settings icon
share icon
கேள்வி

முழுமையான சத்தியம் / உலகளாவிய சத்தியம் என்கிற ஒன்று இருக்கிறதா?

பதில்


முழுமையான சத்தியம் அல்லது உலகளாவிய சத்தியம் என்ன என்பதை அறிந்துகொள்வதற்கு, சத்தியம் என்பது என்னவென்று நாம் வரையறுத்து அதன் சொற்பொருள் என்ன என்பதை அறிந்துகொள்வதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அகராதியின்படி சத்தியம் என்பது "உண்மை அல்லது மெய்யானவையின் உறுதித்தன்மை; உண்மையென்று நிரூபிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வாக்கியம்" என்பதாக வருகிறது. சத்தியமான உண்மை என்று எதுவும் கிடையாது ஆனால் எல்லாம் பலனுணர்வுகள் மற்றும் கருத்துக்கள் மட்டுமே என்று சிலர் சொல்கின்றனர். மற்றவர்கள் முழுமையான சத்தியம் நல்லது உண்மை என்கிற ஒன்று உண்டு என்று விவாதிக்கின்றனர்.

ஒரு கருத்துப்பாங்கு கூறுவது என்னவென்றால், உண்மையை வரையறுக்கக் கூடிய எந்த ஒரு தராதரமும் இல்லை என்பதாகும். எல்லாம் ஏதேனும் ஒன்றோடு தெடர்புடையதாகவே இருக்கிறது எனவே மெய்யாகவே உண்மை என்கிற ஒன்று இல்லை என்று இந்த கருத்தை வலியுறுத்துபவர்கள் விசுவாசிக்கின்றனர். இறுதியாக இதனால் தார்மீக தராதரம் என்று ஒன்றுமில்லை, ஒரு செயல் நேர்மறையானதா அல்லது எதிர்மறையானதா, சரியா அல்லது தவறா என்று தீர்மானிக்க எந்த ஒரு அதிகாரமுமில்லை. அதாவது எது சரி அல்லது எது தவறு என்பதை சூழ்நிலையே தீர்மானிக்கிறது என்கிற “சூழ்நிலை ஒழுக்கநெறிக்கு” நேராக இந்த கருத்து நடத்துகிறது. சரி என்றும் தவறெனன்றும் ஒன்று கிடையாது, எனவே காலத்தின் அடிப்படையிலும் சூழ்நிலையின் படியேயும் எதை சரி என்று உணர்கிறோமோ அல்லது தெரிகிறதோ அது உண்மையாக இருக்கிறது. நிச்சயமாக இந்த சூழ்நிலை ஒழுக்க நெறி “எதுவெல்லாம் நல்லது என்று தோன்றுகிறதோ” அதன்படி ஜீவிக்கும் மனோபாவத்துடன் இருக்கக் கூடிய உள்ளுணர்வு சார்ந்த நிலைக்கு நேராக நடத்துகிறது. இது சமுதாயத்திற்கும் தனிமனிதனுக்கும் அழிவுகரமான விளைவை ஏற்படுத்துகிறது. எல்லா மதிப்புகளையும், விசுவாசங்களையும், வாழ்க்கை முறைகளையும், மற்றும் உண்மைகளையும் சமமாகவே மதிப்பிடுகிற சமுதாயத்தை உருவாக்குகிற பின்நவீனத்துவம் இதுவே.

மற்ற கருத்துப்பாங்கு கூறுவது என்னவென்றால், எது உண்மை எது தவறு என்பதை வரையறுக்கக்கூடிய தரம் மற்றும் முழுமையான சத்தியம் என்பது ஒன்று உண்டு என்பதாகும். எனவே நடக்கைகள் சரியா அல்லது தவறா என்பதை முழுமையான சத்தியத்தை வரையறுக்கக்கூடிய தராதரத்தின் அடிப்படையில் தீர்மானிக்க முடியும். எந்த ஒரு பூரணமும் எந்த ஒரு சத்தியமும் இல்லை என்பதால்தான் பெருங்குழப்பம் பரவுகின்றது. உதாரணமாக புவியீர்ப்பு விசையின் விதியை எடுத்துக்கொள்ளலாம். ஒரு முழுமையான சத்தியம் இல்லை என்றால், நாம் ஒரு இடத்தை விட்டு நகர்வதற்கு முன் நாம் ஒரு இடத்தில் உட்காருவதா அல்லது நிற்பதா என்கிற நிச்சயமில்லாதிருப்போம். இரண்டும் இரண்டும் எப்போதும் நான்காக இருக்கவில்லை என்றால் நாகரிகத்தின் விளைவுகள் பேரழிவாக இருக்கும். அறிவியல் மற்றும் இயற்பியல் விதிமுறைகள் பொருத்தமற்றதாக இருக்கும் வணிகம் சாத்தியமில்லாததாக இருக்கும். என்ன ஒரு அலங்கோலம்! அதிர்ஷ்டவசமாக, இரண்டும் இரண்டும் எப்போதும் நான்காகத்தான் இருக்கிறது. முழுமையான சத்தியம் என்கிற ஒன்று உண்டு, நாம் அதை காணவும் புரிந்துகொள்ளவும் முடியும்.

முழுமையான சத்தியம் என்பது இல்லை என்கிற கூற்றை உருவாக்குவது பொருத்தமற்ற வாதமாக இருக்கிறது. இன்று அநேகர் முழுமையான அல்லது உலகளாவிய சத்தியத்தை மறுக்கிற கலாச்சார சார்புவாதத்தை தழுவுகின்றனர். “முழுமையான சத்தியம் இல்லை” என்று கூறுகிறவர்களிடம் கேட்கப்படவேண்டிய ஒரு நல்ல கேள்வி: “நீ முழுமையான நிச்சயத்தோடுதான் இதை சொல்கிறாயா?” இதற்கு அவர்கள் ஆம் என்று பதில் கூறுவார்களானால் அவர்கள் முழுமையான ஒரு அறிக்கையை சொல்லியிருக்கிறார்கள், அதுவே முழுமையான என்பதை உள்ளடக்கி இருக்கிறது என்பதற்கு ஆதாரம் ஆகும். முழுமையான சத்தியம் என்று ஒன்று கிடையாது என்பதையே ஒரு முழுமையான சத்தியமாக இவர்கள் கூறுகிறார்கள்.

முழுமையான அல்லது உலகளாவிய சத்தியங்கள் இல்லை என்பதை விசுவாசிக்க ஒருவர் இந்த சுய முரண்பாட்டு பிரச்சனையோடு சேர்த்து பிற தர்க்க சிக்கல்களையும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது. எல்லா மனிதர்களுக்கும் குறுகிய அறிவு மற்றும் வரையறைக்குட்பட்ட சிந்தையே இருக்கிறபடியால் தர்க்கரீதியான முறையில் முழுமையான எதிர்மறையான அறிக்கையை செய்ய முடியாது. தர்க்கரீதியாக ஒரு நபர் “தேவன் இல்லை” (அநேகர் சொன்னாலும்) என்று சொல்ல முடியாது ஏனென்றால் அப்படி ஒரு கூற்றை சொல்வதற்கு அந்த நபர் ஆரம்பம் முதல் முடிவுவரை இந்த பிரபஞ்சத்தை குறித்த முழுமையான அறிவு படைத்தவராக இருக்க வேண்டும். அது சாத்தியமில்லாத காரியம், அதனால் அதிகபட்சமாக ஒருவர் “எனக்கு இருக்கும் இந்த குறுகிய அறிவின் படி நான் தேவன் இல்லை” என்பதை விசுவாசிக்கிறேன் என்று மட்டுந்தான் சொல்லலாம்.

முழுமையான அல்லது உலகளாவிய சத்தியங்களை மறுதலிப்பதில் உள்ள மற்றொரு பிரச்சனை என்னவென்றால், நம்முடைய சொந்த மனசாட்சி, சொந்த அனுபவம், மற்றும் இந்த உலகத்தில் நாம் காணும் சத்தியங்களின்படி வாழ தவறுகிறோம் என்பதாகும். முழுமையான சத்தியம் என்று ஒன்று இல்லையென்றால் பிறகு முடிவான நிலையில் எதைக்குரித்தும் எதுவுமே சரியுமில்லை தவறுமில்லை என்றாகிவிடும். உனக்கு எது சரியோ அது எனக்கும் சரி என்று அர்த்தமில்லை. இந்த மாதிரியான சார்புவாதத்தை உபயோகிக்கும் போது எல்லோரும் தங்கள் ஜீவியத்திற்கு தேவையான சொந்த விதிகளை ஏற்படுத்திகொள்கின்றனர் அவர்களுக்கு எது சரி என்றுபடுகிறதோ அதையே செய்கின்றனர். தவிர்க்கமுடியாமல் ஒருவருடைய சரி என்ற உணர்வு மற்றவருக்கு முரண்பாடாக காணப்படலாம். சிகப்பு விளக்கு எரியும்போது அந்த போக்குவரத்து விளக்கை நான் புறக்கணிப்பது எனக்கு சரியாக இருக்குமேயானால் என்னவாகும்? நான் ஆபத்திற்கு என் உயிரை பனையம் வைக்கிறேன் என்றர்த்தம். உன்னிடமிருந்து திருடுவது எனக்கு சரியாக இருக்கலாம் ஆனால் உனக்கு அது தவறானது. தெளிவாக எது சரி எது தவறு என்பதில் நம்முடைய தரம் சச்சரவு மிகுந்ததாகிவிடும். நாம் பொறுப்புடன் நடந்து கொள்வதற்கு ஏதுவாக முழுமையான சத்தியம், சரி மற்றும் தவறுக்கான தரம் இல்லை என்றால் பின்னர் நாம் எதைக்குறித்தும் உறுதியாக இருக்க முடியாது. மக்கள் அவர்களின் விருப்பம்போல் விடுதலையோடு செயல்படுவார்கள் - கொலை, கற்பழிப்பு, திருட்டு, பொய், ஏமாற்றுதல் மற்றும் இது போன்ற பல செயல்கள் தவறு என்று ஒருவராலும் சொல்ல முடியாததாகிப் போய்விடும். அரசாங்கம், சட்டம், நீதி, நியாயம் என்பவைகள் இருக்காது, ஏனென்றால் பெரும்பான்மையான ஜனங்களுக்கு ஒரு தரத்தை உருவாக்கி அதை சிறுபான்மையினரிடம் வற்புறுத்தவும் முடியும் என்கிற அதிகாரம் இருப்பதாக ஒருவரால் கூற இயலாது. முழுமையான சத்தியங்களாலான தராதரம் இல்லாத ஒரு உலகம் என்பது கற்பனையில் கூட மிக பயங்கரமானதாக இருக்கும்.

ஆவிக்குரிய ரீதியில் இந்த சார்புவாத கொள்கை எந்தஒரு ஒரு மதமுமில்லை மற்றும் தேவனோடு ஐக்கியம் கொள்ள எந்தஒரு வழியுமில்லை இருக்கிறதான நிலையில், ஒரு மத அடிப்படையிலான குழப்பத்தை ஏற்படுத்துகிறது. உண்மையாகவே மதமில்லை என்றால் தேவனோடு கூட சரியான உறவு வைப்பது என்பது சாத்தியமில்லை. எனவே மரணத்திற்கு பின்பான வாழ்க்கையைப் பற்றி முழுமையான நம்பிக்கையும் அறிக்கையையுமுடைய எல்லா மதங்களும் தவறானவைகளாக தான் இருக்கும். இரண்டு மதங்களும் வெவ்வேறு சத்தியங்களைப் போதித்தாலும் தங்களிடமே பரலோகத்திற்கான வழி இருக்கிறது என்று சொன்னாலும் இரண்டு வேறுபாடான மதங்கள் சமமாக உண்மை என்பதை விசுவாசிப்பது இன்றைய மக்களுக்கு அசாதாரணமான காரியமல்ல. முழுமையான சத்தியம் உண்டு என்பதை மறுப்பவர்கள் இதை புறக்கணிக்கின்றனர். மேலும் எல்லா மதங்களும் சமம் எல்லா வழிகளும் பரலோகத்திற்கே நடத்துகின்றன என்று போதிக்கிற சகிப்புதன்மை பிரபஞ்சத்துவத்தை தழுவுகின்றனர். இப்படிப்பட்ட இந்த உலக கண்ணோட்டத்தை பின்பற்றுபவர்கள், இயேசுவே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறார் மற்றும் அவரே சத்தியத்தின் இறுதியான வெளிப்பாடும் பரலோகத்திற்கு போகிற வழியுமாக இருக்கிறார் (யோவான் 14:6) என்று வேதாகமம் சொல்லுவதை விசுவாசிக்கும் சுவிசேஷ கிறிஸ்தவர்களை கடுமையாக எதிர்கின்றனர்.

பின்நவீனத்துவ சமூகத்தில் சகிப்புதன்மை ஒரு முக்கிய நல்லொழுக்கமாக மாறிவிட்டது. அதுவே முழுமையானது எனவே சகிப்புதன்மையின்மை மட்டுமே தீமையாக இருக்கிறது. எந்த வறட்டுத்தனமான விசுவாசமும் குறிப்பாக முழுமையான சத்தியத்தை விசுவாசிப்பது சகிப்புத்தன்மையின்மையை குறிக்கிறது எனவே அது பாவம் ஆகும். முழுமையான சத்தியத்தை நிராகரிப்பவர்கள் அதிகமாக சொல்வது நீ மற்றவர்களிடம் உன்னுடைய விசுவாசத்தை சுமத்தாத வரை நீ உனக்கு வேண்டிய எதை விசுவாசித்தாலும் அது சரியே. இதுதான் எது சரி மற்றும் எது தவறு என்பதற்கான கருத்து ஆகும். இதை விசுவாசிப்பவர்கள் இதை மற்றவர்களிடம் சுமத்த நினைக்கின்றனர். மற்றவர்கள் பின்பற்றுகின்றனர் என்று குற்றம் கூறுகிற அதே தரத்தை இவர்களும் பின்பற்றுவதன் மூலம் இவர்கள் எதை நிலைநிறுத்த விரும்புகின்றனறோ அதையே மீறுகின்றனர். இது அவர்களின் மற்றொரு முரண்பாடான நிலையாகும். இந்த கருத்தை கையாளுபவர்கள் தங்களின் நடக்கைகளுக்கு பெறுப்பேற்க மனதில்லாததினால் இதை பின்பற்றுகின்றனர். முழுமையான சத்தியம் இருக்குமேயானல் எது சரி எது தவறு என்பதற்கு முழுமையான தரமும் இருக்கும் அப்படி இருக்கும் போது அதற்கு நாம் பொறுப்பாளராக இருக்க வேண்டும். இந்த முழுமையான சத்தியத்தை மறுதலிக்கும் போது அவர்கள் உண்மையில் இந்த பொறுப்பையே புறக்கணிக்கின்றனர்.

வாழ்வின் விளக்கத்திற்காக பரிணாம வளர்ச்சியின் கொள்கையை தழுவுகிற சமுதாயத்தின் பிரதிபலிப்பே இந்த முழுமையான சத்தியம் அல்லது உலகளாவிய சத்தியம் மற்றும் கலாச்சார சார்புவாதம் ஆகியவற்றை மறுப்பவர்கள் உருவாகக் காரணம். இயற்கைப் பரிணாம வளர்ச்சி உண்மை என்றால் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லை, நமக்கு நோக்கமுமில்லை, மற்றும் முழுமையான சரி அல்லது தவறு என்று எதுவும் இருக்க முடியாது. மனிதன் அவன் விரும்புகிறபடி வாழலாம், அவனுடைய நடக்கைகளுக்கு அவன் யாருக்கும் பொறுப்பாளியல்ல. பாவமான மனிதன் தேவன் இருக்கிறார் என்பதையும் முழுமையான சத்தியத்தையும் மறுதலித்தாலும் நியாயத்தீர்ப்புக்காக அவருக்கு முன்பாக ஒரு நாள் நிச்சயமாக நிற்க வேண்டியது அவசியம். "தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்தியவல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை. அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி," (ரோமர் 1:19-22) என்று வேதாகமம் எடுத்துரைக்கிறது.

முழுமையான சத்தியம் இருக்கிறது என்பதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? ஆம். நமக்குள்ளாக இருக்கிற நம்முடைய மனசாட்சியே நமக்கு இந்த உலகம் இருக்க வேண்டிய சரியான விதத்தை உணர்த்துகிறது. அதாவது சில காரியங்கள் சரி சில காரியங்கள் தவறு என்று நமக்கு உணர்த்துகிறது. பாடுகள், பட்டினி, கற்பழிப்பு, மற்றும் தீமைகள், தவறு என்று நம்முடைய மனசாட்சி நமக்கு உணர்த்துகிறது. இது நம்மை அன்பு, பெருந்தன்மை, இரக்கம், சமாதானம் ஆகிய சரியான காரியங்களை செய்ய வேண்டும் என்றும் ஏவுகிறது. இது எல்லா கலாசாரத்திலும் எல்லா நேரமும் உலகளாவிய சத்தியம். வேதாகமம் மனிதனுடைய மனசாட்சியை ரோமர் 2:14-16ல் விளக்குகிறது: "அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள். என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்."

முழுமையான சத்தியம் உண்டு என்பதற்கான இரண்டாவது ஆதாரம் அறிவியல் ஆகும். அறிவியல் என்பது அறிவின் நாட்டம், நாம் அறிந்ததை படிப்பது மற்றும் இன்னும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற நாட்டம் ஆகும். எனவே உலகிலிருக்கும் மெய்யான யதார்த்தங்கள் இருக்கின்றன என்பதை விசுவாசிக்க இதை நிரூபிக்கும் அறிவியல் ஆய்வு அவசியமானது மற்றும் இந்த யதார்த்தங்கள் கண்டுபிடிக்கவும் நிரூபிக்கப்படவும் கூடும். தராதரம் இல்லை என்றால் படிப்பதற்கு என்ன இருக்கிறது? அறிவியல் கண்டுபிடிப்புகள் உண்மை என்று எப்படி ஒருவர் அறிந்து கொள்ள முடியும்? அறிவியல் விதிகள் இருக்கிற முழுமையான உண்மையின் மூலமே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முழுமையான சத்தியம் அல்லது உலகளாவிய சத்தியம் உண்டு என்பதற்கு மூன்றாவது ஆதாரம் மதம் ஆகும். உலகத்திலுள்ள எல்லா மதங்களும் வாழ்க்கைக்கு அர்த்தத்தை அல்லது வரையறையை கொடுக்க முயற்ச்சி செய்கின்றனர். அவைகள் எளிமையாக இருக்கிறது என்பதை விட ஏதோ ஒன்றின் மீதான மனுகுலத்தின் விருப்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளன. மதங்களின் மூலம் மனிதன் தேவனை, எதிர்காலத்தை குறித்த நம்பிக்கையை, பாவ மன்னிப்பை, போராட்டத்தின் மத்தியில் சமாதானத்தை மற்றும் ஆழமான கேள்விகளுக்கு பதிலை தேடுகிறான். மனிதன் பரிணாம வளர்ச்சியுள்ள மிருகம் என்பதை விட மேலான உயரிய நோக்கத்திற்கு மதங்கள் ஆதாரமாகவும்; ஆள்தத்துவமுள்ள மற்றும் குறிக்கோளையுடைய சிருஷ்டிகர் இருக்கிறார், அவரே மனிதனுக்கு அவரை அறிந்து கொள்வதற்கான வாஞ்சையை கொடுத்திருக்கிறார் என்பதற்கும் ஆதாரமாகவும் இருக்கிறது. சிருஷ்டிகர் என்று ஒருவர் இருப்பாரேயானால் அவரே முழுமையான சத்தியத்திற்கான தரநிலையாக இருக்கிறார். மேலும் அவருக்கு சத்தியத்தை ஏற்படுத்த அதிகாரமிருக்கிறது.

அதிஷ்டவசமாக அப்படி ஒரு சிருஷ்டிகர் இருக்கிறார். அவரே நமக்கு அவருடைய சத்தியத்தை தமது வார்த்தையாகிய வேதாகமத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். முழுமையான சத்தியத்தை அல்லது உலகளாவிய சத்தியத்தை தெரிந்து கொள்ள ஒரே வழி நானே சத்தியம் என்று தன்னை வெளிப்படுத்தின இயேசுவை விசுவாசிப்பதே ஆகும். இயேசு, அவரே ஒரே வழி, ஒரே சத்தியம், ஒரே ஜீவன் மற்றும் தேவனிடத்திற்கு போவதற்கான ஒரே பாதையுமாக இருக்கிறார் என்று கூறினார் (யோவான் 14:6). முழுமையான சத்தியம் இருக்கிறது, அந்த சத்தியம் நமக்கு வானத்தையும் பூமியையும் உண்டாக்கின சர்வவல்லமையுள்ள தேவன் இருக்கிறார் மற்றும் நாம் அவரை தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ள அவரே தம்மை நமக்கு அவருடைய குமாரன் இயேசுகிறிஸ்துவின் மூலம் வெளிப்படுத்தினார் என்பதை காட்டுகிறது. அதுவே முழுமையான சத்தியமாகும்.

English



முகப்பு பக்கம்

முழுமையான சத்தியம் / உலகளாவிய சத்தியம் என்கிற ஒன்று இருக்கிறதா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries