settings icon
share icon
கேள்வி

வெளிப்படுத்தின விசேஷம் 12-ஆம் அதிகாரம் எதனை அர்த்தம் கொண்டுள்ளது?

பதில்


வெளிப்படுத்தின விசேஷம் 12-ஆம் அதிகாரத்தில், யோவான் ஒரு ஸ்திரீயைப் பற்றிய தரிசனத்தைப் பார்க்கிறார் "ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன" (வெளிப்படுத்துதல் 12:1). இந்த விளக்கத்திற்கும் யோசேப்பு தனது தந்தை யாக்கோபு (இஸ்ரவேல்) மற்றும் அவரது தாய் மற்றும் அவர்களின் பிள்ளைகள் பற்றிய விளக்கத்திற்கும் உள்ள ஒற்றுமையைக் கவனியுங்கள் (ஆதியாகமம் 37:9-11). பன்னிரண்டு நட்சத்திரங்கள் இஸ்ரேலின் பன்னிரண்டு கோத்திரங்களைக் குறிக்கின்றன. எனவே வெளிப்படுத்தல் 12 இல் உள்ள ஸ்திரீ இஸ்ரவேல்.

இந்த விளக்கத்திற்கான கூடுதல் ஆதாரம் என்னவென்றால், வெளிப்படுத்தல் 12:2-5 இந்த ஸ்திரீ குழந்தையுடன் இருப்பது மற்றும் பிரசவிப்பது பற்றி பேசுகிறது. மரியாள் இயேசுவைப் பெற்றெடுத்தது உண்மைதான் என்றாலும், யூதா கோத்திரத்தைச் சேர்ந்த தாவீதின் குமாரனாகிய இயேசு இஸ்ரவேலில் இருந்து வந்தார் என்பதும் உண்மை. ஒரு வகையில், இஸ்ரவேல் பெற்றெடுத்தது—அல்லது கொண்டுவந்தது—கிறிஸ்து இயேசுவை ஆகும். வசனம் 5 கூறுகிறது, அந்த ஸ்திரீயின் குழந்தை "சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை பெற்றாள்; அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும், எடுத்துக்கொள்ளப்பட்டது." மிகத்தெளிவாக, இது இயேசுவையே விவரிக்கிறது. இயேசு பரலோகத்திற்கு ஏறிப்போனார் (அப்போஸ்தலர் 1:9-11) மற்றும் ஒரு நாள் பூமியில் அவருடைய ராஜ்யத்தை நிறுவுவார் (வெளிப்படுத்துதல் 20: 4-6), அவர் அதை சரியான தீர்ப்புடன் ஆட்சி செய்வார் ("இரும்புக் கோலால்"; சங்கீதம் 2:7-9 ஐப் பார்க்கவும்).

1,260 நாட்களுக்கு வனாந்திரத்திற்கு ஸ்திரீயானவள் ஓடிப்போவது மகா உபத்திரவக் காலத்தைக் குறிக்கிறது. ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் என்பது 42 மாதங்கள் (ஒவ்வொன்றும் 30 நாட்கள்), இது 3 1/2 வருடங்களுக்கு சமம். உபத்திரவ காலத்தின் பாதியில், மிருகம் (அந்திக்கிறிஸ்து) எருசலேமில் கட்டப்படும் தேவாலயத்தில் தன்னுடைய சிலையை அமைத்துக் கொள்ளுவான். இது மத்தேயு 24:15 மற்றும் மாற்கு 13:14 இல் இயேசு பேசிய பாழாக்கும் அருவருப்பு இதுவேயாகும். மிருகம் இதைச் செய்யும்போது, அவன் இஸ்ரவேலுடன் செய்த சமாதான உடன்படிக்கையை முறித்துக் கொள்வான், மேலும் அந்த தேசம் பாதுகாப்பிற்காக தப்பி ஓட வேண்டும்—ஒருவேளை பெட்ராவுக்கு (பாறைக்கு) ஓடிப்போக வேண்டும் (மத்தேயு 24; தானியேல் 9:27யும் பார்க்கவும்). யூதர்களின் இந்த தப்பித்தல் ஸ்திரீயானவள் வனாந்தரத்துக்கு தப்பிச் செல்வது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

வெளிப்படுத்துதல் 12:12-17 இல் இஸ்ரவேலுக்கு எதிராக பிசாசு எவ்வாறு யுத்தம் செய்யப்போகிறது என்பதைக் குறித்துப் பேசுகிறது, அவளை அழிக்க முயல்கிறது என்று குறிப்பிடுகிறது (சாத்தானுக்கு அவனது காலம் மிகக் குறைவாக உள்ளது என்பதை அறிந்து, ஒப்பீட்டளவில் பேசுகிறான்--வெளிப்படுத்துதல் 20:1-3, 10 ஐப் பார்க்கவும்). வனாந்தரத்தில் இஸ்ரவேலை தேவன் பாதுகாப்பார் என்பதையும் இது வெளிப்படுத்துகிறது. வெளிப்படுத்துதல் 12:14 இஸ்ரவேல் பிசாசிடமிருந்து விலகி "ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப்படத்தக்கதாய்” ("ஒரு காலம்" = 1 வருடம்; "காலங்கள்" = 2 ஆண்டுகள்; "அரை காலம்" = ஒரு-அரை வருடம்; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், 3 1/2 ஆண்டுகள்) பாதுகாக்கப்படும்.

English



முகப்பு பக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் 12-ஆம் அதிகாரம் எதனை அர்த்தம் கொண்டுள்ளது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries