settings icon
share icon

உன்னதபாட்டு

எழுத்தாளர்: உன்னதபாட்டுப் புத்தகத்தின் முதல் வசனத்தின்படி சாலமோன் இந்த புத்தகத்தை எழுதினார் என்பது தெளிவாகிறது. சாலமோன் எழுதிய 1,005 பாடல்களில் இந்த பாடல் ஒன்றாகும் (1 இராஜாக்கள் 4:32). “உன்னதபாட்டு” என்கிற தலைப்பு ஒரு நிகரில்லாத மிகையானது என்பதாகும், அதாவது இது மிகச் சிறந்தது என்பதைக் குறிக்கிறது.

எழுதப்பட்ட காலம்: இந்த புத்தகம் பெரும்பாலும் சாலமோன் தனது ராஜ்யபாரத்தின் ஆரம்பத்தில் எழுதியிருக்கலாம். அது கி.மு. 965 காலஅளவை குறிக்கிறதாக இருக்கிறது.

எழுதப்பட்டதன் நோக்கம்: சாலமோனின் உன்னதபாட்டு என்பது ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான அன்பின் நற்பண்புகளை புகழ்வதற்காக எழுதப்பட்ட ஒரு பாடல் கவிதையாகும். இந்த கவிதையானது திருமணத்தை தேவனின் வடிவமைப்பாக தெளிவாக முன்வைக்கிறது. ஒரு ஆணும் பெண்ணும் திருமண சூழலில் ஒன்றாக வாழ வேண்டும், ஒருவருக்கொருவர் ஆவிக்குரிய ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நேசிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

இந்த புத்தகம் இரண்டு உச்சங்களை எதிர்த்து நிற்கிறது: ஒன்று துறவறம்/சன்யாசம் (அனைத்து இன்பத்தையும் மறுப்பது) மற்றொன்று ஹெடோனிசம் (இன்பத்தை மட்டுமே பின்தொடர்வது). சாலமோனின் உன்னதபாட்டில் விவரிக்கப்பட்டுள்ள திருமணம் கவனிப்பு, அர்ப்பணிப்பு மற்றும் மகிழ்ச்சியின் ஒரு மாதிரியாகும்.

திறவுகோல் வசனங்கள்: உன்னதபாட்டு 2:7; 3:5; 8:4 – “எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும், நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்.”

உன்னதபாட்டு 5:1 - “சிநேகிதரே! புசியுங்கள்; பிரியமானவர்களே! குடியுங்கள், பூர்த்தியாய்க் குடியுங்கள்.”

உன்னதபாட்டு 8:6-7 – “நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது. திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது; ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைபண்ணப்படும்.”

சுருக்கமான திரட்டு: இந்த கவிதை ஒரு கணவனுக்கும் (ராஜா) அவனது மனைவிக்கும் (சூலமித்தியாள்) இடையிலான உரையாடலின் வடிவத்தை கொடுக்கிறது. நாம் இந்த புத்தகத்தை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்: திருமணம் நாடி காதலாடுதல் (1:1-3:5); திருமணம் (3:6 - 5:1); மற்றும் திருமணத்தில் முதிர்ச்சியடைதல் (5:2 - 8:14).

திருமணத்திற்கு முன்பே இந்த பாடல் தொடங்குகிறது, மணமகள் தன்னுடன் திருமணம் செய்து கொள்ள விரும்புவதால், அவள் அவனுடைய நெருங்கிய உறவுகளை எதிர்நோக்குகிறாள். இருப்பினும், அன்பை இயற்கையாகவே, அதன் சொந்த நேரத்தில் வளர விடுமாறு அவள் அறிவுறுத்துகிறாள். ராஜா சூலமத்தியின் அழகைப் புகழ்ந்து, அவளுடைய தோற்றத்தைப் பற்றிய பாதுகாப்பின்மை உணர்வுகளை முறியடித்து விடுகிறான். சூலமித்திக்கு ஒரு கனவு இருக்கிறது, அதில் அவள் சாலமோனை இழந்து அவனை நகரமெங்கும் தேடுகிறாள். நகர காவலாளிகளின் உதவியுடன், அவள் தன் பிரியமானவரைக் கண்டுபிடித்து அவரிடம் ஒட்டிக்கொண்டு, அவரை ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்கிறாள். விழித்தவுடன், அன்பை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று தனது உத்தரவை மீண்டும் சொல்கிறாள்.

திருமண இரவில், கணவர் தனது மனைவியின் அழகை மீண்டும் புகழ்ந்து பேசுகிறார், மேலும் மிகவும் குறியீட்டு மொழியில் உருவகமாக, மனைவியானவள் தனது துணையாளரை அவள் வழங்கும் அனைத்திலும் பங்கேற்க அழைக்கிறாள். அவர்கள் அன்பை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளுகிறார்கள், தேவன் அவர்களின் சங்கமத்தை ஆசீர்வதிக்கிறார்.

திருமணம் முதிர்ச்சியடையும் போது, கணவனும் மனைவியும் ஒரு கடினமான நேரத்தை கடந்து செல்கிறார்கள், இது மற்றொரு கனவில் உருவகமாக குறிக்கப்படுகிறது. இந்த இரண்டாவது கனவில், சூலமத்தியாள் தனது கணவனை மறுக்கிறார், அவர் வெளியேறுகிறார். குற்ற உணர்ச்சியைக் கடந்து, அவள் அவனைத் தேடுகிறாள்; ஆனால் இந்த நேரத்தில், அவளுக்கு உதவி செய்வதற்குப் பதிலாக, காவலாளிகள் அவளை அடிக்கிறார்கள் – அவள் கொண்டிருக்கிற வேதனையடைந்த மனசாட்சியின் அடையாளமாக இது இருக்கிறது. காதலர்கள் மீண்டும் ஒப்புரவாகி ஒன்றிணைந்து சமரசம் செய்யப்படுவதால் விஷயங்கள் மகிழ்ச்சியுடன் முடிவடைகின்றன.

பாடல் முடிவடையும் போது, கணவன்-மனைவி இருவரும் தங்கள் அன்பில் நம்பிக்கையுடனும் பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள், அவர்கள் உண்மையான அன்பின் நீடித்த தன்மையைக் குறித்துப் பாடுகிறார்கள், மேலும் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் முன்னிலையில் இருக்க விரும்புகிறார்கள்.

முன்னிழல்கள்: சில வேதாகம வியாக்கியான வல்லுனர்கள் சாலமோனின் உன்னதபாட்டை கிறிஸ்துவின் மற்றும் அவருடைய திருச்சபையின் சரியான அடையாளமாக இருப்பதாக பிரதிநிதித்துவத்தைக் காண்கிறார்கள். இதில் கிறிஸ்து ராஜாவாகக் காணப்படுகிறார், அதே சமயம் திருச்சபையானது சூலமித்தியாளைக் குறிக்கப்படுகிறது. திருமணத்தை சித்தரிப்பதாக இந்த புத்தகம் உண்மையில் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிற அதேவேளையில், திருச்சபையையும் அவளுடைய ராஜாவாகிய கர்த்தராகிய இயேசுவுடனான உறவையும் முன்னறிவிக்கும் சில கூறுகள் இதில் அடங்கியுள்ளன. கர்த்தராகிய இயேசுவால் தேடப்பட்டு வாங்கப்பட்ட ஒவ்வொரு விசுவாசியின் அனுபவத்தையும் சாலமன் 2:4லுள்ள பாடல் வரிகள் விவரிக்கிறது. நாம் ஒரு பெரிய ஆவிக்குரிய செல்வத்தின் திரட்சியுள்ள இடத்தில் இருக்கிறோம், அவருடைய அன்பினால் மூடப்பட்டிருக்கிறோம். 2 ஆம் அதிகாரத்தின் 16-வது வசனம் இவ்வாறு கூறுகிறது: “என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலி புஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்”. இங்கே கிறிஸ்துவினுடைய விசுவாசியின் பாதுகாப்பு மட்டுமல்ல (யோவான் 10:28-29), ஆனால் நல்ல மேய்ப்பன் தனது ஆடுகளை-விசுவாசிகளை அறிந்திருக்கிறார், நமக்காக அவருடைய உயிரையே கொடுக்கிறார் (யோவான் 10:11). அவர் மூலமாக, நாம் இனி பாவத்தால் கறைபடாமல், நம்முடைய “கறைகள்” அவருடைய இரத்தத்தால் அகற்றப்பட்டுவிட்டோம் (உன்னதபாட்டு 4:7; எபேசியர் 5:27).

நடைமுறை பயன்பாடு: நமது உலகம் திருமணத்தைப் பற்றிய காரியங்களில் குழப்பமடைகிறது. விவாகரத்தின் பரவலான செயல்பாடுகள் மற்றும் திருமணத்தை மறுவரையறை செய்வதற்கான நவீன முயற்சிகள், சாலமோனின் உன்னதபாட்டுக்கு முற்றிலும் மாறுபட்டவையாகும். திருமணம், கொண்டாடப்பட வேண்டும், அனுபவிக்கப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும் என்று வேதாகம கவிஞர் கூறுகிறார். நம்முடைய திருமணங்களை வலுப்படுத்த இந்த புத்தகம் சில நடைமுறை வழிகாட்டுதல்களை வழங்குகிறது:

1) உங்கள் வாழ்க்கைத்துணைக்குத் தேவையான கவனத்தை அவருக்குக் கொடுங்கள். உங்கள் மனைவியை உண்மையாக அறிந்துகொள்ள நேரம் ஒதுக்குங்கள்.

2) வெற்றிகரமான உறவுக்கு விமர்சனமல்ல ஊக்கமும் புகழும் இன்றியமையாததாக இருக்கிறது.

3) ஒருவருக்கொருவர் மகிழுங்கள். சில பயணங்களைத் திட்டமிடுங்கள். ஒருவருக்கொருவர் சுறுசுறுப்புடன், விளையாட்டுத்தனமாக இருங்கள். தேவன் நியமித்த ஈவாகிய திருமண அன்பில் மகிழ்ச்சியாயிருங்கள்.

4) உங்கள் வாழ்க்கைத்துணைக்கு உங்கள் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்த தேவையானதைச் செய்யுங்கள். உங்கள் சபதங்களை புதுப்பிக்கவும்; பிரச்சினைகள் மூலம் வேலை மற்றும் விவாகரத்து ஒரு தீர்வாக கருத வேண்டாம். நீங்கள் இருவரும் ஆழ்ந்த அமைதியான, பாதுகாப்பான அன்பில் வாழ தேவன் விரும்புகிறார்.

English



முகப்பு பக்கம்

உன்னதபாட்டு
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries