settings icon
share icon
கேள்வி

கர்த்தருடைய தூதன் யார்?

பதில்


"கர்த்தருடைய தூதன்" யார் என்பதைக் குறித்து துல்லியமான அடையாளம் வேதாகமத்தில் கொடுக்கப்படவில்லை. எனினும், அவரது அடையாளத்திற்கு பல முக்கியமான "துப்புக்கள்" உள்ளன. "கர்த்தருடைய தூதர்கள்", "ஒரு கர்த்தருடைய தூதன்", "கர்த்தருடைய தூதன்" ஆகிய பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு குறிப்புகள் உள்ளன. திட்டவட்டமான வரையறு சுட்டு பயன்படுத்தும்போது, அது மற்ற தேவதூதர்களிடமிருந்து தனித்துவமாக இருப்பதைக் குறிப்பிடத்தக்கது. கர்த்தருடைய தூதன் தேவனைப் போலவே பேசுகிறான், தேவனோடு ஒப்புகையோடு தன்னை அடையாளம் கண்டுகொள்கிறார், தேவனின் பொறுப்பைப் பயன்படுத்துகிறார் (ஆதியாகமம் 16:7-12; 21:17-18; 22:11-18; யாத்திராகமம் 3:2; நியாயாதிபதிகள் 2:1- 4: 5:23; 6:11-24; 13:3-22; 2 சாமுவேல் 24:16, சகரியா 1:12, 3: 1; 12: 8). இந்தத் தோற்றங்களில் பலவற்றிலும், கர்த்தருடைய தூதனைக் கண்டவர்கள் "கர்த்தரைக் கண்டார்கள்" என்பதால் தங்கள் உயிருக்கு பயந்தார்கள். எனவே, குறைந்தபட்சம் சில சந்தர்ப்பங்களில், தேவனுடைய தேவதூதர்கள் ஒரு தியோஃபனி, அதாவது உடல் வடிவில் வந்த தேவனின் தோற்றம், உடல் வடிவத்தில் இருப்பார் என்பது தெளிவு.

கர்த்தருடைய தூதன் தோன்றுவது கிறிஸ்துவின் மனித அவதாரம் வெளிப்பட்டது பிறகு முற்றிலும் நின்று விட்டது. புதிய ஏற்பாட்டில் தேவதூதர்கள் பல முறை குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள், ஆனால் "கர்த்தருடைய தூதன்" கிறிஸ்துவின் பிறப்புக்குப் பிறகு புதிய ஏற்பாட்டில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. மத்தேயு 28:2-ஐப் பற்றி சில குழப்பங்கள் உள்ளன. அங்கே பூமி மிகவும் அதிரும்படி, “கர்த்தருடைய தூதன்” வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான் என்று வாசிக்கிறோம். கிரேக்க மொழியில் தேவதூதன் முன்பாக எந்த வரையறு சுட்டும் இல்லை என்பது முக்கியம்; அது "தேவதூதன்" அல்லது "ஒரு தேவதூதன்" ஆக இருக்கலாம், ஆனால் மொழிபெயர்ப்பாளர்களால் வரையறு சுட்டு வழங்கப்பட வேண்டும். KJV மொழிபெயர்ப்பை தவிர மற்ற மொழிபெயர்ப்புகள் அது "ஒரு தேவதூதன்" என்பது ஒரு சிறந்த வார்த்தை ஆகும்.

கர்த்தருடைய தூதனின் தோற்றங்கள் இயேசுவின் மனித அவதாரம் முன் அவரின் வெளிப்பாடாக இருந்திருக்கலாம். "ஆபிரகாமுக்கு முன்பாக" (யோவான் 8:58) இருப்பதாக இயேசு தன்னைத் தானே அறிவித்தார், ஆகவே அவர் உலகில் சுறுசுறுப்பாகவும் வெளிப்படையாகவும் இருப்பார் என்பது தர்க்க ரீதியாக இருக்கிறது. கர்த்தருடைய தேவதூதன் கிறிஸ்துவின் முன் தோன்றிய தோற்றம் (கிறிஸ்டோபனி) அல்லது பிதாவின் (தியோபனி) ஒரு தோற்றமாக இருந்தாலும் சரி, "கர்த்தருடைய தூதன்" என்ற வார்த்தை பொதுவாகவே தேவன் சரீரத்தில் தோன்றியதையே காண்பிக்கிறது.

English



முகப்பு பக்கம்

கர்த்தருடைய தூதன் யார்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries