settings icon
share icon
கேள்வி

எப்படி, ஏன், எப்போது சாத்தான் பரலோகத்திலிருந்து விழுந்தான்?

பதில்


பரலோகத்திலிருந்து சாத்தான் வீழ்ந்துபோன வீழ்ச்சி ஏசாயா 14:12-14 மற்றும் எசேக்கியேல் 28:12-18 ஆகிய வேதப்பகுதிகளில் அடையாளப்பூர்வமாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பகுதிகளும் பாபிலோன் மற்றும் தீருவின் ராஜாக்களைக் குறிப்பிட்டு குறிப்பாக குறிப்பிடுகையில், அந்த ராஜாக்களுக்கு பின்னால் சாத்தானின் ஆவிக்குரிய சக்தியை அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த வேதப்பகுதிகள் சாத்தான் ஏன் விழுந்துபோனான் என்பதை மட்டுமே விவரிக்கின்றன, ஆனால் அவன் எப்பொழுது விழுந்தான் என்கிற வீழ்ச்சி ஏற்பட்டபோதுள்ள நேரத்தை அவைகள் குறிப்பிடப்படவில்லை. நமக்குத் தெரிந்திருக்கிற காரியம் என்னவெனில்: பூமியானது சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பாகவே தேவதூதர்கள் படைக்கப்பட்டார்கள் (யோபு 38:4-7) என்பதாகும். எதேன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் சாத்தானால் சோதிக்கப்படுவதற்கு முன்பே அவன் விழுந்து போய்விட்டான் (ஆதியாகமம் 3:1-14). எனவே, சாத்தானின் வீழ்ச்சியானது தேவதூதர்கள் உருவாக்கப்பட்ட காலத்திற்குப் பிறகும் ஏதேன் தோட்டத்திலிருந்த ஆதாமும் ஏவாளும் சாத்தானால் சோதிக்கப்படுவதற்கு முன்பாக உள்ள காலத்திலும் நிகழ்ந்திருக்க வேண்டும். சாத்தானின் வீழ்ச்சியானது எதேன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் சோதிக்கப்படுவதற்கு சில மணி நேரங்கள், நாட்கள், அல்லது வருடங்களுக்கு முன்பே நடந்ததா இல்லையா என்பதை வேதவாக்கியம் தெளிவாகக் கூறவில்லை.

யோபுவின் புத்தகம் நமக்கு கூறுகிற குறைந்தபட்சம் காரியம் என்னவென்றால், அந்த நேரத்தில் சாத்தான் இன்னமும் பரலோகத்திற்கும் தேவனுடைய சிங்காசனத்திற்கும் அணுகியதை நமக்கு சொல்லுகிறது. “ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான். கர்த்தர் சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான்” (யோபு 1:6-7). அந்த சமயத்தில் சாத்தான் இன்னமும் பரலோகத்திற்கும் பூமிக்குமாக இரண்டிற்கும் இடையில் சுதந்திரமாகச் சென்றான்; நேரடியாக தேவனிடம் பேசி, அவருடைய செயல்களுக்குப் பதில் சொன்னான். இப்படிப்பட்ட இந்த அணுகலை தேவன் நிறுத்தி விட்டாரா அல்லது இப்பொழுதும் தொடர்ந்துகொண்டு இருக்கிறதா என்பது விவாதத்திற்குரிய ஒரு விஷயமாகும். சிலர் பரலோகத்திற்கு சாத்தான் செல்லுகிற அணுகல் கிறிஸ்துவின் மரணத்தின்பேரில் முடிந்தது என்று கூறுகின்றனர். மற்றவர்கள் பரலோகத்தில் சாத்தானின் போக்குவரத்து பரலோகத்தில் நடைபெறும் கடைசி யுத்தம் முடிவடைந்தபின்பு முடிவடையும் என்று மற்றவர்கள் நம்புகிறார்கள்.

சாத்தான் பரலோகத்திலிருந்து ஏன் விழுந்தான்? சாத்தான் பெருமையினால் விழுந்தான். அவன் தேவனாக இருக்க விரும்பினான், தேவனுடைய ஊழியனாக இருக்க விரும்பவில்லை. ஏசாயா 14:12-15-ல் வருகிற பல "நான்..." என்கிற அறிக்கைகளைக் கவனியுங்கள். எசேக்கியேல் 28:12-15 சாத்தான் மிகவும் அழகான தேவதூதனாக விவரிக்கிறது. சாத்தான் எல்லா தேவதூதர்களுக்கும் மேலாக மிக உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தான், அபிஷேகம் பண்ணப்பட்ட கேருபீன், தேவனுடைய படைப்புகள் அனைத்திலும் மிக அழகாக இருந்தான், ஆனால் அவன் தனக்கு உண்டாயிருந்த ஸ்தானத்தில் திருப்தி கொண்டிருக்கவில்லை. அதற்கு பதிலாக, சாத்தானுக்கு தேவனாக இருக்க வேண்டும் என்கிற ஆசை உண்டானது, அதாவது தேவனை "அவரது அரியணையிலிருந்து விழத்தள்ளிவிட்டு" இந்த பிரபஞ்சத்தின் ஆட்சியை எடுத்துக்கொள்ள விரும்பினான். சாத்தான் தேவனாக இருக்க விரும்பினான், அதன் சுவாரஸ்யம்தான் அவன் ஆதாமையும் ஏவாளையும் ஏதேன் தோட்டத்தில் சோதிகும்படி செய்தது (ஆதியாகமம் 3:1-5). பரலோகத்திலிருந்து சாத்தான் எவ்வாறு விழுந்தான்? உண்மையில், இங்கே கூறப்பட்டுள்ள விழுதல் ஒரு துல்லியமான நிலையில் அல்ல. தேவன் சாத்தானை பரலோகத்திலிருந்து தள்ளிவிட்டார் என்பது அதைவிட மிகவும் துல்லியமாக இருக்கும் (ஏசாயா 14:15; எசேக்கியேல் 28:16-17). சாத்தான் வானத்திலிருந்து விழவில்லை; மாறாக, சாத்தான் தள்ளப்பட்டான்.

English



முகப்பு பக்கம்

எப்படி, ஏன், எப்போது சாத்தான் பரலோகத்திலிருந்து விழுந்தான்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries