கேள்வி
தேவதூதர்களின் தோற்றம் எப்படிப்பட்டது?
பதில்
தேவதூதர்கள் ஆவிகளாக இருக்கிறார்கள் (எபிரேயர் 1:14), எனவே அவர்களுக்கு மிகவும் தேவையான சரீர வடிவம் என்று எதுவும் இல்லை. ஆனால் தேவதூதர்கள் மனித உருவில் தோன்றும் திறனைக் கொண்டுள்ளனர். தேவதூதர்கள் மனிதர்களுக்கு வேதாகமத்தில் தோன்றியபோது, அவர்கள் சாதாரண மனிதர்களை ஒத்திருந்தனர். ஆதியாகமம் 18:1-19 இல், தேவன் மற்றும் இரண்டு தேவதூதர்கள் மனிதர்களாக தோன்றி உண்மையில் ஆபிரகாமுடன் உணவு சாப்பிட்டனர். வேதாகமம் முழுவதும் தேவதூதர்கள் பல முறை மனிதர்களாக தோன்றியிருக்கிறார்கள் (யோசுவா 5:13-14; மாற்கு 16:5), அவர்கள் ஒருபோதும் பெண்களின் தோற்றத்தில் தோன்றினதில்லை.
மற்ற நேரங்களில், தேவதூதர்கள் மனிதர்களாக தோன்றவில்லை, ஆனால் வேறு உலகத்தவர்கள் போலத் தோன்றினர், மேலும் அவர்களின் தோற்றம் அவர்களைக் கண்டவர்களுக்கு திகிலூட்டும் நிலையில் இருந்தது. பெரும்பாலும், இந்த தேவதூதர்களிடமிருந்து வந்த முதல் வார்த்தை "பயப்படாதீர்கள்", ஏனென்றால் தீவிர பயம் ஒரு பொதுவான எதிர்வினையைக் காண்பிக்கிறது. இயேசுவின் கல்லறையில் பாதுகாப்பில் இருந்த பாதுகாவலர்கள் கர்த்தருடைய தூதனைக் கண்டதும் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள் (மத்தேயு 28:4). லூக்கா 2 ல் மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்த வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்திலே வந்து நின்றபோது அவர்கள் "மிகவும் பயந்தார்கள்" தேவனுடைய தேவதூதன் தோன்றியபோது, கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது.
சரீரப் பண்புகளைப் பொறுத்தவரை, தேவதூதர்கள் சில சமயங்களில் சிறகுகள் உள்ளவர்கள் என்று விவரிக்கப்படுகின்றனர். உடன்படிக்கைப் பெட்டியில் கேருபீன்கள் உருவங்கள் கிருபாசனத்தை மூடும் சிறகுகளைக் கொண்டிருந்தன (யாத்திராகமம் 25:20). ஏசாயா பரலோகத்தின் சிங்காசனத்தைப் பற்றிய தனது பார்வையில் சிறகுகள் கொண்ட சேராபீனைப் பார்த்தார், ஒவ்வொன்றும் ஆறு சிறகுகள் கொண்டவை (ஏசாயா 6:2). எசேக்கியேலும், சிறகுகள் கொண்ட தேவதூதர்களின் தரிசனங்களைக் கண்டார். ஏசாயா 6:1-2 தேவதூதர்கள் மனித அம்சங்களைக் கொண்டிருப்பதை சித்தரிக்கிறது—- சத்தங்கள், முகங்கள் மற்றும் பாதங்கள். தேவதூதரின் சத்தங்கள் பல பாடல்களில் தேவனைப் பாடுவதும் புகழ்வதும் கேட்கப்படுகிறது. ஒரு தேவதூதனைப் பற்றிய முழுமையான விளக்கங்களில் ஒன்று தானியேல் 10:5-6 இல் உள்ளது: “என் கண்களை ஏறெடுக்கையில், சணல் வஸ்திரந்தரித்து, தமது அரையில் ஊப்பாசின் தங்கக்கச்சையைக் கட்டிக்கொண்டிருக்கிற ஒரு புருஷனைக் கண்டேன். அவருடைய சரீரம் படிகப்பச்சையைப்போலவும், அவருடைய முகம் மின்னனலின் பிரகாசத்தைப்போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங்களைப்போலவும், அவருடைய புயங்களும் அவருடைய கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தைப்போலவும் இருந்தது.” இயேசுவின் கல்லறையில் உள்ள தேவதூதனும் இதேபோல் விவரிக்கப்பட்டுள்ளார்: "அவனுடைய ரூபம் மின்னல் போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது" (மத்தேயு 28:3).
தேவதூதர்கள் எந்த தோற்றத்தை எடுத்தாலும், அவர்கள் நம்பமுடியாத அளவிற்கு அழகாக இருக்கிறார்கள் என்று நம்புவதற்கு காரணம் இருக்கிறது. லூசிபர் தனது அழகின் மீது பெருமிதம் கொண்டு தன்னை தேவனுக்கும் மேலாக "உயர்த்தினான்" என்று எசேக்கியேல் சொல்லுகிறார். கூடுதலாக, தேவனுடைய மகிமை அவரைச் சுற்றியுள்ள அனைத்திலும் பிரதிபலிப்பதால், தொடர்ந்து தேவனுடைய சமுகத்தில் இருக்கும் தேவதூதர்கள் போன்றவர்கள் அசாதாரண அழகைக் கொண்டிருப்பார்கள் என்று இயல்பாகவே எதிர்பார்க்கப்படுகிறது.
English
தேவதூதர்களின் தோற்றம் எப்படிப்பட்டது?