கேள்வி
தேவன் ஏன் விழுந்துபோன தேவதூதர்களுக்கு மனந்திரும்புவதற்கான வாய்ப்பை அளிக்கவில்லை?
பதில்
விழுந்துபோன தேவதூதர்கள் மனந்திரும்புவதற்கான வாய்ப்பைப் பற்றி வேதாகமம் குறிப்பாக குறிப்பிட்டு எதையும் கூறவில்லை, ஆனால் வேதாகமம் சொல்வதிலிருந்து நாம் சில நுண்ணறிவைப் பெறலாம். முதலில், சாத்தான் (லூசிபர்) பிரதான தேவதூதர்களில் ஒருவன், ஒருவேளை பிரதானமானவன் (எசேக்கியல் 28:14). லூசிபர் மற்றும் அனைத்து தேவதூதர்களும் தொடர்ந்து தேவனுடைய சமுகத்தில் இருந்தனர் மற்றும் தேவனுடைய மகிமை பற்றிய அறிவைக் கொண்டிருந்தனர். ஆகையால், தேவனுக்கு எதிராக கலகம் செய்வதற்கும் அவரிடமிருந்து விலகுவதற்கும் அவர்களுக்கு எந்த காரணமும் இல்லை. அவர்கள் சோதிக்கப்படவில்லை. லூசிபர் மற்றும் பிற தேவதூதர்கள் தேவனுக்கு எதிராக கலகம் செய்தார்கள்.
இரண்டாவதாக, தேவன் மனிதர்களுக்காக மீட்பின் திட்டத்தை உருவாக்கியதைப் போல தேவதூதர்களுக்கான மீட்பின் திட்டத்தை வழங்கவில்லை. மனித இனத்தின் வீழ்ச்சி பாவத்திற்கான பரிகாரப் பலி தேவைப்பட்டது, தேவன் இயேசு கிறிஸ்துவில் அந்த பலியை வழங்கினார். அவருடைய கிருபையில், தேவன் மனித இனத்தை மீட்டு, தமக்கு மகிமை சேர்த்தார்.
தேவதூதர்களுக்காக அத்தகைய தியாகம் எதுவும் திட்டமிடப்படவில்லை. கூடுதலாக, தேவன் தனக்கு விசுவாசமாக இருக்கும் தேவதூதர்களை தமது " தெரிந்துகொள்ளப்பட்ட தேவதூதர்கள்" என்று குறிப்பிட்டார் (1 தீமோத்தேயு 5:21). இரட்சிப்புக்கு தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்பதையும், அவர்களை தேவனுடைய அன்பிலிருந்து பிரிக்க முடியாது என்பதையும் வேதாகம தெரிந்துகொள்ளுதல் கோட்பாட்டிலிருந்து நாம் அறிவோம் (ரோமர் 8:38-39). தெளிவாக, கலகம் செய்த அந்த தேவதூதர்கள் தேவனுடைய "தெரிந்துகொள்ளப்பட்ட தேவதூதர்கள்" அல்ல.
இறுதியாக, தேவன் அவர்களுக்கு வாய்ப்பளித்தாலும் தேவதூதர்கள் மனந்திரும்புவார்கள் என்று நம்புவதற்கு வேதாகமம் எந்த காரணத்தையும் கொடுக்கவில்லை (1 பேதுரு 5:8). வீழ்ந்துபோன தேவதூதர்கள் தேவனை எதிர்ப்பதற்கும் தேவனுடைய ஜனங்களைத் தாக்குவதற்கும் முற்றிலும் அர்ப்பணித்ததாகத் தெரிகிறது. தேவனுடைய நியாயத்தீர்ப்பின் தீவிரம் ஒரு நபருக்கு எவ்வளவு அறிவு இருக்கிறது என்பதைப் பொறுத்து மாறுபடுகிறது என்று வேதாகமம் கூறுகிறது (லூக்கா 12:48). வீழ்ந்துபோன தேவதூதர்கள், அவர்களிடம் இருந்த பெரும் அறிவைக் கொண்டு, தேவனுடைய கோபத்திற்கு மிகவும் தகுதியானவர்கள்.
English
தேவன் ஏன் விழுந்துபோன தேவதூதர்களுக்கு மனந்திரும்புவதற்கான வாய்ப்பை அளிக்கவில்லை?