settings icon
share icon
கேள்வி

வேதாகமம் திரித்துவத்தைப் பற்றி என்ன போதிக்கிறது?

பதில்


கிறிஸ்தவர்களின் திரித்துவம் குறித்த போதனை போதுமான நிலையில் விளக்குவதற்கு மிகவும் கடினமான காரியமாகும். கிறிஸ்தவ அடிப்படையில் திரித்துவம் பற்றி சரியான விளக்கம் இல்லை. மனிதனால் திரித்துவத்தைப் பற்றி அறிந்து கொள்ளவே இயலாது. தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. எப்படியாயினும், திரித்துவம் உண்மைக்கு புறம்பானதல்ல.

திரித்துவம் என்றால் ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். திரித்துவம் மூன்று தேவர்களை குறிப்பதல்ல என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். “திரித்துவம்” என்னும் சொல் வேதாகமத்தில் எங்கும் வருவதில்லை. இந்த வார்த்தை மூன்றில் ஒருவராக இருக்கிற திரியேக தேவனை விளக்க பயன்படுத்தப்படுகிறது. மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். தேவனுடைய வார்த்தையில் கீழ்கண்ட விதத்தில் திரித்துவத்தைப் பற்றி கூறப்பட்டுள்ளது:

1) தேவன் ஒருவரே (உபாகமம் 6:4; 1 கொரிந்தியர் 8:4; கலாத்தியர் 3:20; 1 திமோத்தேயு 2:5).

2) திரித்துவத்தில் மூன்று நபர்கள் அடங்கியிருக்கிறார்கள் (ஆதியாகமம் 1:1, 26; 3:22; 11:7; ஏசாயா 6:8; 48:16; 61:1; மத்தேயு 3:16-17; 28:19; 1 கொரிந்தியர் 13:14)

ஆதியாகமம் 1:1ல் எபிரேய மொழியில் தேவன் என்று வருகிற சொல் பன்மையாக “ஏலோஹும்” என்று உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. ஆதியாகமம்1:26; 3:22; 11:7; ஏசாயா 6:8, இவற்றில் பன்மையாக "நாம்" என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஏலோஹீம் என்ற வார்தையும், "நாம்" என்ற வார்தையும் பன்மையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்படியெனில், அது இரண்டைக் காட்டிலும் கூடுதலாக காட்டுகிறது. எனவே திரித்துவத்தில், இது பன்மையைக் குறிக்கிறது. எனவே எபிரேய வார்த்தையில், தேவன், ஏலோஹீம் திரித்துவத்தைக் குறிக்கிறது.

ஏசாயா 48:16லும் 61:1லும், குமாரன், பிதாவைக் குறித்தும், பரிசுத்தாவி பற்றியும் பேசுகிறார். ஏசாயா 61:1லிருந்து லூக்கா 4:14-19 ஒப்பிடும்பொழுது, குமாரன் பேசுவதையும், மத்தேயு 3:16-17ல் இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானம் பற்றியும் விளக்குகிறது. மத்தேயு 28:19; 2 கொரிந்தியர் 13:14ல், பரிசுத்தாவி குமாரனில் இறங்குவதையும், பிதா குமாரனில் பிரியமாய் இருப்பதை கூறுவதையும் பார்க்கும்பொழுது, இம்மூவரும் தனித்தனியானவர்கள் என விளங்குகிறது.

3) திரித்துவத்திலுள்ள மூவரும் ஒருவரிலொருவர் வேறுபட்ட அல்லது வித்தியாசமானவர்கள் என நாம் அநேக வேதபகுதிகளில் காணலாம். பழையேற்பாட்டில் "யேகோவா" (LORD) என்பது "கர்த்தர்" (Lord) லிருந்து மாறுபட்டது ஆகும். (ஆதியாகமம் 19:24; ஓசியா 1:4) பிதாவுக்கு குமாரன் உண்டு (சங்கீதம் 2:7, 12; நீதிமொழிகள் 30:2-4). பரிசுத்தாவி, பிதாவிலிருந்து வேறுபட்டவர் (எண்ணாகமம் 27:18; சங்கீதம் 51:10-12). பிதா-குமாரன் என்பது, தேவன்-பிதா என்பதிலிருந்து மாறுபட்டது (சங்கீதம் 45:6-7; எபிரேயர் 1:8-9). புதியேற்பாட்டில் இயேசு, பிதாவிடம் சத்திய ஆவியாகிய ஒரு தேற்றவாளனை அனுப்பும்படி பேசுகிறார் (யோவான் 14:16-17). இதிலிருந்து இயேசு தன்னைப் பிதாவாகவோ, பரிசுத்தாவியாகவோ நினைக்கவில்லை. அவ்வாறாக இருந்தாலும் இயேசு-பிதாவாகிய தன்னோடு தான் பேசினாரா? இல்லை. அவர் திரித்துவத்திலள்ள இன்னொருவரோடு பேசினார்-அதுதான் பிதா.

4) திரித்துவத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் தேவன். பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2). குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20). பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16).

5) திரித்துவத்திற்குள் துணை உள்ளது. பரிசுத்த ஆவியானவர் பிதாவுக்கும் குமாரனுக்கும் கீழ்ப்படிந்துள்ளார், குமாரனும் பிதாவுக்கு கீழ்ப்படிந்துள்ளார் என்பதை வேதவாக்கியம் தெளிவாக காட்டுகிறது. இது ஒரு உள்ளுறவு மூவரிலும் இருக்கிறது மற்றும் எந்த நபரின் தெய்வீகத்தையும் மறுக்கவில்லை. இது வெறுமனே எல்லையற்ற தேவனைப்பற்றிய பற்றிய நமது வரையறையான மனநிலையை புரிந்து கொள்ள முடியாத ஒரு பகுதி. குமாரனைப் பற்றி லூக்கா 22:42, யோவான் 5:36, யோவான் 20:21, 1 யோவான் 4:14 ஆகியவற்றைக் காண்க. பரிசுத்த ஆவியானவர் குறித்து யோவான் 14:16, 14:26, 15:26, 16: 7, மற்றும் குறிப்பாக யோவான் 16: 13-14 ஆகியவற்றைக் காண்க.

6) திரித்துவத்தின் தனிப்பட்ட உறுப்பினர்கள் வெவ்வேறு பணிகளைக் கொண்டுள்ளனர். பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார்.

குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார்.

பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்.

திரித்துவத்தின் விளக்கங்களை உருவாக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், பிரபலமான எடுத்துக்காட்டுகள் முற்றிலும் துல்லியமாக இல்லை. முட்டை (அல்லது ஆப்பிள்), தோல், சதை, மற்றும் ஆப்பிளின் விதைகள், ஆப்பிள் மட்டும் அல்ல, அது போலவே, முட்டை, வெள்ளை மற்றும் மஞ்சள் கரு, முட்டையின் பாகங்களாக இருக்கின்றன. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய பாகங்கள் அல்ல; அவர்கள் ஒவ்வொருவரும் தேவன். நீர் விளக்கம் ஓரளவு சிறப்பாக உள்ளது, ஆனால் அது திரித்துவத்தை விவரிக்கத் தவறிவிட்டது. திரவம், நீராவி மற்றும் பனிக்கட்டி ஆகியவை நீரின் வடிவங்களாகும். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் தேவனின் உருவங்கள் அல்ல, அவை ஒவ்வொன்றும் தேவன். எனவே, இந்த உவமைகள் நமக்கு திரித்துவ படத்தை கொடுக்கலாம், ஆனால் படம் முற்றிலும் துல்லியமாக இல்லை. எல்லையற்ற தேவன் ஒரு வரையறுக்கப்பட்ட விளக்கம் கொண்டு முழுமையாக விவரிக்க முடியாது.

திரித்துவத்தின் கோட்பாடு கிறிஸ்தவ சபையின் முழு வரலாற்றிலிருந்தும் பிளவுபட்ட பிரச்சினையாகவே இருக்கிறது. திரித்துவத்தின் முக்கிய அம்சங்கள் தேவனுடைய வார்த்தையில் தெளிவாகக் காட்டப்பட்டாலும், சில பக்க விவகாரங்கள் வெளிப்படையாக தெளிவாக இல்லை. பிதா தேவன், குமாரன் தேவன், பரிசுத்த ஆவியானவர் தேவன், ஆனால் ஒரே ஒரு தேவனாக இருக்கிறார். இதுதான் திரித்துவத்தின் வேதாகம உபதேசமாகும். அதற்கு அப்பால், பிரச்சினைகள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு, விவாதத்திற்குரிய மற்றும் அத்தியாவசியமானவை. நமது வரையறுக்கப்பட்ட மனித மனங்களில் திரித்துவத்தை முழுமையாக வரையறுக்க முயலுவதற்கு மாறாக, தேவனுடைய மேன்மையையும் அவருடைய உயர்ந்த தன்மையையும் வலியுறுத்துவதன் மூலம் நாம் சிறப்பாக செயல்படலாம். “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்! கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்?" (ரோமர் 11:33-34).

English



முகப்பு பக்கம்

வேதாகமம் திரித்துவத்தைப் பற்றி என்ன போதிக்கிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries