கேள்வி
தனது வாழ்க்கைத்துணை வேறொரு நபரோடு உறவில் இருப்பதை விரும்புவதைக் காணும்போது ஒரு கிறிஸ்தவரின் பதில் என்னவாக இருக்க வேண்டும்?
பதில்
துரோகம் மிகவும் கடினமான மற்றும் வலிமிகுந்த சூழ்நிலையை உருவாக்குகிறது, இது அனைத்து உணர்ச்சிகளையும் உள்ளடக்கியது, மேலும், கிறிஸ்தவர்களுக்கு, விசுவாசத்தை கிட்டத்தட்ட உடைக்கும் இடம்வரை நீட்டிக்க முடியும். "அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” (1 பேதுரு 5:7). உங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால், அனுதினமும் ஆறுதல், ஞானம் மற்றும் வழிகாட்டுதலுக்காக தேவனிடம் செல்லுங்கள். மிகவும் ஆழமான சோதனைகளில் தேவன் நமக்கு உதவ முடியும்.
விபச்சாரம் எப்போதும் தவறு. "வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்" (எபிரெயர் 13:4). தேவன் பழிவாங்குபவர் என்ற உண்மையை காயப்பட்ட நபர் பிடித்துக்கொள்ள வேண்டும். அநீதி இழைக்கப்பட்ட தனிமனிதன் சமமாகப் பெறுவதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. தேவன் நம்மைப் பழிவாங்கும் ஒரு சிறந்த வேலையைச் செய்வார். நமக்கு துரோகம் இழைக்கப்படும்போது, ஒவ்வொரு விவரத்தையும் நன்றாய் அறிந்தவரிடம், மற்றும் அதை சரியான முறையில் கையாள்பவரிடம் நாம் வலியை ஒப்புக்கொடுக்க வேண்டும்.
ஜெபம். ஞானத்திற்காகவும், சுகம் பெறுவதற்காகவும், வழிகாட்டுதலுக்காகவும் தேவனைத் தேடுங்கள். உங்களுக்காக ஜெபியுங்கள், தீங்கிழைத்தவருக்காக ஜெபியுங்கள், மற்றும் சம்பந்தப்பட்ட மற்றவர்களுக்காகவும் ஜெபியுங்கள். உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் மற்றும் முடிவுகளை வழிநடத்த தேவனிடம் ஜெபம் செய்யுங்கள்.
நேர்மையாக இருங்கள். ஒரு துரோகம் இழைக்கப்பட்ட தம்பதி ஆழ்ந்த காயத்தின் விளைவுகளை அனுபவிக்கப் போகிறார். துரோகத்தால் ஏற்படும் கோபத்தையும் காயத்தையும் ஈடுபடுத்துவது பொருத்தமானது. இந்த உணர்ச்சிகளை தேவனிடம் வெளிப்படுத்துவது உண்மையான குணமடைதலுக்கான முதல் படியாக இருக்கும் (சங்கீதம் 77:1-2 ஐப் பார்க்கவும்). நம்முடைய உணர்ச்சிகளையும் தேவைகளையும் தேவனிடம் ஒப்படைப்பது, அவர் நம் இருதயங்களுக்கு சுகமளிக்க அனுமதிக்கிறது, இதனால் நாம் குற்றத்தை விட்டுவிடலாம். ஒரு கிறிஸ்தவ ஆலோசகர் அல்லது போதகரின் தெய்வீக ஆலோசனை உதவியாக இருக்கும்.
மன்னிக்க தயாராக இருங்கள். நாம் மன்னிக்கப்பட்டது போல் மற்றவர்களையும் மன்னிக்க வேண்டும் (எபேசியர் 4:32). தகாத உறவில் ஈடுபட்டு, மனந்திரும்பி நம்மிடம் வந்து, தன் பாவத்தை ஒப்புக்கொண்ட, தன் மனைவி/கணவன் உட்பட எவருக்கும் மன்னிப்பு வழங்க நாம் சித்தமுள்ளவர்களாகவும் தயாராகவும் இருக்க வேண்டும் (மத்தேயு 6:14-15; 18:23-35; எபேசியர் 4:31-32; கொலோசெயர் 3:13). உண்மையான மன்னிப்பு சில காலத்திற்கு நிறைவேற்றப்படாமல் இருக்கலாம், ஆனால் மன்னிக்கும் விருப்பம் எப்போதும் இருக்க வேண்டும். கசப்பை அடைவது பாவம் மற்றும் அன்றாட முடிவுகளையும் அது எதிர்மறையாக பாதிக்கும்.
ஞானமுள்ளவர்களாக இருங்கள். துரோக செய்த வாழ்க்கைத் துணை தனது பாவத்திற்காக மீண்டும் மீண்டும் வருந்தாத சாத்தியத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். தன் பாவத்தை ஒப்புக்கொள்ளாமல், மனந்திரும்பாமல் இருக்கும் ஒருவரை நாம் மன்னிக்க வேண்டுமா? பதிலின் ஒரு பகுதி எது மன்னிப்பு இல்லை என்பதை நினைவில் கொள்வது:
மன்னிப்பு என்பது மறப்பதல்ல. அனுபவத்தை மறந்துவிடாமல் அதைச் சமாளித்து முன்னேறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மன்னிப்பு என்பது விளைவுகளை நீக்குவது அல்ல. பாவம் இயற்கையான விளைவுகளை ஏற்படுத்துகிறது, மன்னிக்கப்பட்டவர்கள் கூட தங்கள் கடந்தகால தேர்வுகளின் விளைவாக இன்னும் பாதிக்கப்படலாம்: “தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ? பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான்” (நீதிமொழிகள் 6:28-29).
மன்னிப்பு என்பது ஒரு உணர்வு அல்ல. குற்றவாளியை மன்னிக்க வேண்டும் என்பது அர்ப்பணிப்பு. இது குற்றம் செய்தவருக்கும் குற்றமிழைக்கப்பட்டவருக்கும் இடையே செய்யப்படும் பரிவர்த்தனையாகும். உணர்வுகள் மன்னிப்புடன் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.
மன்னிப்பு என்பது ஒரு தனிநபரின் இருதயத்தில் உள்ள தனிப்பட்ட, இரகசியமான செயல் அல்ல. மன்னிப்பு என்பது குறைந்தது இரண்டு நபர்களை உள்ளடக்கியது. அதனால்தான் அறிக்கை செய்தல் மற்றும் மனந்திரும்புதல் தேவைப்படுகிறது.
மன்னிப்பு என்பது நம்பிக்கையை தானாக மீட்டெடுப்பது அல்ல. இன்று துரோகமிழைத்த மனைவியை மன்னிப்பது நாளை எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும் என்று நினைப்பது தவறு. தங்களை நம்பத் தகுதியற்றவர்கள் என்று நிரூபித்தவர்களை நம்பாமல் இருப்பதற்கு வேதம் பல காரணங்களை நமக்குத் தருகிறது (லூக்கா 16:10-12 பார்க்கவும்). நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவது உண்மையான மன்னிப்பை உள்ளடக்கிய நல்லிணக்கத்தின் செயல்முறைக்குப் பிறகு மட்டுமே தொடங்க முடியும்—நிச்சயமாக, அறிக்கை செய்தல் மற்றும் மனந்திரும்புதலை உள்ளடக்கியது.
மேலும், முக்கியமாக, வழங்கப்படும் மன்னிப்பு என்பது பெறப்பட்ட மன்னிப்புக்கு சமமானதல்ல. மன்னிக்கும் மனப்பான்மை—மன்னிக்கத் தயாராக இருப்பது—மன்னிப்பின் உண்மையான பரிவர்த்தனையிலிருந்து வேறுபட்டது. அறிக்கை செய்தல் மற்றும் மனந்திரும்புதல் மற்றும் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் ஆகியவற்றின் செயல்முறையை நாம் குறுக்கிடக்கூடாது.
தவறிழைக்கப்பட்ட நபரால் மன்னிப்பு வழங்கப்படலாம், ஆனால், அது முழுமையாக இருக்க, அந்த விவகாரத்தில் ஈடுபட்டவர் மன்னிப்புக்கான அவரது தேவையை ஒப்புக்கொண்டு அதைப் பெற்று, உறவில் நல்லிணக்கத்தைக் கொண்டுவர வேண்டும்.
மன்னிக்கப்படுங்கள். "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்" (1 யோவான் 1:9). ஒரு திருமணம் நெருக்கடியில் இருக்கும்போது, இரு தரப்பினரும் தேவனிடம் உதவிக் கேட்க வேண்டும், ஒவ்வொருவரும் முழு சூழ்நிலைக்கும் எவ்வாறு பங்களித்திருக்கலாம் என்பதைப் பார்க்கவும், தேவனுக்கு முன்பாக குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபடவும் உதவ வேண்டும். அப்போதிருந்து, அவருடைய ஆலோசனையையும் வழிகாட்டுதலையும் பெற சுதந்திரம் இருக்கும். அவர்களால் செய்ய முடியாததைச் செய்ய அவருடைய பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு உதவுவார். “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலிப்பியர் 4:13).
தேவன் வழிநடத்துவதால், உண்மையான மன்னிப்பு மற்றும் ஒப்புரவாகுதல் சாத்தியமாகும். எவ்வளவு காலம் எடுத்தாலும், மன்னிக்கவும் ஒப்புரவாகவும் எல்லா முயற்சிகளும் செய்யப்பட வேண்டும் (மத்தேயு 5:23-24 ஐப் பார்க்கவும்). தங்குவதா அல்லது வெளியேறுவதா என்பதைப் பொறுத்தவரை, "எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணினால், அவன் விபசாரம் பண்ணுகிறவனாயிருப்பான்" (மத்தேயு 19:9, NLT). அப்பாவி தரப்பினர் விவாகரத்துக்கான காரணங்களைக் கொண்டிருந்தாலும், தேவனுடைய விருப்பம் மன்னிப்பு மற்றும் ஒப்புரவாகுதல் ஆகும்.
சுருக்கமாக, ஒரு கிறிஸ்தவரின் மனைவிக்கு வேறொரு உறவில் விருப்பம் ஏற்பட்டால், அநீதி இழைக்கப்பட்ட நபர் கசப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும் (எபிரெயர் 12:15) தீமைக்கு தீமை செய்யாமல் கவனமாக இருங்கள் (1 பேதுரு 3:9). நாம் மன்னிக்க தயாராக இருக்க வேண்டும் மற்றும் உண்மையாக ஒப்புரவாகுதலை விரும்பவேண்டும்; அதே சமயம், மனந்திரும்பாதவர்களுக்கு மன்னிப்பு வழங்கக் கூடாது. எல்லாவற்றிலும் நாம் தேவனைத் தேட வேண்டும், நம்முடைய முழுமையையும் சுகத்தையும் அவரிடம் நாம் காண வேண்டும்.
English
தனது வாழ்க்கைத்துணை வேறொரு நபரோடு உறவில் இருப்பதை விரும்புவதைக் காணும்போது ஒரு கிறிஸ்தவரின் பதில் என்னவாக இருக்க வேண்டும்?