கேள்வி
யார் எதிர்க்கிறிஸ்து?
பதில்
எதிர்க்கிறிஸ்து யார் என்பதை அடையாளம் கண்டுகொள்வது பற்றி நிறைய ஊகங்கள் உள்ளன. மிகவும் பிரபலமான இலக்குகளில் சிலர் விளாடிமிர் புதின், பிரின்ஸ் வில்லியம்ஸ், மஹ்மூத் அஹ்மதிநெஜாத் மற்றும் போப் பிரான்சிஸ் I ஆகியோர் அடங்கும். அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில், முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் மிகவும் அடிக்கடி இதில் வேட்பாளர்களாக உள்ளனர். எனவே, எதிர்க்கிறிஸ்து யார், அவரை நாம் எப்படி அடையாளம் கண்டுகொள்வது?
எதிர்க்கிறிஸ்து எங்கிருந்து வருவான் என்பதைப் பற்றி வேதாகமம் திட்டவட்டமாக எதுவும் சொல்லவில்லை. பல வேதாகம அறிஞர்கள், பத்து நாடுகளின் கூட்டணியிலிருந்து அல்லது / அல்லது மறுபிறப்படைந்த ரோம சாம்ராஜ்யத்திலிருந்து எதிர்க்கிறிஸ்து வருவான் என்று ஊகிக்கிறார்கள் (தானியேல் 7:24-25; வெளிப்படுத்துதல் 17:7). மற்றவர்கள் அவன் தன்னை மேசியாவாக கூறிக்கொள்வதால் யூதனாகத்தான் இருக்கவேண்டும் என்று காண்கிறார்கள். எதிர்க்கிறிஸ்து எங்கிருந்து வருவான் அல்லது அவனுடைய என்ன இனத்திலிருந்து வருவான் என்று திட்டவட்டமாக வேதாகமத்தில் குறிப்பிடாதபடியினால், அநேக ஊகங்கள் பலராலும் கூறப்பட்டு வருகின்றன. ஒரு நாள், எதிர்க்கிறிஸ்து வெளிப்படுவான். 2 தெசலோனிக்கேயர் 2:3-4 நாம் எப்படி எதிர்க்கிறிஸ்துவை தெரிந்துகொள்வது என்பதைப்பற்றி சொல்கிறது: “எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.”
எதிர்க்கிறிஸ்து தன்னை வெளிப்படுத்தும்போது உயிருடன் இருக்கும் பெரும்பாலான மக்கள் அவனது அடையாளத்தை மிகவும் ஆச்சரியமாக காண்பார்கள் என்று தெரிகிறது. ஒருவேளை எதிர்க்கிறிஸ்து இன்று உயிருடன் இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். மார்ட்டின் லூதர் தனது காலத்தில் உண்டாயிருந்த போப் தான் எதிர்க்கிறிஸ்து என்று நம்பினார். 1940 களில், அடோல்ப் ஹிட்லர் தான் எதிர்க்கிறிஸ்து என்று பலர் நம்பினர். கடந்த சில நூற்றாண்டுகளில் வாழ்ந்த மற்றோர் எதிர்க்கிறிஸ்து யாரென்று அடையாளம் கண்டுகொள்வதில் இதுபோலவே சமமாக உறுதியான நிலையில் இருந்தனர். இதுவரை அவை அனைத்தும் தவறானவைகளாகவே இருக்கின்றன. நாம் நமது ஊகங்களை பின்னாக வைக்க வேண்டும், மாறாக வேதாகமம் எதிர்க்கிறிஸ்துவைக் குறித்து என்ன சொல்லுகிறது என்பதில் மட்டும் கவனம் செலுத்தவேண்டும். வெளிப்படுத்துதல் 13:5-8 இவ்வாறு கூறுகிறது: “பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; அல்லாமலும், நாற்பத்திரண்டு மாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது. அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையம், பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது. மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கும்படிக்கு அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர்மேலும் ஜாதிகள்மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது. உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்.”
English
யார் எதிர்க்கிறிஸ்து?