கேள்வி
மதுபானம்/திராட்சரசம் அருந்துவதைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?
பதில்
வேதாகமத்தில் மதுபானம் அருந்தவதைக் குறித்து கூறுவதற்கு எண்ணற்ற காரியங்கள் இருக்கிறது (லேவியராகமம் 10:9; எண்ணாகமம் 6:3; உபாகமம் 29:6; நியாயாதிபதிகள் 13:4,7,14; நீதிமொழிகள் 20:1; 31:4; ஏசாயா 5:11,22; 24:9; 28:7; 29:9; 56:12). இருப்பினும், வேதாகமம் கிறிஸ்தவர்கள் பீர், திராட்சரசம் அல்லது மற்ற மதுபானங்களை அருந்துவதற்கு தடை செய்கிறதில்லை. வேதாகமத்தில் சில இடங்களில் மதுபானம் அருந்துகிற காரியத்தை நேர்மறையாக குறிப்பிடுகின்றன. பிரசங்கி 9:7, “உன் திராட்சரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி”. சங்கீதம் 104:14,15, “மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சரசத்தையும்” தேவன் கொடுக்கிறார் என்று வாசிக்கிறோம். ஆமோஸ் 9:14ல் “தங்கள் திராட்சத் தோட்டங்களின் கனிகளைப் புசிப்பார்கள்” என்று அதை ஒரு ஆசிர்வாதமுள்ள காரியமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏசாயா 55:1ல், “நீங்கள் திராட்சரசமும், பாலும் கொள்ளுங்கள்” என்று வாசிக்கிறோம்.
தேவன் கிறிஸ்தவர்களுக்கு கட்டளையிடுகிறது என்னவென்றால், மது அருந்தி வெறி கொள்வதைத் தவிர்க்க வேண்டும் (எபேசியர் 5:18) என்பதையாகும். அப்படி குடித்து வெறித்திருப்பதை வேதாகமம் வன்மையாக கண்டிக்கிறது (நீதிமொழிகள் 23:29-35). மேலும் எந்த காரியங்களினாலும் சரீரங்கள் அடிமைப்பட்டு போகக்கூடாது என்று கிறிஸதவர்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது (1 கொரிந்தியர் 6:12; 2 பேதுரு 2:19). அளவுக்கு மீறி அதிகஅளவு மது அருந்துவது அடிமைத்தனதிற்குள்ளாக்கி விடும். மேலும் மற்ற கிறிஸ்தவர்களுக்கு அல்லது சகோதரர்களுக்கு இடறல் உண்டாக்குகிற காரியங்களையும் மற்றும் அவர்களை துணிகரம் கொண்டு அவர்களுடைய மனசாட்சிக்கு விரோதமாக செயத்தக்கதாக தூண்டுகிற காரியங்களையும் செய்யக்கூடாது என்று வேதாகமம் தடை விதிக்கிறது (1 கொரிந்தியர் 8:9-13). இந்த பிரமாணங்களின் வெளிச்சத்தில், எந்த ஒரு கிறிஸ்தவனும் நான் தேவனுடைய மகிமைக்காகத்தான் இப்படி அளவுக்கதிகமாக குடிக்கிறேன் என்று கூற முடியாது (1 கொரிந்தியர் 10:31).
இயேசு தண்ணீரை திராட்சரசமாக மாற்றினார். இது இயேசுவும் திராட்சரசம் அருந்தினார் என்பதைக் காண்பிக்கிறது (யோவான் 2:1-11; மத்தேயு 26:29). புதிய ஏற்பாட்டின் காலத்தில் தண்ணீர் மிகவும் சுத்தமில்லாமல் இருந்தது. நவீன காலத்து உடல்நலம் காக்கும் ஏற்பாடு ஒன்றுமில்லாத, நுண்ணுயிரிகள், நோய்க்கிருமிகள் போன்ற எல்லாவிதமான அசுத்தங்கள் நிறைந்தாதாக தண்ணீர் காணப்பட்டது. இதே நிலைமை இன்றும் அநேக நாடுகளில் இருக்கிறது. அதன் காரணமாக மக்கள் மதுபானம் அல்லது திராட்சரசம் அருந்த ஆரம்பித்தார்கள் காரணம் இது தண்ணீரைப்போல அசுத்தமில்லாததாக இருந்தது. 1 தீமோத்தேயு 5:23ல், பவுல் திமோத்தேயுவிடம் “நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம் குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சரசமும் கூட்டிக்கொள்” என்று கூறுகிறார். அந்த நாட்களில் திராட்சரசம் புளிப்புள்ளதாக அதாவது ஆல்ஹகால் உடையதாக இருந்தது, அதேவேளையில் இன்றிருப்பதை போல அதிக போதைதருகிறதாக இல்லை. அன்று உண்டாயிருந்த திராட்சரசம் வெறும் திராட்சரசம் என்று சொல்வதும் தவறு, அதேபோல இன்று இருக்கின்ற மதுபானம் போன்றுதான் அன்று இருந்தது என்று சொல்வதும் தவறு. ஆக கிறிஸ்தவர்கள் பீர், திராட்சரசம் அல்லது மற்ற மதுபான வகைகளை அருந்த கூடாது என்று வேதாகமம் தடைவிதிக்கவில்லை. ஆல்ஹகால் பாவமல்ல ஆனால் ஆல்ஹகால் தரும் போதைக்கு அடிமையாகுவது தவறு, கிறிஸ்தவர்கள் அப்படிப்பட்ட காரியங்களுக்கு விலகி (எபேசியர் 5:18, 1 கொரிந்தியர் 6:12).
ஆல்ஹகால் அடங்கிய பானங்களை சிறிதளவில் அருந்துவது உடலுக்கு கேடுமல்ல வாழ்க்கைக்கு அடிமைத்தனமுமல்ல. சில மருத்துவர்கள் சிவந்த மதுபானம் உடல் நலத்திற்கும், இருதயத்திற்கும் நல்லது என தங்கள் நோயாளிகள் அருந்துவதற்கு பரிந்துரையும் செய்கிறார்கள். குறைந்த அளவுக்கு மதுபானம் அருந்துவது ஒரு கிறிஸ்தவனின் சுதந்திரம் ஆகும். அதேவேளை குடித்து வெறித்திருப்பதும் அதற்கு அடிமையாய் போவதும் பாவமாகும். எப்படியாயினும், கிறிஸ்தவர்களைக் குறித்து வேதாகமத்தின் கரிசனை என்னவென்றால், மதுபானம் அருந்துவதால் வரும் விளைவுகளும், மற்றவர்களுக்கு இடறலாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் சோதனைக்குட்பட்டு அதற்கு அடிமையாய் மாறிப்போகிற சாத்தியக்கூறுகள் இருப்பதால், கிறிஸ்தவர்கள் மது அருந்துவதிலிருந்து முழுவதுமாக விலகி இருப்பது நலமான காரியமாக இருக்கும்.
English
மதுபானம்/திராட்சரசம் அருந்துவதைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?