கேள்வி
கருக்கலைப்புக்குப் பிறகு ஒரு பெண் எப்படி குணமடைந்து மீண்டு வர முடியும்?
பதில்
கருக்கலைப்பு சிகிச்சை மற்றும் மீட்டெடுத்தல் என்பது சாத்தியம். கருக்கலைப்பு செய்துவிட்டு, பின்னர் வருந்துவது பெண்களின் பொதுவான அனுபவம். செய்ததைச் செய்யாத நிலைக்கு செயல்தவிர்க்க முடியாது என்றாலும், கருக்கலைப்புக்குப் பிறகு நீங்கள் குணமடைந்து ஆரோக்கியமாகலாம். அனைத்து ஆறுதல் மற்றும் சுகமளிக்கும் தேவன் கருக்கலைப்பின் துக்கத்தையும் வலியையும் எளிதாக்க முடியும். அவர் உங்களை ஜீவன் மற்றும் மகிழ்ச்சிக்கு மீட்டெடுக்க முடியும்.
தேவையற்ற கர்ப்பம் என்பது நிதி நெருக்கடி ரீதியாகவோ, உணர்ச்சி ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ அத்தகைய பொறுப்பிற்கு தயாராக இல்லாத ஒருவருக்கு பயமுறுத்தும் அனுபவமாக இருக்கலாம். பயம், குழப்பம் மற்றும் அவநம்பிக்கையுடன் இருக்கும் பல பெண்கள் மற்றும் டீன் ஏஜ் பெண்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். பதில்களுக்கான உங்கள் தேடலில், உங்களது பிறக்காத குழந்தை ஒரு இழக்கத்தக்க "திசுக் கட்டி" என்று நம்பி நீங்கள் ஏமாற்றப்பட்டிருக்கலாம், அதாவது அது உண்மையில் பிறக்கும்-முன்புள்ள நிலையில் உள்ள மனிதன் அல்ல எனக் கருதலாம். கருக்கலைப்புக்குப் பிந்தைய மன அழுத்த நோய்க்குறி, குற்ற உணர்வு மற்றும் மனச்சோர்வு போன்ற வடிவங்களில் பெரும்பாலும் உண்மையை உணர்தல் பின்னர் வருகிறது. இங்குதான் கருக்கலைப்பு சிகிச்சை மற்றும் மீட்பு அவசியம்.
கருக்கலைப்பு செய்த எவருக்கும் ஒரு நல்ல செய்தி உள்ளது, அது என்னவெனில் அதிலிருந்து யார் மன்னிப்புக் கேட்டாலும் தேவன் அவர்களுக்கு மன்னிப்பு வழங்குகிறார் என்பதேயாகும். கருக்கலைப்பு சிகிச்சை மற்றும் கருக்கலைப்பு மீட்பு அந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்வதில் தொடங்குகிறது. ரோமர் 3:22 கூறுகிறது, “அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.” குணமடைவதற்காக தேவனிடம் வருவது என்பது ஒருபோதும் தாமதமாக வந்ததாய் கருதப்படாது. தேவனால் மன்னிக்க முடியாத அளவுக்கு மோசமானது என்று நாம் எதுவும் செய்ய முடியாது. தேவன் இந்த மன்னிப்பை கிறிஸ்துவின் மூலம் வழங்குகிறார், மேலும் அவர் அமைதியுள்ள மனதையும் இருதயத்தையும் அளிக்கிறார். கருக்கலைப்பு மீட்பு உங்களுடையது, நீங்கள் இயேசுவில் உங்கள் நம்பிக்கையை வைத்து, உங்கள் வாழ்க்கையில் அவருக்கு நிரந்தர வாழ்விடத்தையும் அதிகாரத்தையும் அனுமதிப்பதன் மூலம் மட்டுமே அதைப் பெறுவீர்கள்.
