கேள்வி
வெளிப்படுத்தல் 22: 18-19 இல் கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை முழு வேதாகமத்துக்கும் பொருந்துமா அல்லது வெளிப்படுத்துதல் புத்தகத்திற்கு மட்டுமே பொருந்துமா?
பதில்
வெளிப்படுத்துதல் 22:18-19 இல் கூறப்பட்டுள்ள எச்சரிக்க வேதாகமப் பகுதிகளை மாற்றி சேதப்படுத்தும் எவருக்கும் உரியதாகும்: “இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.” இந்த வசனங்கள் முழு வேதாகமத்தையும் குறிக்கிறதா அல்லது வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தை மட்டும் குறிக்கிறதா?
வெளிப்படுத்தல் புத்தகத்தின் செய்தியை மாற்றி சிதைப்பவர்களுக்கு இந்த எச்சரிக்கை குறிப்பாக வழங்கப்படுகிறது. இயேசுவே வெளிப்படுத்தலின் எழுத்தாளர் மற்றும் அப்போஸ்தலனாகிய யோவானுக்கு தரிசனத்தை வழங்குபவர் அவரே (வெளிப்படுத்துதல் 1:1). அதுபோல, அவர் தீர்க்கதரிசனங்களின் இறுதி நிறைவேருதளையும் உறுதிசெய்து புத்தகத்தை முடிக்கிறார். இவை அவருடைய வார்த்தைகள், ஆகவே சேர்த்தல், நீக்குதல், பொய்மைப்படுத்துதல், மாற்றங்கள் செய்தல் அல்லது வேண்டுமென்றே தவறாகப் புரிந்துகொள்வதன் மூலம் அவற்றை எந்த வகையிலும் சிதைப்பதற்கு எதிராக அவர் கடுமையாக எச்சரிக்கிறார். எச்சரிக்கை மிகவும் வெளிப்படையானது மற்றும் கொடியது. புத்தகத்தில் உள்ள வெளிப்பாடுகளைக் கெடுக்கும் எவரும் குற்றவாளியாக கருதப்பட்டு வெளிப்படுத்தலின் வாதைகள் அவர்கள்மேல் வரும், மேலும் அவ்வாறு செய்பவர்களுக்கு பரலோகத்தில் நித்திய ஜீவனின் எந்தப் பகுதியும் இருக்காது.
வெளிப்படுத்தல் 22:18-19 இல் உள்ள எச்சரிக்கை வெளிப்படுத்தல் புத்தகத்திற்கு குறிப்பிட்டதாக இருந்தாலும், அதன் பின்னால் உள்ள பிரமாணமானது வேண்டுமென்றே தேவனுடைய வார்த்தையை சிதைக்கும் எவருக்கும் பொருந்தும். மோசே உபாகமம் 4:1-2-ல் இதேபோன்ற எச்சரிக்கையை கொடுத்தார், அங்கு அவர் இஸ்ரவேலர்களை கர்த்தருடைய கட்டளைகளைக் கேட்டு கீழ்ப்படியும்படி எச்சரித்தார், அவருடைய வார்த்தையைச் சேர்க்கவோ அல்லது நீக்கவோ இல்லை. நீதிமொழிகள் 30:5-6 தேவனுடைய வார்த்தைகளோடு சேர்க்கும் எவருக்கும் ஒத்த அறிவுரையைக் கொண்டுள்ளது: அவன் கடிந்துகொள்ளப்பட்டு மற்றும் ஒரு பொய்யன் என்று நிரூபிக்கப்படுவான். வெளிப்படுத்தல் 22:18-19 இல் உள்ள எச்சரிக்கை குறிப்பாக வெளிப்படுத்தல் புத்தகத்தைப் பற்றியது என்றாலும், அதன் பிரமாணமானது முழு தேவனுடைய வார்த்தையிலும் பயன்படுத்தப்பட வேண்டும். வேதாகமத்தின் செய்தியை சிதைக்காதபடி கவனமாகவும் பயபக்தியுடனும் கையாள நாம் கவனமாக இருக்க வேண்டும்.
English
வெளிப்படுத்தல் 22: 18-19 இல் கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை முழு வேதாகமத்துக்கும் பொருந்துமா அல்லது வெளிப்படுத்துதல் புத்தகத்திற்கு மட்டுமே பொருந்துமா?