கேள்வி
தேவதூதனுடைய சிலைகளை வைத்திருப்பது தவறா?
பதில்
தேவ தூதர்களின் உருவங்கள் அல்லது சிலைகளில் எந்த தவறும் இல்லை. ஆனால் ஒருவர தேவ தூதர்களின் சிலைகளை அல்லது உருவங்களை எப்படிப் பார்க்கிறார் என்பதுதான் அது சரியா தவறா என்பதைத் தீர்மானிக்கறது. தேவ தூதனின் உருவங்கள் தவறானதாக இருப்பதற்கான ஒரே காரணம், ஒரு நபர் அவர்களுக்கு சிலை செய்தால், அவர்களிடம் ஜெபம் செய்தால் அல்லது அவர்களை வணங்கினால், தேவன் அதைப் பெரிதும் தடை செய்கிறார் (1 சாமுவேல் 12:21). நாம் தேவதூதர்கள் அல்லது அவர்களின் உருவங்களை வணங்குவதில்லை. தேவன் மட்டுமே ஆராதனைக்குத் தகுதியானவர் (சங்கீதம் 99:5; லூக்கா 4:8), நாம் அவரை மட்டுமே முழுமையாக விசுவாசிக்க வேண்டும் (சங்கீதம் 9:10). வேதாகமம் மதங்கள் ஏற்படுத்தி வணங்கும் உருவங்களுக்கும் சிலைகளுக்கும் எதிராக மிகவும் கண்டிப்பாக பேசுகிறது. இதன் விளைவாக, ஒரு தேவதூதனின் சிலை, இயேசுவின் படம், பிறப்பு காட்சி சித்திரங்கள் போன்றவை ஒரு கண்ணியாக அல்லது திசைத்திருப்புவதாக மாறிப்போகாமல் இருப்பதற்கு ஒரு படத்தை/உருவத்தை அனுமதிப்பதற்கு கிறிஸ்தவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தேவதூதர்கள் அல்லது வேறு எந்த உயிரினத்தையும் குறிக்கும் சிலைகளை வைத்திருப்பதில் பாவம் எதுவுமில்லை என்றாலும், நம் வாழ்வில் அவைகளுக்கு எந்தஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியையோ அல்லது செல்வாக்கையோ நாம் கற்பிக்கக்கூடாது. எந்த சிலைகளும் நம்மைத் தீங்கிலிருந்து பாதுகாக்கவோ, நமக்கு நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரவோ, அல்லது நம்மை எந்த விதத்திலும் பாதிக்கவோ முடியாது. இத்தகைய நம்பிக்கைகள் வெறும் மூடநம்பிக்கை மட்டுமே, இதற்கு ஒரு கிறிஸ்தவரின் வாழ்க்கையில் இடமில்லை. மூடநம்பிக்கையுடன் தொடர்புடையது விக்கிரகாராதனை ஆகும், மேலும் விக்கிரகாராதனை வேதத்தில் தெளிவாகத் தடைசெய்யப்பட்டுள்ளது, மேலும் அதைப் பின்பற்றும் யாரும் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டார்கள் (வெளிப்படுத்துதல் 21:27).
மேலும், உண்மையான தேவதூதர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியாது என்பதை அறிவது புத்திசாலித்தனம். உருவங்கள்/சிலைகள் என்பது ஒரு தேவதூதன் எப்படி இருபான் என்பது பற்றிய ஒருவரின் யோசனையாகும்.
English
தேவதூதனுடைய சிலைகளை வைத்திருப்பது தவறா?