ஒருவேளை நீங்கள் ஏற்கனவே ஒரு கிறிஸ்தவராக இருக்கலாம், ஆனால் நீங்கள் கருக்கலைப்பு செய்ய முடிவு செய்திருக்கலாம், ஒருவேளை நீங்கள் கிறிஸ்தவ சமூகத்தால் எப்படி உணரப்படுவீர்கள் என்ற பயத்தின் காரணமாக இருக்கலாம். கருக்கலைப்பு பற்றி தேவன் எப்படி உணருகிறார் என்பதை நீங்கள் புரிந்து கொண்டாலும், அதற்கான "சான்றுகளை" நீங்கள் அகற்ற வேண்டும் என்று விரக்தியின் காரணத்தால் அமிழ்ந்து கொண்டிருக்கலாம். கருக்கலைப்பு மீட்பு கிடைக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். மன்னிப்பு, மீட்பு, குணப்படுத்துதல் மற்றும் மறுசீரமைப்பு ஆகியவற்றை வழங்க தேவன் தயாராக இருக்கிறார். ஆம், கருக்கலைப்பு செய்வது தவறு; அது ஒரு உயிரைப் பறிகிறதாய் இருக்கிறது, ஆனால் அது மன்னிக்க முடியாதது அல்ல. கிறிஸ்து இயேசுவுக்குச் சொந்தமானவர்களுக்கு எந்தக் ஆக்கினைத்தீர்ப்பும் இல்லை என்று வேதாகமம் கூறுகிறது (ரோமர் 8:1), எனவே, நம்முடைய பாவங்களை நாம் அவரிடம் ஒப்புக்கொள்ளும்போது, அவர் தாராளமாக மன்னிக்கிறார் (1 யோவான் 1:9). இது நாம் மன்னிப்புக்கு தகுதியானவர் என்பதால் அல்ல, மாறாக நம் கர்த்தரின் அன்பான குணத்தால் நிகழ்கிறது.
கருக்கலைப்பு செய்வதால் ஏற்படும் விளைவுகளை நீங்கள் உணர்ந்தால், உங்களை மன்னிப்பது கடினமாக இருக்கலாம். ஆனால் நாம் நிரந்தரமான குற்ற உணர்வோடு வாழ்வதை தேவன் விரும்பவில்லை; நம்முடைய தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டு, நமக்குச் சாதகமாக அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார். கருக்கலைப்பு சிகிச்சை மற்றும் மீட்பு குற்ற உணர்ச்சியிலிருந்து விடுதலையை வழங்கும். இதற்கு நிறைய ஜெபம் தேவைப்படும், இது தேவனுடன் நாம் மேற்கொள்ளும் ஒரு எளிய உரையாடல். இதுவும் வேதாகமத்தைப் படிப்பதும் தேவனை நன்கு அறிந்துகொள்ள நமக்கு உதவுகிறது, இதனால் அவர் நம்மைக் குணப்படுத்துவார் என்று நிச்சயமாக நம்பலாம் மற்றும் அவருடைய வேலையைச் செய்யத் தியமாக தயாராக இருக்க முடியும். கருக்கலைப்பு செய்வதற்கான உங்கள் விருப்பத்தின் மீது கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, மற்றவர்களுக்கு உதவ உங்கள் அனுபவத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கவேண்டும். அனுபவத்தைப் பெறுவதற்கு கிறிஸ்தவ ஆலோசனையை நீங்கள் நாட வேண்டியிருக்கலாம். ஆனால் குணப்படுத்தும் செயல்முறையின் மூலம், நீங்கள் கர்த்தரை நம்பினால், நீங்கள் பலமாகவும் ஆவிக்குரிய முதிர்ச்சியுடனும் இருப்பீர்கள். நீங்கள் கருக்கலைப்பு சிகிச்சை மற்றும் கருக்கலைப்பு மீட்பை அனுபவிக்க முடியும்! உங்கள் குணத்தைப் பலப்படுத்தவும், மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கு உங்களைத் தயார்படுத்தவும் தேவன் பயன்படுத்தக்கூடிய அனுபவத்தை நீங்கள் கடந்து சென்றிருப்பீர்கள்.
English
கருக்கலைப்புக்குப் பிறகு ஒரு பெண் எப்படி குணமடைந்து மீண்டு வர முடியும்?