கேள்வி
அறியவொணாமைக் கொள்கை என்றால் என்ன?
பதில்
தேவன் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்வது அல்லது நிரூபிப்பது என்பது சாத்தியமே இல்லை என்பதுதான் அறியவொணாமைக் கொள்கையின் கருத்து ஆகும். “அறியவொணாமை” என்கிற வார்த்தை “அறிவு இல்லாமை” என்னும் அர்த்தமுள்ளதாயிருக்கிறது. அறியவொணாமைக் கொள்கையானது நாத்திகத்தின் நேர்மையான அறிவார்ந்த அமைப்பு ஆகும். நாத்திகவாதம் தேவன் இல்லை என்றும் அவர் இருப்பதை நிரூபிக்க முடியாது என்றும் கூறுகிறது. அறியவொணாமைக் கொள்கை தேவன் இருக்கிறார் என்பதை நிரூபிக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது எனவே தேவன் இருக்கிறாரா இல்லையா என்பதை அறிந்து கொள்வது சாத்தியமில்லாதது என்று வாதாடுகிறது. இதில் அறியவொணாமைக் கொள்கையே சரியானது. தேவன் இருக்கிறாரா இல்லையா என்பதை அனுபவரீதியாக நிரூபிக்க முடியாது.
தேவன் இருக்கிறார் என்பதை விசுவாசத்தின் மூலம் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேதாகமம் சொல்லுகிறது. எபிரெயர் 11:6ல் வாசிக்கிறோம் “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.” தேவன் ஆவியாய் இருக்கிறார் (யோவான் 4:24) எனவே அவரை பார்க்கவோ தொடவோ முடியாது. தேவனே தம்மை வெளிப்படுத்தாத பட்சத்தில், அவர் நம்முடைய அறிவுக்கு புலப்படாதவராகவே இருக்கிறார் (ரோமர் 1:20) தேவன் இருக்கிறார் என்பதை இந்த உலகம் வெளிப்படுத்துகிறது என்பதை வேதாகமத்தில் வாசிக்கிறோம் (சங்கீதம் 19:1-4) இயற்கை அதை உணர்த்துகிறது (ரோமர் 1:18-22), மற்றும் நம்முடைய இருதயங்களிலும் அது உறுதிப்படுத்தப்படுகிறது (பிரசங்கி 3:11).
அறியவொணாமைக் கொள்கைகாரர்கள் தேவன் இருக்கிறார் அல்லது தேவன் இல்லை என்பதான தீர்மானத்தை எடுக்க விருப்பமற்றவர்களாகவே இருந்துவருகின்றனர். இது இறுதியாக இங்குமல்லாமல் அங்குமல்லாமல் அதாவது “ஆற்றில் ஒரு கால் சேற்றினில் ஒரு கால்” என்பதுபோல இருக்கிற நிலமையைக் குறிக்கிறது. தேவ நம்பிக்கையாளர்கள் தேவன் இருக்கிறார் என்பதை விசுவாசிக்கின்றனர். நாத்திகவாதிகள் தேவன் இல்லை என்று விசுவாசிக்கின்றனர். அறியவொணாமைக் கொள்கைகாரர்கள் தேவன் இருக்கிறார் என்பதை விசுவாசிக்கவும் கூடாது அதை மறுக்கவும் கூடாது ஏனென்றால் இரண்டையுமே அறிந்து கொள்வது சாத்தியமில்லாதது என்று விசுவாசிக்கின்றனர்.
விவாதத்திற்காக தேவன் இருக்கிறார் என்பதற்கான தெளிவான மற்றும் மறுக்கமுடியாத ஆதாரங்களை நாம் விட்டுவிடலாம். ஆத்திகவாதிகள் மற்றும் அறியவொணாமைக் கொள்கைக்காரர்கள் இருவர் கருத்துக்களையும் சமநிலையில் வைத்து பார்க்கும்போது, எது மரணத்திற்கு பின்புள்ள வாழ்க்கையை பற்றி சரியான அர்த்தத்தை விசுவாசிக்க தக்கவிதத்தில் நமக்கு தருகிறது? தேவன் இல்லை என்றால், ஆத்திகவாதிகளுக்கும் மற்றும் அறியொணாமைக் கொள்கைக்காரர்களுக்கும் மரணத்திற்கு பின்பு வாழ்வு என்பது கிடையாது. தேவன் இருக்கிறார் என்றால், ஆத்திகவாதிகள் மற்றும் அறியொணாமைக் கொள்கைக்காரர்கள் இருவருக்குமே அவர்களின் மரணத்திற்கு பின்பு பதிலளிக்க ஒருவர் இருப்பார். இதன் அடிப்படையில் பார்க்கும்போது ஆத்திகவாதிகளாக இருப்பதே அறியவொணாமைக் கொள்கைகாரர்களைக்காட்டிலும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. இதில் எந்த ஒரு நிலயையும் நிரூபிக்க மற்றும் மறுக்க இயலாது. ஓவ்வொரு நிலையையும் முழுமையாக ஆய்வு செய்வதற்கு எல்லா முயற்ச்சிகளையும் எடுப்பதே புத்தியுள்ள செயலாக காணப்படுகிறது. இது எல்லையில்லாத மற்றும் ஒரு நித்தியமான அதிகம் விரும்பத்தக்கதான முடிவான விளைவாக இருக்கலாம்.
சந்தேகங்கள் இருப்பது இயற்கையே. இந்த உலகத்திலுள்ள எத்தனையோ காரியங்களை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. தேவன் செய்கிற அல்லது அவர் அனுமதிக்கிற செயல்களை அநேகரால் ஏற்றுக்கொள்ள முடியாததினால்தான் அவர்கள் அநேக நேரங்களில் தேவன் இருக்கிறாரா அல்லது இல்லையா என்று சந்தேகிக்கின்றனர். மேலும் வரையறுக்குட்பட்ட மனிதர்களாகிய நாம் முடிவில்லாத தேவனை புரிந்து கொள்ள நினைப்பது என்பது கூடாதகாரியம். ரோமர் 11:33-34 வரையிலுள்ள வசனங்கள் சொல்லுகிறது, “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்! கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்?” நாம் விசுவாசத்தின் மூலம் தேவனையும் அவருடைய வழிகளையும் விசுவாசிக்க வேண்டும். அவரில் விசுவாசம் வைப்பவர்களுக்கு தேவன் ஆச்சரியமான வழிகளில் தம்மைக்குறித்து வெளிப்படுத்துவதற்கு அவர் தயாராகவும் விருப்பமுள்ளவராகவும் இருக்கிறார். “அப்பொழுது அங்கேயிருந்து உன் தேவனாகிய கர்த்தரைத் தேடுவாய்; உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவாய்” என்று உபாகமம் 4;29 கூறுகிறது.
English
அறியவொணாமைக் கொள்கை என்றால் என்ன?