கேள்வி
பாழாக்கும் அருவருப்பு என்றால் என்ன?
பதில்
"பாழாக்கும் அருவருப்பு" என்னும் சொற்றொடர் மத்தேயு 24:15-ஐ குறிப்பிடுகிறது: "மேலும், பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது” என்பது தானியேல் 9:27-ஐ குறிப்பிடுகிறது, “அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்.” கி.மு. 167ல் கிரேக்க அரசன் அந்தியோக்கஸ் எப்பிபேனஸ் எருசலேமிலுள்ள யூத தேவாலயத்தில் ஜீயஸ் என்னும் கிரேக்க தெய்வத்திற்கு ஒரு பலிபீடத்தை நிறுவினான். அவர் எருசலேமிலிருந்த ஆலயத்தில் எரிந்துகொண்டிருந்த பலிபீடத்தின்மேல் ஒரு பன்றியை பலியிட்டான். இந்த நிகழ்வு “பாழாக்குகிற அருவருப்பு” என்று அறியப்படுகிறது.
சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு இயேசு மத்தேயு 24:15-ல், மேலுமாக விவரிக்கப்பட்ட பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துப் பேசினார். ஆகவே, இன்னும் எதிர்காலத்தில் இன்னொரு முறை, எருசலேமிலிருந்த ஒரு யூத ஆலயத்தில் இந்த பாழாக்கும் அருவருப்பு நடக்கும் என்று இயேசு தீர்க்கதரிசனமாக சொல்லியிருக்க வேண்டும். பெரும்பாலான வேதாகம தீர்க்கதரிசன விளக்கவுரையாளர்கள், அந்தியோக்கஸ் எப்பிபேனஸ் என்னவெல்லாம் செய்தானோ அதற்கு ஒத்ததாக எதிர்க்கிறிஸ்து செய்யவிருக்கிறதும் இருக்கும் என்று எதிர்க்கிறிஸ்துவைக் குறித்து இயேசு குறிப்பிடுவதாக நம்புகிறார்கள். டேனியல் 9:27-ல் தானியேல் உரைத்த தீர்க்கதரிசனத்தில் சில கி.மு. 167-ல் நிறைவேறவில்லை. உதாரணமாக, அந்தியோக்கஸ் எப்பிபேனஸ் இஸ்ரேலுடனான உடன்படிக்கையை ஏழு ஆண்டுகள் உறுதிப்படுத்தவில்லை. எருசலேமிலிருந்த யூத ஆலயத்தில் பாழடைந்துபோன அருவருப்புக்கு ஏதோவொன்றைச் செய்து ஏழு வருடங்கள் இஸ்ரவேலருடன் ஒரு உடன்படிக்கை செய்து, இறுதியில் அதை உடைத்து என்று கூறப்பட்டது எதிர்ர்கிறிஸ்துவைக் குறித்தேயாகும்.
இனி வரும் கடைசிக் காலத்தில் சம்பவிக்கப்போகிற பாழாக்குகிற அருவருப்பு எதுவாக இருந்தாலும், அது எதிர்க்கிறிஸ்துவை மனதில் வைத்துதான் கூறப்பட்டிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வெளிப்படுத்தின விசேஷம் 13:14-ல் சிலவற்றை அவன் உண்டாக்கி எல்லோரும் அதை வணங்குவதற்கு வற்புறுத்துவான் என்று கூறப்பட்டிருக்கிறது. ஜீவனுள்ள தேவனுடைய ஆலயத்தை எதிர்க்கிறிஸ்துவின் ஒரு வழிபாட்டு ஸ்தலமாக மாற்றுவது மெய்யாகவே ஒரு "அருவருப்பானது" ஆகும். உயிரோடிருக்கிறவர்கள் மற்றும் உபத்திரவத்தின் போது மீந்திருக்கிறவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், இந்த நிகழ்வு 3 1/2 ஆண்டுகள் உபத்திரவ காலத்தில் மோசமான காரியங்களுக்கு ஒரு ஆரம்பம் மட்டுமேயாகும். கர்த்தராகிய இயேசு திரும்ப உடனடியாக வரப்போகிறார் என்பதும் விளங்குகிறது. “ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்” (லூக்கா 21:36).
English
பாழாக்கும் அருவருப்பு என்றால் என்ன?