கேள்வி
கிறிஸ்தவர்கள் ஓய்வுநாளை கைக்கொள்ளவேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்?
பதில்
கொலோசெயர் 2:16-17-ல் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு அறிவிக்கிறார்: “ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகைநாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக. அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.” இதேபோல் ரோமர் 14:5 கூறுகிறது: “அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொரு நாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்.” கிறிஸ்தவ ஓய்வுநாட்கள் தேவனுடைய கட்டளை அல்ல, மாறாக ஆவிக்குரிய சுதந்திரம் என்று இந்த வேதவாக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன. ஓய்வுநாளில், ஒருவரையொருவர் நியாயந்தீர்க்காதபடி தேவனுடைய வார்த்தை நமக்கு அறிவுறுத்துகிறது. ஒவ்வொரு கிறிஸ்தவனும் அவனுடைய மனதில் முழு நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது ஒரு விஷயமே முக்கியம்.
அப்போஸ்தலர் புத்தகத்தின் ஆரம்ப அதிகாரங்களில், முதல் கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் யூதர்கள் ஆகும். யூத கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் மூலமாக இரட்சிப்பின் ஈவைப் பெற்றபோதும், யூத கிறிஸ்தவர்கள் சங்கடமாக இருந்தார்கள். மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் யூத பாரம்பரியத்திலும் என்ன உட்பிரிவுகள் புறஜாதிகள் கீழ்ப்படியும்படி கற்பிக்கப்பட வேண்டும்? அப்போஸ்தலர்கள் எருசலேம் சபையில் (அப்போஸ்தலர் 15) விவாதித்தார்கள். முடிவில், “ஆதலால் புறஜாதிகளில் தேவனிடத்தில் திரும்புகிறவர்களைக் கலங்கப்பண்ணலாகாதென்றும், விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கும், வேசித்தனத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும், விலகியிருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன்” (அப்போஸ்தலர் 15:19-20) என்று ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள். புறஜாதிய விசுவாசிகளுக்கு பத்து கட்டளைககளுள் ஓய்வுநாளை கட்டாயமாக்குவது அப்போஸ்தலர்களுக்கு அவசியமானதாக தோன்றவில்லை. கிறிஸ்தவர்கள் ஓய்வுநாளை கடைப்பிடிப்பது தேவனின் கட்டளை என்றால் அப்போஸ்தலர்கள் நிச்சயமாக ஓய்வுநாளைப் புறக்கணிக்காமல் சேர்த்திருப்பார்கள் என்பதில் ஆச்சரியமில்லை.
ஓய்வுநாளைக் கைக்கொள்ளுவதில் நடக்கும் விவாதத்தில் ஒரு பொதுவான பிழை என்னவென்றால், ஓய்வுநாள் வழிபாட்டு தினம் என்ற கருத்தாகும். சனிக்கிழமை, ஓய்வுநாளில் திருச்சபை ஆராதனை நடைபெற வேண்டுமென தேவன் செவன்த் டே அட்வெண்டிஸ்ட்ஸ் போன்ற குழுக்கள் கூறுகின்றன. அது ஓய்வுநாள் கட்டளை அல்ல. ஓய்வுநாளில் எந்தஒரு வேலையும் செய்யக்கூடாது (யாத்திராகமம் 20:8-11). ஆமாம், பழைய ஏற்பாட்டில் யூதர்கள், புதிய ஏற்பாடு, நவீன காலங்கள் சனிக்கிழமையன்று வணக்கத்தின் தினமாக பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் அது ஓய்வுநாள் கட்டளையின் சாரம் அல்ல. அப்போஸ்தலர் புத்தகத்தில், எப்பொழுதெல்லாம் ஒரு ஓய்வுநாளில் கூடினதாக காண்கிறோமோ அங்கெல்லாம் அது யூதர்களின் கூடிவருதலாகும், கிறிஸ்தவர்கள் அல்ல.
ஆரம்பகால கிறிஸ்தவர்கள் எப்போது சந்தித்தார்கள்? அப்போஸ்தலர் 2:46-47 நமக்கு பதிலளிக்கிறது: “அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம் பண்ணி, தேவனைத் துதித்து, ஜனங்கள் எல்லாரிடத்திலும் தயவு பெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக் கொண்டுவந்தார்.” கிறிஸ்தவர்கள் ஒரு நாளில் சந்தித்து கூடி வந்திருந்தால், அது வாரத்தின் முதல் நாள் (ஞாயிற்றுக்கிழமை) தான், ஓய்வுநாள் அல்ல (சனிக்கிழமை) (அப்போஸ்தலர் 20:7; 1 கொரிந்தியர் 16:2). ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு மரியாதை காட்டி, ஆரம்ப கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமையை "கிறிஸ்தவ ஓய்வுநாளாக" அல்ல, குறிப்பாக இயேசு கிறிஸ்துவை ஆராதிப்பதற்கு ஒரு நாளாக மட்டும் கருதுகிறார்கள்.
யூதர்களின் ஓய்வுநாளில் அதாவது சனிக்கிழமையன்று ஆராதிப்பதில் ஏதாவது தவறு இருக்கிறதா? முற்றிலும் இல்லை! நாம் ஒவ்வொரு நாளும் தேவனை ஆராதிக்க வேண்டும், சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை மட்டும் அல்ல! இன்று பல திருச்சபைகளில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆராதிக்கின்றனர். நம்மெல்லோருக்கும் கிறிஸ்துவில் சுதந்திரம் இருக்கிறது (ரோமர் 8:21; 2 கொரிந்தியர் 3:17; கலாத்தியர் 5:1). சனிக்கிழமைகளில் வேலை செய்யாதிருப்பது ஒரு கிறிஸ்தவ பழக்கவழக்கமாக இருக்க வேண்டுமா? ஒரு கிறிஸ்தவர் அவ்வாறு செய்தால், ஆம், முற்றிலும் ஆம் (ரோமர் 14:5). ஆயினும், ஓய்வுநாளைக் கடைப்பிடிக்கத் தெரிவு செய்கிறவர்கள் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்காதவர்களை நியாயந்தீர்க்கக்கூடாது (கொலோசெயர் 2:16). ஓய்வுநாளை கடைப்பிடிக்காதவர்கள் சப்பாத்தை தக்க வைத்துக்கொள்பவர்களுக்கு இடறலாக இருக்ககூடாது, (1 கொரிந்தியர் 8:9) அதை தவிர்க்க வேண்டும். அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியர் 5:13-15 முழுமையான பதிலைச் சுருக்கிக் கூறுகிறார்: “சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள். உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும். நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால் அழிவீர்கள். அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.”
English
கிறிஸ்தவர்கள் ஓய்வுநாளை கைக்கொள்ளவேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்?