settings icon
share icon
கேள்வி

எந்த நாளில் சாபத் வருகிறது? கிறிஸ்தவர்கள் சாபத் நாளை அனுசரிக்க வேண்டுமா?

பதில்


‘‘தேவன் ஏதேனில் சாபத்தை ஏற்படுத்தினார்’’ என்று யாத்திராகமம் 20-:11-இல் சாபத் மற்றும் சிருஷ்டிப்புக்கு இருக்கும் தொடர்பை வைத்து பலர் கூறுகிறார்கள். தேவன் ஏழாவது நாள் ஓய்ந்திருந்து (ஆதியாகமம் 2:3) சாபத் அனுசரிப்புக்கு நிழலாட்டமாய் இருந்தாலும், இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டு வெளியேறினவரைக்கும் சாபத்தைக் குறித்து வேதாகமத்தில் எழுதப்படவில்லை. ஆதாம் முதல் மோசேவரை சாபத் அனுசரித்தற்கான ஒரு சிறிய ஆதாரமும் வேதவாக்கியங்களில் இல்லை.

தேவனுடைய வார்த்தை தேவனுக்கும் இஸ்ரவேலுக்கும் இடையே ஒரு விசேஷித்த அடையாளமாக சாபத் அனுசரித்தல் இருந்தது என்று தெளிவாகக் கூறுகின்றது . ‘‘ ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக அனுசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளக்கடவார்கள். அது என்றைக்கும், எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும். ஆறுநாட்களுக்குள்ளே கர்த்தர் வானத்தையும், பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார். என்றார் (யாத்திராமம் 31:16,17)

உபவாகமம் 5-ல் மோசே பத்து கட்டளைகளை இஸ்ரவேலரின் அடுத்த தலைமுறைக்கு மறுபடியும் கூறுகிறார். இங்கு, சாபத் அனுசரித்தல் குறித்து 12-14 வசனம் வரைக் கூறி, பின்பு சாபத் இஸ்ரவேலின் தேசத்துக்கு கொடுக்கப்பட்ட காரணத்தைக் கூறுகிறார். ‘‘ நீ எகிப்து தேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணினார் என்றும் நினைப்பாயாக, ஆகையால் ஓய்வு நாளை அனுசரிக்க உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார்’’ (உபாகமம் 5:15).

இஸ்ரவேலுக்கு சாபத்தை தேவன் கொடுத்ததன் நோக்கமே அவர்கள்சிருஷ்டிப்பை நினைவுகூற அல்ல, எகிப்தின் அடிமைத்தனத்தையும் தேவனுடைய விடுதலையையும் நினைவுக்கூறவே சாபத் அனுசரிப்பதற்கான முறைகள்: சாபத் கட்டளையின் கீழிருக்கிற மனிதன் தன் வீட்டைவிட்டு கிளம்பக்கூடாது. (யாத்திராகமம் 16:29), நெருப்பு மூட்டக்கூடாது (யாத்திராகமம் 35:3), வேறு யாரையும் வேலை செய்யவும் சொல்லக்கூடாது (உபாகமம் 5:14) . இந்த சாபத் கட்டளையை மீறுகிறவன் கொலை செய்யப்பட்டான் (யாத்திராகமம்31:15, எண்ணாகமம் 15:32-35)

புதிய ஏற்பாட்டு வாக்கியங்களை ஆராயும்போது 4 முக்கியமான கருத்துகளை அது காட்டுகின்றது.

1. கிறிஸ்து உயிர்தெழுந்தவராய் வெளிப்பட்டார் என்று குறிப்பிடப்பட்ட நாளெல்லாம் வாரத்தின் முதல் நாளாக இருக்கிறது. மத்தேயு 28:1,9,10, மாற்கு16:9, லூக்கா24:1,1,13,15, யோவான்20:19,26)

2. அப்போஸ்தல் நடபடிகள் புத்தகத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரைக்கும் சாபத் ஒருமுறைதான் குறிப்பிடப்பட்டுள்ளது, அதுவும் யூதர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிப்பதற்காக ஜெப ஆலயத்தில் இருக்கும்போது என்று கூறப்பட்டுள்ளது. (அப்போஸ்தலர் நடபடிகள் 13-18). பவுல் ‘‘ யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப் போலவும்’’ என்று எழுதியிருக்கிறார். (1 கொரிந்தியர்9:20) பவுல் ஜெப ஆலயத்திற்கு பரிசுத்தவான்களோடு ஐக்கியம் கொண்டு, பக்திவிருத்தி உண்டுபண்ண அல்ல, உணர்த்தி இரட்சிக்கப்படாதவர் களை இரட்சிக்க.

3. பவுல் ஒருமுறை ‘‘ இதுமுதல் புறஜாதியாரிடத்திற்குப் போகிறேனென்று’’.... இதற்கு பின்பு சாபத் குறிப்பிடப்படவேயில்லை.

4. சாபத்தை அனுசரிப்பதைக்குறித்து கூறுவதைக் காட்டிலும் புதிய ஏற்பாடு அதற்று எதிர்மறையாகத்தான் கூறுகின்றது. ( 3வது கருத்தை தவிர, கொலோசியர் 2:16 – இன்படி).

நான்காவது கருத்தைக் கூர்ந்து பார்க்கும்போது ஒரு புதிய ஏற்பாட்டு விசுவாசி சாபத் அனுசரிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஞாயிற்றுக்கிழமைகளில் ‘‘ கிறிஸ்தவ சாபத்’’ என்ற கருத்தும் வெத்த்தின்படியானது கிடையாது. மேலே விளக்கப்பட்டபடி பவுல் தன் கவனத்தை புறஜாதியாரிடம் திருப்புவதற்கு முன்பு ஒரே தரம்தான் சாபத் என்பதைக் குறிப்பிட்டிருக்கிறார். ‘‘ஆகையால், போஜனத்தையும், பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் குறித்தாவது, ஓய்வு நாட்களையுங் குறித்தாவது ஒருவனும் உங்களை குற்றப்படுத்தாதிருப்பானாக.

அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது அவைகளின் பொருள் கிறிஸ்துவைப் பற்றினது. (கொலேசியர் 2:16-17). யூதருடைய சாபத் என்பதை கிறிஸ்து சிலுவையிலேயே அழித்தார். ‘‘நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து’’ (கொலேசியா 2:14).

இந்தக் கருத்து புதிய ஏற்பாட்டில் ஒன்றுக்கும் மேற்பட்டமுறை கூறப்பட்டுள்ளது.‘‘அன்றியும் ஒருவன் ஒரு நாளை மற்றொரு நாளிலும் விசேஷமாக எண்ணுகிறான், வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான், அவனவன் தன் தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்க்க்கடவன். நாட்களை விசேஷித்து கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக் கொள்கிறான்.’’ (ரோமர் 14:5-6a). ‘‘ இப்பொமுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க, அல்லது வேனாலே அறியப்பட்டிருக்க, பெலனற்றதும் வெறுமையானதுமான அவ்வழி பாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி? நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே’’ (ரோமர் 4:9-10).

சிலர் கி.பி. 321-இல் கான்ஸ்டான்டைன் பிறப்பித்த ஆணையில் சாபத் சனிக்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமையாக மாறியது என்று கூறுகிறார்கள். ஆதித்திருச்சபை எந்த நாளில் ஆராதிக்க கூடினது? வேதவாக்கியம் சாபத் (சனிக்கிழமை) கூட்டம் என விசுவாசிகள் ஐக்கியத்திற்கும் ஆராதிக்கவும் கூடியதாக குறிப்பிடவில்லை. ஆனால், வாரத்தின் முதல்நாளென்று தெளிவாக வாக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அப்போஸ்தலர் நடபடிகள் 20:7 –இல் ‘‘ வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில்’’ என்று இருக்கின்றது.

I கொரிந்தியர்16:2 – அல் பவுல் கொரிந்து சபையின் விசுவாசிகளிடம் ‘‘ நான் உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள் தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக’’ என்று துரிதப்படுத்துகிறார். இந்த காணிக்கையை பவுல் 2 கொரிந்தியர் 9:12-இல் ‘சர்வீஸ்’ என்று குறிப்பிட்டதினால், இந்த பணத்தைச் சேர்க்கும் பணி கிறிஸ்தவ ஞாயிறு ஆராதனையாக எண்ணப்பட்டிருக்கலாம். வரலாற்றின்படி பார்த்தால் சனிக்கிழமை அல்ல ஞாயிற்றுக்கிழமைதான் கிறிஸ்தவர்கள் சபையில் கூடுகிற நாளாக இருந்தது. இது முதலாம் நூற்றாண்டிலிருந்தே கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

சாபத் என்பது சபைக்கு அல்ல, இஸ்ரேலுக்காக கொடுக்கப்ட்ட ஒன்று. சாபத் என்பது இன்றும் சனிக்கிழமைகளில்தான் அனுசரிக்கப்படுகின்றது, ஞாயிற்றுகிக்ழமைகிளல் அல்ல. அனால் சாபத் என்பது பழைய ஏற்பாட்டின கட்டளையாகவுள்ளது. கிறிஸ்தவர்கள் இந்த பிரமானத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டுவிட்டார்கள். (கலாத்தியர் 4:1-26, ரோமர் 6:14). கிறிஸ்தவர்கள் சனிக்கிழமையோ அல்லது ஞாயிற்றுக்கிழமையே சாபத் அனுசரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

வாரத்தின் முதல்நாளான ஞாயிற்றுக்கிழமை, தேவனுடைய நாளாக உள்ளது. (வெளிப்படுத்தின விசேஷம் 1:10) அது புதிய சிருஷ்டியையும், உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை தலையாகக் கொண்டுள்ளதையும் கொண்டாடும் நாளாக உள்ளது. மோசேவுடைய சாபத்தை நாம் ஓய்வெடுத்து கடைபிடிக்க கடமைப்பட்டவர்கள் அல்ல. நாம் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைப் பின்பற்றி ஊழியம் செய்கிறவர்களாயிருக்க வேண்டும். பவுல் அப்போஸ்தலன் ஒவ்வொரு தனிப்பட்ட கிறிஸ்தவனும் சாபத் ஆசரிப்பதைக் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். ‘‘அன்றியும், ஒருவன் ஒரு நாளை மற்றொரு நாளிலும் விசேஷமாக எண்ணுகிறான், வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான். அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்’’. நாம் தேவனை சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையில் மட்டுமல்ல, எல்லா நாட்களிலும் ஆராதிக்க வேண்டும்.

English



முகப்பு பக்கம்

எந்த நாளில் சாபத் வருகிறது? கிறிஸ்தவர்கள் சாபத் நாளை அனுசரிக்க வேண்டுமா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries