கேள்வி
அபிஷேக எண்ணெய் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?
பதில்
வேதாகமத்தில் 20 முறை குறிப்பிடப்பட்டுள்ள அபிஷேக எண்ணெய் பழைய ஏற்பாட்டில் பிரதான ஆசாரியர் மற்றும் அவரது சந்ததியினரின் தலையில் ஊற்றவும், ஆசரிப்புக்கூடாரத்தையும் அதன் பொருட்கள் மேலேயும் தெளித்து அவற்றைப் பரிசுத்தபடுத்தவும் கர்த்தருக்கென்று வேறுபிரிக்கவும் பயன்படுத்தப்பட்டது (யாத்திராகமம் 25:6; லேவியராகமம் 8:30; எண்ணாகமம் 4:16). மூன்று முறை இது "பரிசுத்தமான, அபிஷேக எண்ணெய்" என்று அழைக்கப்படுகிறது மற்றும் யூதர்கள் இந்த எண்ணெயை தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அதை மீண்டும் உற்பத்தி செய்வதிலிருந்து கண்டிப்பாக தடைசெய்யப்பட்டனர் (யாத்திராகமம் 30:32-33). அபிஷேக எண்ணெய்க்கான செய்முறை யாத்திராகமம் 30:23-24 இல் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் வெள்ளைப்போளம், கருவாப்பட்டை மற்றும் பிற இயற்கை பொருட்கள் உள்ளன. எண்ணெய் அல்லது பொருட்களுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. மாறாக, எண்ணெயை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்களின் கண்டிப்பானது, இஸ்ரவேலர்களின் கீழ்ப்படிதலின் சோதனையாகவும், தேவனுடைய முழுமையான பரிசுத்தத்தின் நிரூபணமாகவும் இருந்தது.
நான்கு புதிய ஏற்பாட்டுப் பகுதிகள் மட்டுமே எண்ணெயால் அபிஷேகம் செய்யும் நடைமுறையைக் குறிப்பிடுகின்றன, அவற்றில் எதுவுமே அதன் பயன்பாட்டிற்கான விளக்கத்தை அளிக்கவில்லை. அதேவேளையில் எழுதப்பட்ட சந்தர்ப்ப சூழலில் இருந்து நாம் முடிவுகளை எடுக்கலாம். மாற்கு 6:13-ல், சீஷர்கள் நோயுற்றவர்களுக்கு அபிஷேகம் செய்து அவர்களை குணமாக்குகிறார்கள். லூக்கா 7:46 இல், மரியாள் இயேசுவின் பாதங்களை ஒரு ஆராதனையின் செயலாக அபிஷேகம் செய்கிறாள். யாக்கோபு 5:14ல், திருச்சபை மூப்பர்கள் நோயுற்றவர்களைக் குணமாக்க எண்ணெய் பூசுகிறார்கள். எபிரேயர் 1:8-9 இல், தேவன் கிறிஸ்துவிடம் வெற்றியுடன் பரலோகத்திற்குத் திரும்புகையில், "தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது..." என்று கூறுகிறார், மேலும் தேவன் இயேசுவை "ஆனந்த தைலத்தினால்” அபிஷேகம் பண்ணுகிறார்.
இன்று கிறிஸ்தவர்கள் அபிஷேக எண்ணெயைப் பயன்படுத்த வேண்டுமா? இன்று நாம் இதேபோன்ற எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும் என்று கட்டளையிடும் அல்லது பரிந்துரைக்கும் எந்த ஆதாரமும் வேதத்தில் இல்லை, அதேவேளையில் அதைத் தடுக்கவும் எதுவும் இல்லை. புத்தியுள்ள மற்றும் புத்தியில்லாத கன்னிகைளின் உவமையில் (மத்தேயு 25:1-13) வேதாகமத்தில் பரிசுத்த ஆவியின் அடையாளமாக எண்ணெய் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அதுபோல, எல்லா சத்தியத்திற்குள்ளும் நம்மை வழிநடத்தி, அவருடைய கிருபையினாலும் ஆறுதலினாலும் நம்மைத் தொடர்ந்து நடத்துகிற ஆவியின் அபிஷேகம் செய்யும் எண்ணெயின் பிரசன்னம் கிறிஸ்தவர்களுக்கு இருக்கிறது. "நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்" (1 யோவான் 2:20).
English
அபிஷேக எண்ணெய் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?