settings icon
share icon
கேள்வி

குழந்தைகள் மற்றும் சிறார்கள் இறக்கும்போது என்ன நடக்கிறது? பொறுப்புணர்வு வயதை வேதாகமத்தில் எங்கே காண்கிறோம்?

பதில்


"பொறுப்புணர்வு வயது" என்கிற கருத்தானது, குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வயதை எட்டும் வரை அவர்கள் செய்கிற பாவங்களுக்காக தேவனால் பொறுப்பேற்பதில்லை (கணக்கில் கொள்வதில்லை) என்பதோடு, "பொறுப்புணர்வு வயதை” அடைவதற்கு முன்னர் ஒரு குழந்தை இறந்துவிட்டால், தேவனுடைய கிருபையும் இரக்கமும், அது பரலோகத்திற்குள் பிரவேசிக்க வழிவகுக்கிறது என்பதாகும். “பொறுப்புணர்வு வயது என்கிற கருத்து வேதாகமத்தின்படியானதா? “அறியாமையிலுள்ள வயது” என்கிற அத்தகைய ஒரு விஷயம் இருக்கிறதா?

பொறுப்புணர்வு வயதைக் குறித்த விவாதத்தில் அடிக்கடி எழுப்பபடுகிற காரியம் என்னவென்றால், குழந்தைகள் மற்றும் இளம் வயதினராக இருப்பவர்கள் பாவமற்றவர்களாக இருப்பதில் "அப்பாவிகள்" இல்லை என்பதாகும். ஒரு சிசு அல்லது குழந்தை தனிப்பட்ட முறையில் பாவம் செய்யவில்லையென்றாலும், சிசுக்களும் குழந்தைகளும் உள்ளிட்ட எல்லாரும் தேவனுக்கு முன்பாக ஆதாமிடமிருந்தும் தங்கள் பெற்றோரிடமிருந்தும் பெறப்பட்ட ஜென்ம பாவத்தினாலே அவர்கள் குற்றவாளிகளாகவும், பாவம் செய்தவர்களாகவும் இருப்பதாக வேதாகமம் சொல்லுகிறது. நமது பெற்றோரிடமிருந்து பெறப்பட்டு பாவத்தை சுதந்தரிப்பதை மரபுவழி பாவம் என்கிறோம். சங்கீதம் 51:5-ல் தாவீது இவ்வாறு எழுதினார்: “இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்”. தான் கருவில் உருவாகும்போதே பாவியாக இருப்பதை தாவீது உணர்ந்துகொண்டார். மிகவும் சோகமான ஒரு உண்மை என்னவென்றால், ஆதாம் செய்த பாவத்தின் விளைவாக, குழந்தைகளும் கூட பாதிக்கப்படுகிறார்கள் மற்றும் மரிக்கிறார்கள். ஆதாமின் உண்மையான பாவத்தின் விளைவாக சரீர மற்றும் ஆவிக்குரிய மரணம் வந்தது.

ஒவ்வொரு நபரும், குழந்தையாக இருந்தாலும் அல்லது வயது வந்தவராக இருந்தாலும் தேவனுக்கு முன்பாக குற்றவாளியாக இருக்கிறார்கள்; ஒவ்வொருவரும் தேவனுடைய பரிசுத்தத்தை புண்படுத்தியுள்ளனர். கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதினால் பாவமன்னிப்பு பெற்றிருகிறதன் மூலம் மட்டுமே தேவன் ஒருவரை நீதிமானாகக் கருதமுடியும், அதுவே ஒருவர் நீதிமான் என்று அறிவிக்க வழியாக இருக்கிறது. ஆம் கிறிஸ்து ஒருவரே ஒரே வழி. இயேசு சொன்னதை யோவான் 14:6 குறிப்பிடுகிறது: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.” அப்போஸ்தலர் 4:12-ல், “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை” என்று பேதுரு கூறுகிறார். இரட்சிப்பு என்பது ஒரு தனிப்பட்ட தேர்வு ஆகும்.

இந்த தனிப்பட்ட தேர்வினை செய்யும் திறனை அடையாத பருவத்திலுள்ள குழந்தைகள் மற்றும் சிறார்களைப் பற்றி என்ன? பொறுப்புணர்வு வயதை அடைவதற்கு முன்னால் இறந்துபோகும் நபர்கள் தேவனுடைய கிருபையினாலும் இரக்கத்தினாலும் தானாகவே காப்பாற்றப்படுகிறார்கள் (இரட்சிக்கப்படுகிறார்கள்) என்பதே பொறுப்புணர்வு வயதாகும். கிறிஸ்துவின் மீதோ அல்லது அதற்கு எதிராகவோ ஒரு முடிவை எடுப்பதற்கு ஒருபோதும் தகுதி இல்லாததால் (பருவம் இல்லாததால்), அப்படி இறக்கும் அனைவரையும் தேவன் இரட்சிப்பார் என்ற பொறுப்புதான் பொறுப்புணர்வு வயதாகும். இந்த விவாதத்திற்குப் பேசக்கூடிய ஒரு வசனம் ரோமர் 1:20, “எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை” என்பதை நிராகரிக்கிறது என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டது. இது "தெளிவாய்க் காணப்படும்" என்கிற தேவனுடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகளை நிராகரிப்பதாகும். இந்த காரியம் இவைகளை தெளிவாக காண இயலாத அல்லது முடியாத குழந்தைகளுக்கு அல்லது தேவனைப் பற்றி நியாயப்படுத்த முடியாத மனத்திறனைக் கொண்ட பிள்ளைகள் பற்றிய கேள்வியை எழுப்புகிறது - அவற்றைக் கடைப்பிடிப்பதற்கான இயல்பான இயலாமை மற்றும் கூடாத செயலின் காரணம் அவர்களை இவற்றிலிருந்து நீங்களாக்கவில்லையா?

பதின்மூன்று வயதுவரை உடையவர்களே பொறுப்புணர்வு வயதிற்குட்பட்டவர்களாக பரிந்துரைக்கப்படுகிறார்கள், காரணம் 13-வது வயதில் வாலிப பருவத்தை அடைவதாக கருதப்படுகிற ஒரு யூத பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படி வரையறுக்கப்படுகிறது. ஆனாலும். 13 வயதில் தான் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார் என்பதற்கு வேதாகமத்தில் நேரடியாக எந்த ஆதாரமும் இல்லை. இது ஒரு குழந்தையிலிருந்து வேறொரு குழந்தைக்கு மாறுபடும். கிறிஸ்துவில் விசுவாசிக்க அல்லது அதற்கு எதிராகவோ ஒரு விசுவாசத்தை எடுக்கும் திறனைப் பெற்றிருந்தால், அந்த குழந்தை பொறுப்புணர்வு வயதை கடந்து விட்டது என்றர்த்தமாகிறது. இதைக்குறித்து சார்ள்ஸ் ஸ்பர்ஜனின் கருத்து என்னவென்றால், "ஒரு ஐந்து வயது குழந்தை உண்மையிலேயே ஒரு வாலிப பருவத்திலுள்ள வயதிலுள்ளவர் போல மறுபடியும் பிறந்த நிலையில் இரட்சிக்கப்படக்கூடும்” என்பதாகும்.

மேலே உள்ள காரியத்தை மனதில் இருத்திக்கொண்டு, இதையும் கவனியுங்கள்: கிறிஸ்துவின் மரணம் எல்லா மனிதர்களுக்கும் போதுமானதாக இருக்கிறது. 1 யோவான் 2:2 கூறுகிறது: “நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.” விசுவாசத்தில் கிறிஸ்துவிடம் வந்தவர்களின் பாவங்களை மட்டுமல்லாமல், இயேசுவின் மரணம் எல்லாருடைய பாவங்களுக்கும் போதுமானதாக இருக்கிறது என்பதை இந்த வசனம் தெளிவாக்குகிறது. கிறிஸ்துவின் மரணம் எல்லா பாவிகளுக்கும் போதுமானது என்கிற உண்மை, அவரை நம்புவதற்கு தகுதியற்றவர்களிடம் தேவன் செலுத்துவதற்கான சாத்தியத்தை இது அனுமதிக்கிறதாய் இருக்கிறது.

சிலர் பொறுப்புணர்வு வயதிற்கும், இஸ்ரவேல் தேசத்துக்கும், உடன்படிக்கையின் உறவுக்கும் இடையே உள்ள உறவைக் காணும்போது, அவர்கள் பிறந்த பிறகு எட்டாம் நாளில் பண்ணுகிற விருத்தசேதனம் தவிர உடன்படிக்கையில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய ஆண் குழந்தைகள் மீது வேறு எந்தவிதமான விதிமுறைகளும் விதிக்கப்படவில்லை (யாத்திராகமம் 12:48-50; லேவியராகமம் 12:3).

"பழைய உடன்படிக்கையின் உள்ளடங்கிய இயல்பு திருச்சபைக்கு பொருந்துமா?" என்கிற கேள்வி எழுகிறது. பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு, “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது” (அப்போஸ்தலர் 2:38-39) என்று கூறுகிறார். இங்கே “குழந்தைகள்” என்னும் சொல் (கிரேக்க மொழியில் “டெக்னோன்”) "குழந்தை, மகள், மகன்" என்று பொருள்படுகிறதாக வருகிறது. அப்போஸ்தலர் 2:39, பாவங்களை மன்னிப்பது எதிர்கால தலைமுறையினரையும் சேர்த்து எல்லோருக்கும் இருக்கிறது (அப்போஸ்தலர் 1:8) என்பதைக் காட்டுகிறது. இது குடும்பம் அல்லது வீட்டினர் இரட்சிப்பை போதிக்கவில்லை. மனந்திரும்பியவர்களின் குழந்தைகளும் மனந்திரும்ப வேண்டிய அவசியமாய் இருக்கிறது.

இந்த விடயத்தில் வேறு எதைக் காட்டிலும் அதிகமான நிலையில் குறிப்பிடுகிறதாய் இருக்கும் ஒரு பகுதி 2 சாமுவேல் 12:21-23 வரையிலுள்ள வசனங்கள் ஆகும். இந்த வசனங்களின் பின்னணி என்னவென்றால், தாவீது ராஜா பத்சேபாவுடன் விபச்சாரம் செய்து அதன் விளைவாக அவள் கர்ப்பிணியாக மாறுகிறதையும் கூறுகிறது. நாத்தன் தீர்க்கதரிசி கர்த்தரால் தாவீதினிடத்தில் அனுப்பப்பட்டார், ஏனெனில் தாவீதினுடைய பாவத்தின் நிமித்தம் கர்த்தர் குழந்தையை மரணத்தில் எடுத்துக்கொள்வார் என்பதை அறிவிக்கும்படியாக அனுப்பப்பட்டார். குழந்தைக்கு இப்படி சம்பவிப்பதை அறிந்த தாவீது துக்கத்திலும் உபவாசத்திலும் இருந்து ஜெபம் செய்து எதிர்கொண்டார். ஆனால் குழந்தை மரணத்தால் எடுத்துக்கொள்ளப்பட்டவுடன், தாவீதின் துக்கம் முடிவடைந்தது. இதைக் கண்ட தாவீதின் ஊழியக்காரர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள் தாவீது ராஜாவை நோக்கி: “நீர் செய்கிற இந்தக் காரியம் என்ன? பிள்ளை உயிரோடிருக்கையில் உபவாசித்து அழுதீர்; பிள்ளை மரித்தபின்பு, எழுந்திருந்து அசனம்பண்ணுகிறீரே என்றார்கள்.” அதற்கு தாவீதின் பதில், “பிள்ளை இன்னும் உயிரோடிருக்கையில், பிள்ளை பிழைக்கும்படிக்குக் கர்த்தர் எனக்கு இரங்குவாரோ, எப்படியோ, யாருக்குத் தெரியும் என்று உபவாசித்து அழுதேன். அது மரித்திருக்கிற இப்போது நான் உபவாசிக்கவேண்டியது என்ன? இனி நான் அதைத் திரும்பிவரப்பண்ணக்கூடுமோ? நான் அதினிடத்துக்குப் போவேனே அல்லாமல், அது என்னிடத்துக்குத் திரும்பி வரப்போகிறது இல்லை” என்பதாக இருந்தது. தாவீதின் மறுபடி என்னவென்றால், விசுவாசிக்க இயலாதவர்கள் கர்த்தருக்குள்ளாக பத்திரமாக இருக்கிறார்கள். மேலும் தாவீது கூறியதாவது, அவர் குழந்தையினிடத்திற்கு செல்ல முடியும், ஆனால் குழந்தையை அவரிடத்திற்கு திரும்பக் கொண்டு வர இயலாது என்பதாகும். அதுமட்டுமன்றி முக்கியமாக, தாவீது இந்த அறிவினால் ஆறுதலடைந்ததாகத் தோன்றியதும் தெளிவாக விளங்குகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தாவீது தன் பிள்ளையாகிய குமாரனை திரும்பி கொண்டு வரமுடியாது என்கிறபோதிலும் மீண்டும் காண்பேன் (பரலோகத்தில்) என்று கருதினார்.

விசுவாசிக்க இயலாதவர்களின் பாவத்திற்கு கிறிஸ்துவின் மரணத்தினால் கடனை செலுத்துவதற்கு தேவனால் கூடும் மற்றும் அனுமதிப்பார் என்றாலும், அவர் இதைச் செய்வதாக வேதாகமத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆகையால், இந்த விஷயத்தில் நாம் பிடிவாதமாக அல்லது திட்டவட்டமாக இருக்கக்கூடாது என்பது முக்கியமானதாகும். தேவனில் நம்பிக்கை வைத்து விசுவாசிக்க இயலாதவர்களுக்கு தேவன் கிறிஸ்துவின் மரணத்தைச் செலுத்துகிறார் என்கிற காரியம் அவரது அன்பு மற்றும் இரக்கம் நிரந்தரமானதாக இருக்கின்றது என்பதற்கு ஆதாரமாகவும் இருக்கிறது. குழந்தைகள் மற்றும் மூளை வளர்ச்சி குன்றியவர்கள் பாவத்திற்காக கிறிஸ்துவின் மரணம் கடனை செலுத்துகிறது என்பது எங்களது நம்பிக்கையின் நிலையாக இருக்கிறது. அதேவேளையில் வறட்டுத்தனமான நிலையில் இதுதான் சரி என்றும் விவாதிக்கவில்லை. இதனை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்: தேவன் அன்பானவர், பரிசுத்தமானவர், இரக்கமுள்ளவர், நீதியுள்ளவர், மற்றும் கிருபையுள்ளவர். தேவன் எதைச் செய்தாலும் அது சரியானதும் நல்லதுமாகும், மேலும் நாம் குழந்தைகளை நேசிப்பதைக்காட்டிலும் தேவன் குழந்தைகளை அதிகமாக நேசிக்கிறார்.

English



முகப்பு பக்கம்

குழந்தைகள் மற்றும் சிறார்கள் இறக்கும்போது என்ன நடக்கிறது? பொறுப்புணர்வு வயதை வேதாகமத்தில் எங்கே காண்கிறோம்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries