கேள்வி
பழைய ஏற்பாட்டில் தேவன் ஏன் மிருகங்களின் பலிகளை தேவையென்று கேட்டார்?
பதில்
பாவங்களை தற்காலிகமாக மன்னித்து, இயேசு கிறிஸ்துவின் பரிபூரணமான மற்றும் முழுமையான பலியை முன்னிலைப்படுத்தும்படி தேவன் மிருகங்களின் பலிகளை தேவையாக எண்ணினார் (லேவியராகமம் 4:35; 5:10). மிருகத்தின் பலியானது வேதாகமத்தில் காணப்படும் ஒரு முக்கியமான கருப்பொருளாக இருக்கிறது, ஏனென்றால் "இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது" (எபிரெயர் 9:22). ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது, அவர்களுக்கு ஆடைகளை வழங்க மிருகங்கள் தேவனால் கொல்லப்பட்டது (ஆதியாகமம் 3:21). காயீனும் ஆபேலும் கர்த்தருக்குத் தங்கள் காணிக்கைகளை கொண்டுவந்தார்கள். கனிகளைக் கொண்டுவந்தபடியினால் காயீனின் பலியை தேவன் ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால் ஆபேலின் பலியை ஏற்றுக்கொண்டார், காரணம் அது அவனது மந்தையின் முதலீற்றிலிருந்து ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தது (ஆதியாகமம் 4:4-5). ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, நோவா தேவனுக்கு மிருகங்களைப் பலியிட்டார் (ஆதியாகமம் 8:20-21).
கடவுளால் நியமிக்கப்பட்ட சில நடைமுறைகளுக்கு இணங்க பல மிருகங்களின் பலிகளைச் செலுத்த இஸ்ரவேல் தேசத்திற்கு கட்டளையிட்டார். முதலாவதாக, மிருகம் மாசற்றதாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, பலியை செலுத்தும் நவர் மிருகத்துடன் அடையாளம் காண வேண்டியிருந்தது. மூன்றாவதாக, மிருகத்தை பலி செலுத்தும் நபர் அதற்குமேல் மரணத்தை விளைவிக்க வேண்டியிருந்தது. விசுவாசத்தில் செய்யப்படுகிறபோது, இந்த பலி பாவங்களுக்கு மன்னிப்பைக் கொண்டுவந்தது. அடுத்தபடியாக லேவியராகமம் 16-ல் விவரிக்கப்பட்டுள்ள பாவநிவாரண நாளன்று செலுத்தப்படும் பலி, மன்னிப்பு மற்றும் பாவத்தை அகற்றுவதை நிரூபிக்கிறது. பிரதான ஆசாரியன் பாவநிவாரணபலியாக இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களைக் கொண்டுபோகவேண்டியிருந்தது. இஸ்ரவேல் ஜனங்களுக்கான பாவநிவாரணபலியாக ஆடுகளிலிருந்த பலி செலுத்தப்பட்டது (லேவியராகமம் 16:15), மற்ற ஆடு வனாந்தரத்திற்குள் விடுவிக்கப்பட்டன (லேவியராகமம் 16: 20-22). பாவநிவாரணபலியானது பாவ மன்னிப்பு வழங்கப்பட்டபோது, மற்ற ஆடு பாவத்தால் அகற்றப்பட்டது.
அப்படியானால், இன்று நாம் ஏன் மிருகங்களின் பலிகளை செலுத்துவதில்லை? இயேசு கிறிஸ்து இறுதியான மற்றும் பரிபூரண பலியாக இருப்பதால் மிருகங்களின் பலிகள் முடிவுக்கு வந்தன. யோவான்ஸ்நானகன் இந்த ஞானஸ்நானத்தை ஏற்றுக்கொண்டார். இயேசு ஞானஸ்நானம் பெற வருவதைக் கண்டபோது, "இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி" (யோவான் 1:29). ஏன் மிருகங்கள்? என உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளலாம். அவைகள் என்ன தவறு செய்தன? அதுதான் முக்கிய விஷயம் – ஏனெனில் மிருகங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்கிறபோதிலும், அவைகள் பலி செலுத்த வந்தவருக்கு பதிலாக மரித்தன. இயேசு கிறிஸ்துவும் தவறு செய்யவில்லை, ஆனால் மனிதகுலத்தின் பாவங்களுக்காக மரித்தார். (1 தீமோத்தேயு 2:6). இயேசு கிறிஸ்து நம் பாவத்தை தம்மேல் எடுத்துக்கொண்டு, நம் இடத்தில் இறந்தார். 2 கொரிந்தியர் 5:21-ல், “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.” இயேசு கிறிஸ்துவின் சிலுவையில் செய்துமுடித்தவைகள் மூலமாக நாம் மன்னிப்பைப் பெற முடியும்.
கூட்டுத்தொகையாக, பலிசெலுத்த வந்த நபர்கள் பாவத்தின் மன்னிப்பை அனுபவிக்கத்தக்கதாக மிருகங்களின் பலிகள் தேவனால் கட்டளையிடப்பட்டன. அந்த மிருகம் அதற்கு மாற்றாக அவர்கள் ஸ்தானத்தில் மரித்தது – அதாவது, அந்தப் மிருகள் பாவிகளினுடைய ஸ்தானத்தில் மரித்தது, ஆனால் மீண்டும் மீண்டும் பலி செலுத்தப்படத்தக்கதாக தற்காலிகமாக மட்டுமே அந்த பலி செலுத்தப்பட வேண்டியிருந்தது. இயேசு கிறிஸ்துவுடன் மிருகங்களின் பலிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இயேசு கிறிஸ்து எல்லாருக்குமாக ஒரே தரம் பலியிடப்பட்ட பலியாக இருக்கிறார் (எபிரெயர் 7:27), அவரே தேவனுக்கும் மனிதகுலத்திற்கும் இடையில் ஒரே ஒரு மத்தியஸ்தராகவும் இருக்கிறார் (1 தீமோத்தேயு 2:5). மிருகங்களின் பலிகள் நம் சார்பில் கிறிஸ்து தியாகத்தை முன்னிலைப்படுத்தியது. மிருக பலியின் மூலமாக பாவங்களை மன்னிப்பதற்கான ஒரே அடிப்படை கிறிஸ்துவாக இருக்கிறார், அவரே நம்முடைய பாவங்களுக்காக தம்மைத் பலியாக தந்து, மிருக பலிகள் முன்நிழலாக விளக்கியிருக்கிற மன்னிப்பை வழங்குகிறவராய் இருக்கிறார்.
English
பழைய ஏற்பாட்டில் தேவன் ஏன் மிருகங்களின் பலிகளை தேவையென்று கேட்டார்?