கேள்வி
உலகில் உள்ள அனைத்து யூத-எதிர்ப்புக்கும் காரணம் என்ன?
பதில்
உலகம் ஏன் யூதர்களை வெறுக்கிறது? யூத-எதிர்ப்பு ஏன் பல்வேறு நாடுகளில் பரவலாக உள்ளது? யூதர்களைக் குறித்த மிகவும் தீமையான காரியம் என்ன? கடந்த 1700 ஆண்டுகளில் பல்வேறு காலங்களில் யூதர்கள் 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாக வரலாறு காட்டுகிறது. வரலாற்றாசிரியர்கள் மற்றும் நிபுணர்கள் குறைந்தது ஆறு வெவ்வேறு காரணங்கள் இருப்பதாக முடிவு செய்துள்ளனர்:
• இனக் கோட்பாடு — யூதர்கள் தாழ்ந்த இனம் என்பதால் அவர்கள் வெறுக்கப்படுகிறார்கள்.
• பொருளாதாரக் கோட்பாடு — யூதர்கள் அதிக செல்வத்தையும் அதிகாரத்தையும் கொண்டிருப்பதால் அவர்கள் வெறுக்கப்படுகிறார்கள்.
• அன்னியர் கோட்பாடு — யூதர்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள் அல்லது வித்தியாசமானவர்கள் என்பதால் அவர்கள் வெறுக்கப்படுகிறார்கள்.
• போக்காடு கோட்பாடு — உலகின் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் யூதர்கள் என்பதால், அவர்கள் வெறுக்கப்படுகிறார்கள்.
• தேவ வதைக் கோட்பாடு — யூதர்கள் இயேசு கிறிஸ்துவைக் கொன்றதால் அவர்கள் வெறுக்கப்படுகிறார்கள்.
• தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் கோட்பாடு — யூதர்கள் "தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்" என்று ஆணவத்துடன் அறிவிக்கிறதினால் அவர்கள் வெறுக்கப்படுகிறார்கள்.
இந்தக் கோட்பாடுகளுக்கு ஏதேனும் பொருள் இருக்கிறதா?
• இனக் கோட்பாட்டைப் பொறுத்தவரை, யூதர்கள் ஒரு இனம் அல்ல என்பதே உண்மை. உலகில் எந்த நிறம், மதம் அல்லது இனம் கொண்ட எவரும் யூதராகலாம்.
• யூதர்கள் செல்வந்தர்கள் என்று குறிப்பிடும் பொருளாதாரக் கோட்பாடு அதிக எடையைக் கொண்டிருக்கவில்லை. 17 ஆம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டு வரை, குறிப்பாக போலந்து மற்றும் ரஷ்யாவில், யூதர்கள் மிகவும் ஏழ்மையில் இருந்தனர் மற்றும் வணிக அல்லது அரசியல் அமைப்புகளில் ஏதேனும் செல்வாக்கு இருந்தது என்றால் அது குறைவாக இருந்ததாகவே வரலாறு காண்பிக்கிறது.
• அன்னியர்களின் கோட்பாட்டைப் பொறுத்தவரை, 18 ஆம் நூற்றாண்டின் போது, யூதர்கள் ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுடன் ஒன்றிணைக்க தீவிரமாக முயன்றனர். ஒருங்கிணைப்பு மூலம் யூத-எதிர்ப்பு மறைந்துவிடும் என்று அவர்கள் நம்பினர். இருப்பினும், யூதர்கள் தங்கள் இனத்தை தாழ்வான மரபணுக்களால் தாக்குவார்கள் என்று கூறியவர்களால் அவர்கள் இன்னும் அதிகமாக வெறுக்கப்பட்டனர். இரண்டாம் உலகப் போருக்கு முன்பு ஜெர்மனியில் இது குறிப்பாக உண்மையாக இருந்தது.
• போக்காடு கோட்பாட்டைப் பொறுத்தவரை, யூதர்கள் எப்போதும் வெறுக்கப்படுகிறார்கள், இது அவர்களை மிகவும் வசதியான இலக்காக ஆக்குகிறது.
• யூதர்கள் உடந்தையாகச் செயல்பட்டாலும், உண்மையில் இயேசுவைக் கொன்றவர்கள் ரோமர்களே என்பதை வேதாகமம் தெளிவுபடுத்துகிறது. சில நூறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் யூதர்கள் இயேசுவைக் கொலை செய்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டது. ரோமர்கள் ஏன் வெறுக்கப்படுவதில்லை என்று ஒருவர் ஆச்சரியப்படுகிறார். இயேசுவே யூதர்களை மன்னித்தார் (லூக்கா 23:34). வத்திக்கான் கூட 1963 இல் இயேசுவின் மரணத்தின் யூதர்களை விடுவித்தது. ஆயினும்கூட, எந்த அறிக்கையும் யூத-எதிர்ப்பை குறைக்கவில்லை.
• "தேவனின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனம்" என்ற அவர்களின் கூற்றைப் பொறுத்தவரை, ஜெர்மனியில் உள்ள யூதர்கள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜெர்மன் கலாச்சாரத்தில் சிறப்பாக இணைவதற்கு அவர்களின் "தெரிந்து-கொள்ளப்பட்ட" நிலையை நிராகரித்தனர். ஆயினும்கூட, அவர்கள் நெருப்பினால் உண்டான பெரும் நாசத்தால் (ஹோலோகாஸ்டால்) பாதிக்கப்பட்டனர். இன்று, சில கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் கூட தேவனுடைய "தெரிந்துகொள்ளப்பட்ட ஜனம்" என்று கூறிக்கொள்கிறார்கள், இருப்பினும், உலகம் அவர்களைப் பொறுத்துக்கொள்கிறது, ஆனால் யூதர்களை இன்னும் வெறுக்கிறது.
உலகம் யூதர்களை ஏன் வெறுக்கிறது என்பதற்கான உண்மையான காரணத்தை இது நமக்குக் கொண்டுவருகிறது. அப்போஸ்தலனாகிய பவுல் நமக்குச் சொல்கிறார், “மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாகவேண்டுமென்று விரும்புவேனே. அவர்கள் இஸ்ரவேலரே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே; பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும்மேலான தேவன்” (ரோமர் 9:3-5). உண்மை என்னவென்றால், உலகம் யூதர்களை வெறுக்கிறது, ஏனென்றால் உலகம் தேவனை வெறுக்கிறது. யூதர்கள் தேவனுடைய முதற்பேறானவர்கள், அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனம் (உபாகமம் 14:2). யூத முற்பிதாக்கள், தீர்க்கதரிசிகள் மற்றும் தேவாலயம் மூலம், தேவன் தமது வார்த்தை, நியாயப்பிரமாணம் மற்றும் ஒழுக்கத்தை பாவ உலகிற்கு கொண்டு வர யூதர்களைப் பயன்படுத்தினார். பாவத்தின் உலகத்தை மீட்பதற்காக அவர் தனது குமாரனான இயேசு கிறிஸ்துவை ஒரு யூத சரீரத்தில் அனுப்பினார். இந்த உலகத்தின் அதிபதியாகிய சாத்தான் (யோவான் 14:30; எபேசியர் 2:2), யூதர்களை வெறுத்ததன் மூலம் மனிதர்களின் மனதை விஷமாக்கினான். யூத தேசத்தின் (ஸ்திரீ) மீதான சாத்தானின் (வலுசர்ப்பத்தின்) வெறுப்பின் உருவகச் சித்தரிப்புக்கு வெளிப்படுத்துதல் 12-ஐப் பார்க்கவும்.
பாபிலோனியர்கள், பெர்சியர்கள், அசீரியர்கள், எகிப்தியர்கள், ஏத்தியர்கள் மற்றும் நாசிக்கள் மூலம் யூதர்களை அழிக்க சாத்தான் முயற்சி செய்தான். ஆனால் அவன் ஒவ்வொரு முறையும் தோல்வியடைந்தான். தேவன் இன்னும் இஸ்ரேலுடன் முடித்துக்கொள்ளவில்லை. ரோமர் 11:26, எல்லா இஸ்ரவேலர்களும் ஒருநாள் இரட்சிக்கப்படுவார்கள் என்றும், இஸ்ரேல் இல்லாவிட்டால் இது நடந்தேறாது என்றும் கூறுகிறது. எனவே, தேவன் தமது இறுதித் திட்டம் நிறைவேறும் வரை, வரலாறு முழுவதும் யூதர்களைப் பாதுகாத்தது போல, எதிர்காலத்திற்காக யூதர்களைப் பாதுகாப்பார். இஸ்ரேலுக்கும் யூத மக்களுக்குமான தேவனுடைய திட்டத்தை எதுவும் தடுக்க முடியாது.
English
உலகில் உள்ள அனைத்து யூத-எதிர்ப்புக்கும் காரணம் என்ன?