கேள்வி
இயேசு தேவனுடைய குமாரன் என்பதன் அர்த்தம் என்ன?
பதில்
இயேசு தேவனுடைய குமாரன் என்பது மனிதர்கள் மத்தியில் காண்கிறதான தகப்பன் மகன் உறவு போன்றதல்ல. இயேசு தேவனுடைய குமாரன் என்பது, தேவனுக்கு திருமணமாகி ஒரு மகனைப் பெறவில்லை. தேவன் மரியாளுடன் எந்தவிதத்திலும் உறவுடையவராயிருந்து மகனைப் பெறவும் இல்லை. இயேசு தேவனுடைய குமாரன் என்பது தேவன் மனுவுருவெடுத்து வந்த நிலை ஆகும் (யோவான் 1:1,14). மரியாள் பரிசுத்த ஆவியின் பெலத்தால் கர்ப்பந்தரித்து இயேசுவை தேவனுடைய குமாரனாகப் பெற்றாள். லூக்கா 1:35 கூறுகிறது: “தேவதூதன் அவளுக்கு பிரதியுத்ரமாக, பரிசுத்த ஆவி உன்மேல் வரும், உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும், ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் குழந்தை பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் எனப்படும்”.
யூத தலைவர்களுக்கு முன்பாக அவருடைய பாடுகளின்போது, பிரதான ஆசாரியன் இயேசுவிடம் கட்டளையிட்டு கேட்டுக்கொண்டது. 'நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான்” (மத்தேயு 26:63). அதற்கு இயேசு 'நீர் சொன்னபடிதான் அன்றியும் மனுஷகுமாரன் சர்வ வல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இது முதல் காண்பீர்களென்றும் உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்” (மத்தேயு 26:64). யூதத்தலைவர்கள் இதற்கு இயேசு தேவதூஷனம் சொன்னார் என்று குற்றப்படுத்தினார்கள் (மத்தேயு 26:65-66). பிறகு பொந்தியு பிலாத்துவிடம் 'யூதர்கள்'; அவனுக்குப் பிதியுத்திரமாக எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணம் உண்டு, இவன் தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே, இவன் சாக வேண்டும் என்றார்கள்” (யோவான் 19:7). தன்னை தேவனுடைய குமாரன் என்று இயேசு சொன்னது தேவதூஷணமாகவும் மரணதண்டனைக்கு ஏதுவானது என்றும் ஏன் கருதப்பட்டது? யூதத்தலைவர்கள் இயேசு தன்னை யாரென்று சொல்லுகிறார் என்பதை அறிந்து கொண்டார்கள். தேவனுடைய குமாரன் எனப்படுவது தேவனுடைய சுபாவத்திலேயே இருப்பது அல்லது தேவனுக்கு சமமாக இருப்பது என்னும் பொருள்படும். தேவனுடைய அதே சுபாவத்தில் இருப்பது என்பது, தேவனாகவே இருப்பது என்ற உண்மை யூதத்தலைவர்களுக்கு தேவதூஷணமாக இருந்தது. எனவே லேவியராகமம் படி இயேசுவுக்கு மரணதண்டனையை கட்டாயப்படுத்தி கேட்டுக்கொண்டார்கள். எபிரேயர் 1:3 இதை மிகத் தெளிவாகக் கூறுகின்றது. “இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமாயிருந்தது”.
வேறொரு உதாரணம் யோவான் 17,12-ல் காண்கிறோம் 'கேட்டின் மகன்' என்று யூதாஸ் சொல்லப் பட்டிருக்கிறான். சீமோனின் மகனாகிய யூதாஸ்காரியோத்து என்று யோவான் 6:71 கூறுகிறது. 'கேட்டின் மகன்' என்று கூறுவதன் அர்த்தம் என்ன? 'கேடு' என்றால் 'அழிவு' 'நரகம்' 'முழுவதும் அழிதல்' எனவே யூதாஸ் இவற்றிற்கு மகன் என்பது கிடையாது. அவனுடைய வாழ்க்கையின் அடையாளமாக மாறிவிட்டது. யூதாஸ் கேட்டின் வெளிப்பாடாய் இருந்தான். அதுபோல இயேசுவும் தேவனுடைய குமாரனாய் வெளிப்பட்டார். தேவனுடைய குமாரன் தேவன். இயேசு, தேவனுடைய வெளிப்பாடு ஆவார் (யோவான் 1:1, 14).
English
இயேசு தேவனுடைய குமாரன் என்பதன் அர்த்தம் என்ன?