settings icon
share icon
கேள்வி

சதுசேயர்களுக்கும் பரிசேயர்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் என்ன?

பதில்


நற்செய்திகள் பெரும்பாலும் சதுசேயர்களையும் பரிசேயர்களையும் குறிக்கின்றன, ஏனெனில் இயேசு தமது ஊழிய நாட்களில் அவர்களுடன் கிட்டத்தட்ட தொடர்ந்து மோதலில் இருந்தார். சதுசேயரும் பரிசேயரும் இஸ்ரவேலில் யூதர்களின் ஆளும் வர்க்கத்தை உள்ளடக்கியவர்கள். இரு குழுக்களுக்கிடையில் சில ஒற்றுமைகள் உள்ளன, ஆனால் அவற்றுக்கிடையேயான முக்கியமான வேறுபாடுகளும் உள்ளன.

பரிசேயரும் சதுசேயர்களும் கிறிஸ்துவின் காலத்தில் யூத மதத்திற்குள் இரு பெரும் மதப் பிரிவுகளாக இருந்தனர். இரு குழுக்களும் மோசேயையும் நியாயப்பிரமாணத்தையும் மதித்தன, அவர்கள் இருவருக்கும் ஒரு அரசியல் அதிகாரம் இருந்தது. பண்டைய இஸ்ரவேலின் 70 உறுப்பினர்களைக் கொண்ட உச்ச நீதிமன்றமான சனகெரிப் சங்கம், சதுசேயர்கள் மற்றும் பரிசேயர்கள் இருவரையும் உள்ளடக்கியதாக இருந்தது.

பரிசேயர்களுக்கும் சதுசேயர்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் ஓரிரு வேத வசனங்கள் மூலமாகவும் பரிசேயர்களின் விரிவான எழுத்துக்கள் மூலமாகவும் நமக்குத் தெரியும். மத ரீதியாக, சதுசேயர்கள் ஒரு கோட்பாட்டுப் பகுதியில் மிகவும் பழமைவாதமாக இருந்தனர்: அவர்கள் வேதத்தின் உரையின் நேரடி விளக்கத்தை வலியுறுத்தினர்; மறுபுறம், பரிசேயர்கள் தேவனுடைய எழுதப்பட்ட வார்த்தைக்கு சமமான அதிகாரத்தை வாய்வழி மரபுக்கும் வழங்கினர். டனக்கில் சதுசேயர்களால் ஒரு கட்டளையை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அவர்கள் அதை மனிதனால் உருவாக்கப்பட்டவை என்று நிராகரித்தனர்.

பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்கள் வேதத்தைப் பற்றிய மாறுபட்ட பார்வையைப் பார்க்கும்போது, அவர்கள் சில கோட்பாடுகளைப் பற்றி வாதிட்டதில் ஆச்சரியமில்லை. இறந்தவர்களின் உயிர்த்தெழுதல் குறித்த நம்பிக்கையை சதுசேயர்கள் நிராகரித்தனர் (மத்தேயு 22:23; மாற்கு 12: 18-27; அப்போஸ்தலர் 23: 8), ஆனால் பரிசேயர்கள் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைத்தார்கள். மரணத்தில் ஆத்மா அழிந்துவிடும் என்று கருதி, சதுசேயர்கள் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையை முற்றிலுமாக மறுத்தனர், ஆனால் பரிசேயர்கள் ஒரு மரணத்திற்கு பின்புள்ள வாழ்க்கையையும் தனிநபர்களுக்கு கிடைக்கப்போகிற பொருத்தமான வெகுமதியையும் தண்டனையையும் நம்பினர். கண்ணுக்குத் தெரியாத, ஆவிக்குரிய உலகம் என்ற கருத்தை சதுசேயர்கள் நிராகரித்தனர், ஆனால் பரிசேயர்கள் தேவதூதர்கள் மற்றும் ஆவிக்குரிய உலகில் பிசாசுகள் இருப்பதை கற்பித்தனர்.

அப்போஸ்தலனாகிய பவுல் பரிசேயர்களுக்கும் சதுசேயர்களுக்கும் இடையிலான இறையியல் வேறுபாடுகளை அவர்கள் பிடியிலிருந்து தப்பிக்க புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தினார். பவுல் எருசலேமில் கைது செய்யப்பட்டு, சனகெரிப் சங்கத்திற்கு முன்பாக தனது வாதத்தை முன்வைத்திருந்தார். நீதிமன்றத்தில் சிலர் சதுசேயர்கள், மற்றவர்கள் பரிசேயர்கள் என்பதை அறிந்த பவுல், “சகோதரரே, நான் பரிசேயனும் பரிசேயனுடைய மகனுமாயிருக்கிறேன். மரித்தோருடைய உயிர்தெழுதலைப்பற்றிய நம்பிக்கையைக் குறித்து நான் நியாயம் விசாரிக்கப்படுகிறேன் என்று ஆலோசனைச் சங்கத்திலே சத்தமிட்டுச் சொன்னான்” (அப்போஸ்தலர் 23:6). உயிர்த்தெழுதல் பற்றி பவுலின் குறிப்பு பரிசேயர்களுக்கும் சதுசேயர்களுக்கும் இடையில் ஒரு பெரும் சர்ச்சையைத் தூண்டியது, அவர்கள் கூடிவரவைப் பிரித்தது, “மிகுந்த கூக்குரல் உண்டாயிற்று” (வசனம் 9). மிகுந்த கலகம் உண்டானபோது, பவுல் அவர்களால் பீறுண்டுபோவானென்று சேனாபதி பயந்து, போர்ச்சேவகர் போய், அவனை அவர்கள் நடுவிலிருந்து இழுத்துக் கோட்டைக்குக் கொண்டுபோகும்படி கட்டளையிட்டான் (வசனம் 10).

சமூக ரீதியாக, சதுசேயர்கள் பரிசேயர்களை விட மேல்தட்டு மற்றும் பிரபுத்துவவாதிகள். சதுசேயர்கள் செல்வந்தர்களாகவும் அதிக சக்திவாய்ந்த பதவிகளை வகித்தும் வந்தனர். தலைமை ஆசாரியர்களும் பிரதான ஆசாரியரும் சதுசேயர்களாக இருந்தனர், அவர்கள் சனகெரிப் சங்கத்தில் பெரும்பான்மையான இடங்களை வகித்தனர். பரிசேயர்கள் பொதுவான உழைக்கும் மக்களின் பிரதிநிதிகளாகவும், மக்களின் மரியாதையையும் கொண்டிருந்தனர். சதுசேயரின் அதிகார இடம் எருசலேமில் உள்ள ஆலயம்; பரிசேயர்கள் ஜெப ஆலயங்களைக் கட்டுப்படுத்தினார்கள். சதுசேயர்கள் ரோமாபுரியுடன் நட்பாக இருந்தனர், பரிசேயர்களைக் காட்டிலும் ரோமச் சட்டங்களுக்கு இடமளித்தனர். பரிசேயர்கள் பெரும்பாலும் யூதர்களாக மாறுவதை எதிர்த்தனர், ஆனால் சதுசேயர்கள் அதை வரவேற்றனர்.

சதுசேயர்களைக் காட்டிலும் இயேசு பரிசேயர்களுடன் அதிக மோதல் தொடர்புகள் கொண்டிருந்தார், அநேகமாக அவர்கள் முன்னாள் வாய்வழி மரபுக்கு முன்னுரிமை அளித்ததன் காரணமாக இருக்கலாம். " நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டுவருகிறவர்களாய், கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் அனுசரித்து வருகிறீர்கள்" என்று இயேசு அவர்களிடம் கூறினார் (மாற்கு 7:8; மத்தேயு 9:14; 15:1–9; 23:5, 16, 23, மாற்கு 7:1–23 ; லூக்கா 11:42). மதத்தை விட சதுசேயர்கள் பெரும்பாலும் அரசியலில் அதிக அக்கறை கொண்டிருந்ததால், தேவையற்ற ரோமர்கள் கவனத்தை அவர் கொண்டு வரக்கூடும் என்று அஞ்சத் தொடங்கும் வரை அவர்கள் இயேசுவை கண்டுகொள்ளாமல் புறக்கணித்தனர். அந்த சமயத்தில்தான் சதுசேயரும் பரிசேயரும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, ஒன்றுபட்டு, கிறிஸ்துவைக் கொல்ல சதி செய்தார்கள் (யோவான் 11:48-50; மாற்கு 14:53; 15:1).

எருசலேமின் அழிவுக்குப் பிறகு ஒரு குழுவாக சதுசேயர்கள் இருந்ததில்லை, ஆனால் பரிசேயர்களின் மரபு வாழ்ந்தது. உண்மையில், தேவாலயத்தின் அழிவுக்கு அப்பால் யூத மதம் தொடர்ந்ததைக் குறிக்கும் ஒரு முக்கியமான ஆவணமான மிஷ்னாவின் தொகுப்பிற்கு பரிசேயர்கள் பொறுப்பாளிகள். இந்த வழியில் பரிசேயர்கள் நவீனகால ரபீனிக் யூத மதத்திற்கு அடித்தளம் அமைத்தனர்.

English



முகப்பு பக்கம்

சதுசேயர்களுக்கும் பரிசேயர்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries