந்த விளைவையும் ஏற்படுத்தாத ஒரு பயனற்றதாக மாற்றினார். தேவனுடைய கிருபையானது நம்மை இரட்சிப்பதற்கு முன்பு, நம்முடைய பாவங்களில் நாம் “மரித்தவர்களாயிருந்தோம்” என்று வேதாகமம் கூறுகிறது (எபேசியர் 2:1); பெலெஜியனிசம் அது எல்லாவற்றையும் விட மோசமாக இல்லை என்று கூறுகிறது. தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதை நாம் தேர்வு செய்யலாம், மேலும், நம்முடைய உண்மையான தன்மையை மட்டுமே நாம் அறிந்திருந்தால், தேவனைப் பிரியப்படுத்தி நம்மை இரட்சித்துக் கொள்ளலாம் என்கிறது.

பெலெஜியஸ் மற்றும் அவரது தவறான கோட்பாடு அகஸ்டின் என்பவரால் எதிர்த்து போராடப்பட்டது மற்றும் கி.பி. 418-இல் கார்த்தேஜ் என்னும் ஆலோசனை சங்கத்தில் கண்டனம் செய்யப்பட்டது, அதே ஆண்டு பெலெஜியஸ் புறம்பாக்கப்பட்டார். எவ்வாறாயினும், இந்த கோட்பாடு மறைந்துவிடவில்லை, எபேசு ஆலோசனை சங்கம் (கி.பி. 431) மற்றும் பின்னர் திருச்சபை ஆலோசனை கூட்டங்களில் மீண்டும் இந்த கோட்பாடு கண்டிக்கப்பட வேண்டியதாயிருந்தது. பெலெஜியனிசம் இன்றுவரை நீடிக்கிறது மற்றும் கிறிஸ்துவைப் பின்பற்றுவது முதன்மையாக தேவனுடைய கிருபையின் எந்தவொரு இயற்கைக்கு அப்பாற்பட்ட தலையீட்டையும் தவிர்த்து நாம் செய்யும் ஒரு தேர்வாகும் என்று கூறும் எந்த போதனையிலும் அது காண்பிக்கப்படுகிறது. எந்த யுகத்திலும், எந்த வடிவத்திலும், பெலெஜியனிசம் வேதப்பூர்வமற்றது மற்றும் அது நிராகரிக்கப்பட வேண்டும்.

English



முகப்பு பக்கம்

பெலெஜியனிசம் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries