settings icon
share icon
கேள்வி

கருக்கலைப்பைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?

பதில்


கருக்கலைப்பு பிரச்சனையைக் குறித்து வேதாகமம் குறிப்பிட்டு எதையும் கொடுக்கவில்லை. இருப்பினும், கருக்கலைப்பைக் குறித்து தேவனுடைய கருத்து என்ன என்பதை வேதவாக்கியங்களில் உள்ள அநேக போதனைகள் மிகவும் தெளிவாக விளக்குகின்றன. எரேமியா 1:5-ல் நான் உன்னை தாயின் வயிற்றில் உருவாக்கும் முன்னே உன்னை அறிந்தேன் என்று வாசிக்கிறோம். சங்கீதம் 139:13-14-ல் நம்மை உண்டாக்கினதிலும் கர்ப்பத்தில் நாம் உருவானபோதும் தேனுடையப் பங்கு என்னவென்று வாசிக்கிறோம். யாத்திராகமம் 21:22-25, ஜீவனுக்கு சேதமுண்டாக்கினவனுக்கும், ஸ்திரியின் கர்ப்பதிற்கு சேதமுண்டாக்கினவனுக்கும் ஒரே தண்டனை என்பதை குறிப்பிடுகிறது. தேவன் கர்பத்தில் உள்ள குழந்தையை வளர்ந்த நபராகவே கருதுகிறார் என்பதை இவ்வசனம் தெளிவாய் விளக்குகிறது. கிறிஸ்தவர்களுக்கு கருக்கலைப்பு என்பது ஏதோ பெண்களுடைய தேர்வு செய்யும் உரிமையை சார்ந்தது அல்ல. தேவனுடைய சாயலாக படைக்கப்பட்ட மனிதனுடைய வாழ்வா சாவா என்பதை சார்ந்தது (ஆதியாகமம் 1:26-27; 9:6).

கருக்கலைப்பை குறித்து கிறிஸ்தவர்களின் முதலாவது வாதம் என்னவென்றால், “கற்பழிப்பு மற்றும் கட்டாய உடலுறவினால் ஏற்பட்ட கருவை என்ன செய்வது?” என்பதாகும். கற்பழிப்பு அல்லது கட்டாய உடலுறவினால் ஏற்பட்ட கர்ப்பத்திற்கு தீர்வு அந்த கருவை கலைத்து அந்த குழந்தையை கொலைச்செய்வதுதானா? இரண்டு தவறுகள் ஒன்றாக சேர்ந்து ஒரு சரியை உருவாக்க முடியாது. கற்பழிப்பு அல்லது கட்டாய உடலுறவினால் பிறந்த குழந்தையை, குழந்தையில்லாத அன்புள்ள பெற்றோருக்கு தத்துக்கொடுக்கலாம் அல்லது அந்த குழந்தையை அதனுடைய தாயின் மூலமே வளர்க்கப்படலாம். குழந்தை முழுமையாக குற்றமற்றதாக இருக்கும்போது அதனுடைய தகப்பனின் பாவச்செயல் நிமித்தமாக அக்குழந்தை தண்டிக்கப்பட கூடாது.

கருக்கலைப்பை குறித்து கிறிஸ்தவர்களின் இரண்டாவது வாதம் “தாயின் உயிருக்கு ஆபத்து என்கிறபோது என்ன செய்ய முடியும்?” உண்மையாக, கருக்கலைப்பு பிரச்சனையை குறித்த இந்த கேள்விக்கு பதிலளிப்பது கடினமாகும். முதலாவது, தற்போதய உலகத்திலே இந்த காரணத்தினால் கருக்கலைப்பு நடைபெறுவது பத்தில் ஒரு சதவிகிதமே ஆகும் என்பதை நாம் நினைவுகூற வேண்டும். உயிரை காப்பாற்ற கருவைக்கலைக்கும் பெண்களை விட தங்கள் வசதிக்காக கருவைக் கலைப்பது மிக அதிகமாகும். இரண்டாவது தேவன் அற்புதத்தின் தேவனாக இருக்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். எல்லா மருத்துவமும் இதற்கு எதிராக இருந்தாலும் தேவனால் தாய் மற்றும் குழந்தையின் ஜீவனை காப்பாற்ற முடியும். எல்லாவற்றிற்க்கும் மேலாக இந்த கேள்விக்கான பதிலை கணவன், மனைவி மற்றும் தேவனே தீர்மானிக்க முடியும். இப்படிப்பட்ட மிகவும் கடினமான பிரச்சனையை சந்திக்கும் பெற்றோர் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள தேவனிடத்தில் அவருடைய ஞானத்திற்காக ஜெபிக்க வேண்டும் (யாக்கோபு 1:5).

90 சதவிகிதத்திற்கும் அதிகமான பெண்கள் தங்களுக்கு குழந்தை வேண்டாம் என்பதற்காகவே கருக்கலைப்பு செய்கின்றனர். 5 சதவிகிதத்திற்கும் குறைவான பெண்களே கற்பழிப்பு, கட்டாய உடலுறவு மற்றும் தாயின் உயிருக்கு ஆபத்து போன்ற காரணங்கள் நிமித்தம் கருக்கலைப்பு செய்து கொள்கிறார்கள். இந்த 5 சதவிகித நிகழ்வுகளில் கூட கருக்கலைப்பை முதலாவது வழியாக தெரிந்து கொள்ள கூடாது. வயிற்றிற்குள் இருப்பது மனித உயிராகும், அந்த குழந்தை பிறப்பதற்கு எல்லா முயற்ச்சிகளும் எடுக்கப்படுவது தகுதியானது ஆகும்.

கருக்கலைப்பு செய்தவர்கள் நினைவுகூறவேண்டியது என்னவெனில், கருக்கலைப்பு பாவம் மற்ற எல்லா பாவங்களைப் பார்க்கிலும் குறைவாக மன்னிக்கப்படுவதற்குரியதான பாவமல்ல என்பதாகும். கிறிஸ்துவுக்குள்ளாக எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட முடியும் (யோவான் 3:16; ரோமர் 8:1; கொலோசெயர் 1:14). கருக்கலைப்பு செய்த பெண், கருக்கலைப்பு செய்ய தூண்டிய ஆண் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த மருத்துவர் ஆகிய எல்லாரும் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தால் மன்னிக்கப்பட முடியும்.

English



முகப்பு பக்கம்

கருக்கலைப்பைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries