கேள்வி
ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் செயலில் விளைந்த ஒரு ஒழுக்கம் கெட்ட செயலை ஒரு கிறிஸ்தவ பெற்றோர் எவ்வாறு கையாள வேண்டும்?
பதில்
திருமணம் என்பது ஒரு ஜோடியை ஆவிக்குரிய ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஒன்றிணைக்கும் ஒரு உடன்படிக்கை. துரோகம் ஒரு அழிவுகரமான அடியை ஏற்படுத்துகிறது, இது திருமணத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கிறது, பெரும்பாலும் அது சீர்படுத்த முடியாத பெரும் சேதத்தை விளைவிக்கும். விபச்சாரம் மூலம் ஒரு குழந்தை கருத்தரிக்கப்படும் விஷயத்தில் இது குறிப்பாக உண்மையாக இருக்கும்.
ஒரு பெற்றோரின் பொறுப்பு, குழந்தையின் கருத்தரிப்பின் சூழ்நிலைகளால் தீர்மானிக்கப்படுவதில்லை. விபச்சார செயலின் மூலம் ஒரு குழந்தையை உலகிற்கு கொண்டு வருவது என்பது சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் சாதகமற்றது, ஆனால் குழந்தை தவறிழைக்காதவர் மற்றும் அவனது / அவளது வாழ்க்கையில் இரண்டு பெற்றோருக்கு தகுதியானவர் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
ஒரு மனைவி தன் கணவனுக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகும் அவருடன் இருக்க முடிவு செய்தால், அவள் பாவத்தை மன்னிக்க தயாராக இருக்க வேண்டும். தேவன் நம்மை மன்னித்தது போல, கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் மன்னிக்க வேண்டும் என்று வேதாகமம் சொல்கிறது (மத்தேயு 6:14-15). கோபம் மற்றும் பொறாமை உணர்வுகளை அவளுக்குப் பின்னால் வைப்பதைத் தேர்ந்தெடுப்பதை இது குறிக்கிறது.
சிறந்த முறையில், கணவனின் மனைவி வேறொருவருடன் ஒரு குழந்தைக்குத் தந்தையாக இருந்தால், குழந்தையை மாற்றாந்தாய் ஆண் அல்லது மாற்றாந்தாய் பெண் என்று தழுவிக்கொள்ள முடியும். கணவன் தன் குழந்தையுடன் உறவை ஏற்படுத்துவதற்கு அவள் குறுக்கே நிற்கக்கூடாது, இது அவளுக்கு வேதனையாக இருந்தாலும் கூட அப்படி குறுக்கே நிற்கக்கூடாது. அவர் தனது பிள்ளைகள் அனைவருக்கும் பண ரீதியாக, ஆவிக்குரிய மற்றும் உணர்ச்சிபூர்வமான கடமைகளைக் கொண்டிருக்கிறார் (எபேசியர் 6:4).
விபச்சாரம் குடும்பத்தை தகர்க்கும் சாத்தியமுள்ள ஒரு பாவம் என்றாலும், அது ஒரு திருமணத்தின் முடிவாக இருக்க வேண்டியதில்லை. மாறாக, நம்பிக்கை மற்றும் இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிதல் என்ற உறுதியான அடித்தளத்தின் மீது தங்கள் உறவை மீண்டும் கட்டியெழுப்புவதில் தம்பதியர் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். தேவனுடைய கிருபையும் இரக்கமும் கிறிஸ்துவின் மீதுள்ள வலுவான விசுவாசம் மட்டுமே இந்த கடினமான சூழ்நிலையில் ஒரு ஜோடியை கடந்து செல்லும்படிச் செய்ய முடியும். ஆனால் கிருபை, இரக்கம், விசுவாசம் அனைத்தும் பரிசுத்த ஆவியின் மூலம் கிடைக்கப்பெறும் தேவனுடைய பரிசுகளாகும், மேலும் வாழ்க்கையின் எல்லா கஷ்டங்களிலும் தேவனை உண்மையாக மகிமைப்படுத்த விரும்புவோருக்கு அவை தேவனிடமிருந்து கிடைக்கின்றன.
English
ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் செயலில் விளைந்த ஒரு ஒழுக்கம் கெட்ட செயலை ஒரு கிறிஸ்தவ பெற்றோர் எவ்வாறு கையாள வேண்டும்?